ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

நாளை விடிய நாங்கள் இல்லை.




கல்லறைகள்... கருவறையாய்...
மாறுவது... தமிழீழத்தில் மட்டும் தான்.
சில்லறைகள்... சிதறியதால்...
சிவந்தது... தமிழீழம் மட்டும் தான்.
எம் உயிரும்... நினைவும்... அங்கே.
எம் உடலும்...குரலும்... இங்கே.


நாளை விடிய நாங்கள் இல்லை.
ஏழை வீட்டில் விறகு இல்லை.
முள்ளுக் கம்பி எங்கள் பாதை.
மூலை முடக்கு எங்கள் படுக்கை
விதியைச் சொல்லிக் குற்றம் இல்லை.
வ‌லியைப் போக்க‌ ம‌ருந்தும் இல்லை


நாங்க‌ள் செய்த‌ பாவ‌ம் என்ன‌...
நாங்க‌ள் பெற்ற பாலக‌ர் எங்கே...?
இருட்டு அறையில் பருவ மங்கை...
காம வெறியில் காடையர் அங்கே
வாய்க‌ள் க‌ட்டி கைக‌ள் க‌ட்டி
வாழ்க்கை சாகுது உயிருடன்.


வீதி ஓரம் கழுகுக் கூட்டம்.
வேவு பார்க்குது வெள்ளை வ‌ண்டியில்.
த‌லையை மூடி த‌லையை ஆட்டி
எங்க‌ள் உற‌வைப் பிரிக்குது ஒரு நெடியில்.
போன‌ பிள்ளை பிண‌மாய்த் திரும்ப‌முன்
போய் விட்ட‌து தாய் த‌ந்தை உயிர்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

1 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…

வார்த்தைகளில் வர்ணிக்க இயலா நம் ஈழ அவலத்தை எளிய நடையில் உரைத்துள்ளிர். கனத்த இதயத்துடன் தான் வெளியேற முடிகிறது. எவ்வளவு எழுதி விட்டோம்?... எவ்வளவு போரடி விட்டோம்?.... நம் தாயக நிலத்தை, பண்டாரக வன்னியன், ராஜேந்திர சோழன் ஆண்ட மண்ணை கேட்பது ஒரு பாவமா? விதியே இன்னும் என்ன செய்ய போகிறாய் எம் தமிழினத்தை?

Related Posts with Thumbnails