ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அழு... ஓவென்று அழு.

எம் தமிழினமே.....
அழும்போது.
உன்னினம்
கைகொட்டிச் சிரித்தது.


இன்று நீ....
மனமுருகி அழும் போது.....
உன்னினமே
வேடிக்கை பார்க்கின்றது


இறந்த எம் உறவுகள்...
திருப்பி எமக்குக் கிடைக்குமா....?
இழந்த எம் மானம்....
திருப்பி எமக்குக் கிடைக்குமா...?


பதவி பதவி என்று...
காக்கிச் சட்டையிலே
பல பொத்தான்கள்
பல நிறங்களில்.


இனியும் மறந்துவிடாதே....
அத்தனையும் எம் உறவை
அகோரமாய்க் கொன்றதற்கு
கிடைத்த...பரிசுப் பொத்தான்கள்.


அன்று மலர்ந்தது...
உன் சந்ததியின் புன்னகை.
இன்று எம் கண்ணீரில் மிதக்கின்றது.
எம் சந்ததியின் நினைவுகள்.


உன் புத்த இனத்துக்குள்ளே
பிளவுகள் வரவேண்டும்.
அந்த நேரம் புரியும்...
எம் இதயத்தின் வலி.


தமிழருக்காய் திறக்கப்பட்ட...
சிறைக்கதவுகள்.
இன்று உன் கணவருக்காய்க்
காத்திருக்கின்றது.


நீ... மட்டுமல்ல பெண்ணே...
தமிழனுக்கு எவன் எவன்
தீங்கி விளைவித்தானோ
அவன் அவனுக்கெல்லாம்....
இப்படித்தான் கடைசியில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா

5 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது உங்கள் கவி வரிகள்

நிலாமதி சொன்னது…

இன்றைய நாட்டின் நிலையை கூறும்பதிவு........கூட சேர்ந்த குற்றத்துக்காக அழுகிறார் ......தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் ஆனால் உடனுக்குடனேயே காட்ட் படுகிறது இன்று.......தமிழனின் கண்ணீர் சொல்லும் கதைகள் .சோக கதைகள் எத்தனை

ஈழமகள் சொன்னது…

நன்றி யாதவன் அண்ணா,
நிலாமதி அக்கா.

Pinnai Ilavazhuthi சொன்னது…

//இன்று நீ....
மனமுருகி அழும் போது.....
உன்னினமே
வேடிக்கை பார்க்கின்றது//
நிதர்சனமான உண்மை. எல்லாரின் மன வருத்தங்களையும் ஒரு கவிதையில் சொல்லி உள்ளீர்கள்.
சில வாரங்களாக சொந்த அலுவல் காரணமாக தொடர்ந்து இடுகை இட முடியவில்லை

ஈழமகள் சொன்னது…

இளவழுதி வீரராசன் அண்ணா...
கவிதையில் கூட...
கதறமுடியவில்லை...
காரணம்....
நான் பட்ட துன்பதுயரம் அல்ல...
தமிழராகிய...
நாம் பட்ட துன்பதுயரம் என்றதால்.
(உங்கள் வருகைக்கு என் கவி
தலைவணங்குகின்றது அண்ணா.)

Related Posts with Thumbnails