ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கைகொடுத்து உதவும் கனடா...!

பிறந்து ஒரு இடம்.
வளர்ந்தது பல இடம்.
படித்தது ஒரு சில இடம்
பசியால் துடித்தது பல இடம்.
பயத்தால் பதுங்கியது பல பல இடம்.


வாழ்க்கையை இழந்தோம்
வருமானத்தை இழந்தோம்.
மண்ணின் காதலை இழந்தோம்
கன்னியின் கற்பை இழந்தோம்.


சொந்த உறவுகளை இழந்தோம்
சொத்துப் பத்துக்களை இழந்தோம்.
அவயவங்களை இழந்தோம்
அநாதையாய்.... அகதியாய் அலைந்தோம்.


சிங்கள அரசின்...
பார்வையில் சிக்கினோம்
மின் கம்பி முகாமிற்குள்...
வதை பட்டோம்.


தூங்கிய நாட்கள் அரிது.
துயரத்தில் ஆழ்ந்த நாட்கள் அதிகம்.
விசாரனை இல்லா நாட்கள் அரிது.
விடிந்தால் கானாமல் போகும் ஆட்கள் அதிகம்.


ஆறடிக் குழி...
நமக்குத் தேவையில்லை....
ஆறும்... குளமும்...
எம்மைத் தாங்கும் நிலை


இறக்கும் போது...
சுகந்திரம் இல்லை
இறந்த பின் கூட...
எம் நினைவுகள் வெளிவருவதில்லை.


கை கட்டி கால் கட்டி...
கண் கட்டி வாய் கட்டி.
அகோரமான சாவல்லவா...
தமிழராகிய நமக்கு.


கவலைகளைத் தாண்டி வருகின்றோம்...
கடல் கடந்து கனடா.
கனவுகளைச் சுமந்து வருகின்றோம்...
கைகொடுத்து உதவு கனடா.


உயிரைக் கையில் ஏந்திவருகின்றோம்
எம் உணர்வை மதித்து.
உயிர்ப் பிச்சை போட்டால்...
நாம் உயிரோடு வாழ்வோம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

3 கருத்துகள்:

யாதவன் சொன்னது…

விடுதலைப்புலிகள் வருகிறார்களா என்பதை பார்பதிலேயே கனடா கவனமாய் இருக்கிறது தமிழ் மக்கள் பற்றி கதைக்கவே இல்லை கனடா
மேலைத்தேய சிந்தனைகள் எபவுமே சுயநலம் தான்

ஈழமகள் சொன்னது…

யாதவன் அண்ணா......
அவர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றார்கள்.....
வந்திருப்பவர்கள் அகதிகள் தான் என்பதை...
நிருபித்து விட்டார்கள்.....
சில ஆங்கிலப் பத்திரிகைகள்....
புலிகளுக்கு எதிராய்...
எழுதிக்கொண்டு வந்தவர்கள் கூட...
வந்திருக்கும் அகதிகள் கடிதத்தை
வாசித்து விட்டு மனமுடைந்து...
உண்மை நிலையை எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
காலம் நல்லதாய் தான்...
தமிழருக்கு அமையப் போகின்றது.
உங்கள் கருத்துக்கும்.....
வருகைக்கும் நன்றி அண்ணா.

இளங்குமரன் சொன்னது…

ஈழமகளுக்கு வணக்கம். கவிதைகள் உணர்ச்சி பூர்வமாக உள்ளன. வாழ்த்துகள்.

எழுத்துப்பிழைகள் உள்ளன. சில நேரங்களில் எழுத்துப்பிழை கருத்தையே பிழையாக்கிவிடும். தொடர்ந்து எழுதவும். வாழ்த்துகள்.

இளங்குமரன்.

Related Posts with Thumbnails