ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 3 ஜூலை, 2015

நாளை யார் முகவரியோ...?

அன்று கிரிஷாந்தி... தர்சினி...
இன்று வித்தியா...
நாளை யார் முகவரியோ...?
நாமறியோம்....!

தமிழராய்ப் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா...?
தமிழ் மண்ணில் வளர்ந்தது குற்றமா...?
தன்மானம்  எம்மில் வீசியது குற்றமா...?
தலை சிறக்கப் படித்தது குற்றமா...?
தலை நிமிர்ந்து வாழ்வது  குற்றமா...?

இலங்கை அரசே...!
சற்றுத் திரும்பிப்பார்...
சிந்தித்துப்பார்....!
அன்று பள்ளியில்...
ஆரம்பித்தது முதல் போராட்டம்.
இன்று பள்ளியில்....
ஆரம்பிக்க வேண்டுமா....
அதே போராட்டம்....?

சிட்டாய்ப் பறக்கும் பருவத்தில்....
சிந்தனையை சேமிக்கும் வயதில்....
சிறகுடைத்து... சிதைத்து விட்டானே...!
சீர்கெட்ட பாதகன் யாரவன்...???

நீதிக்கும் முன் நிறுத்து...
நியாயத்தின் பாதையில்...
இழுத்துச்செல்...!
இனி ஒரு இழப்பை...
தமிழினம் சந்திக்காமல்....
இருக்க வேண்டுமென்றால்...
கொடுத்து விடு
குற்றவாளிக்கு மரணதண்டனை.

காம வெறியாட்டக்காரர்களே....!
காயப்படுத்தாதீர்கள் தமிழினத்தை.
தட்டிக் கேட்க  யாருமில்லையென...
தப்புக்கணக்குப் போடாதீர்கள்.

நாட்டுக்கு நாடு...
தமிழரின் வளர்ச்சி...
சாதனையாய்  திகழ்கின்றது.
வேதனையில் ஈழ சிறார்களை...
வீழ்த்த நினைத்தால் ...
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை போல்....
எம் யுத்தம் ஆரம்பமாகும்.


ஈழமகள் உங்கள் அபிஷேகா

சனி, 13 ஏப்ரல், 2013

பெண்ணே எழு நீ இடியாக...பெண்ணே எழு நீ இடியாக...
உன் கனவு கனியும் நியமாக...
பூவே எழு நீ புலியாக...
உன் வீரம் ஏட்டில் பதிவாக...!

சிறைகள் உனக்குப் புதிரல்ல....
வதைகள் உனக்குப்  புதிதல்ல...
தடைகள் உனக்கு பொருட்டல்ல...
அதை வெல்லும் வலிமை
அடி பெண்ணே உனக்கல்லோ....!

பெண்ணே எழு நீ புயலாக....
உன் மௌனம் பேசும் இடியாக....
கண்ணே எழு நீ கதிராக...
உன் அடிமை அழியும் நியமாக...!

சதிகள் உனக்கு தொடரல்ல...
விதிகள் உனக்கு விடையல்ல....
மானம் காக்கும் பெண்ணே....
மடியும் பகைவர் கூட்டம்....
உன் கண் முன்னே.....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 18 டிசம்பர், 2010

கார்த்திகைப் பூக்கள்....!


கார்த்திகை மாதம்...
கார்த்திகைப் பூக்கள்....
கைகளில் ஏந்தி...
மா... வீரர்களின்
கல்லறை செல்வோம்.


கண்களிலே கண்ணீர்...
கரைகிறது.
தாயின் கருவறையும்....
துடிக்கிறது.


பெண்களிலே வீரம்...
சுரக்கிறது.
தமிழீழத்திலே வீரம்
விளைகிறது.


மறவர்படையாய்....நாம்
மாறப்போகிறோம்.
விடுதலைத் தாகத்திலே...
வெற்றிக் களமாடப்போகிறோம்.


இனி வரும் வம்சம்...
கல்லறை கண்ட
காவியர்கள் தந்த வழிதனை...
கலக்கமில்லாமல் காத்திடவேண்டும்.
பாதுகாத்திட வேண்டும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கைகொடுத்து உதவும் கனடா...!

பிறந்து ஒரு இடம்.
வளர்ந்தது பல இடம்.
படித்தது ஒரு சில இடம்
பசியால் துடித்தது பல இடம்.
பயத்தால் பதுங்கியது பல பல இடம்.


வாழ்க்கையை இழந்தோம்
வருமானத்தை இழந்தோம்.
மண்ணின் காதலை இழந்தோம்
கன்னியின் கற்பை இழந்தோம்.


சொந்த உறவுகளை இழந்தோம்
சொத்துப் பத்துக்களை இழந்தோம்.
அவயவங்களை இழந்தோம்
அநாதையாய்.... அகதியாய் அலைந்தோம்.


சிங்கள அரசின்...
பார்வையில் சிக்கினோம்
மின் கம்பி முகாமிற்குள்...
வதை பட்டோம்.


தூங்கிய நாட்கள் அரிது.
துயரத்தில் ஆழ்ந்த நாட்கள் அதிகம்.
விசாரனை இல்லா நாட்கள் அரிது.
விடிந்தால் கானாமல் போகும் ஆட்கள் அதிகம்.


ஆறடிக் குழி...
நமக்குத் தேவையில்லை....
ஆறும்... குளமும்...
எம்மைத் தாங்கும் நிலை


இறக்கும் போது...
சுகந்திரம் இல்லை
இறந்த பின் கூட...
எம் நினைவுகள் வெளிவருவதில்லை.


கை கட்டி கால் கட்டி...
கண் கட்டி வாய் கட்டி.
அகோரமான சாவல்லவா...
தமிழராகிய நமக்கு.


கவலைகளைத் தாண்டி வருகின்றோம்...
கடல் கடந்து கனடா.
கனவுகளைச் சுமந்து வருகின்றோம்...
கைகொடுத்து உதவு கனடா.


உயிரைக் கையில் ஏந்திவருகின்றோம்
எம் உணர்வை மதித்து.
உயிர்ப் பிச்சை போட்டால்...
நாம் உயிரோடு வாழ்வோம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

கனத்த நாள் கருப்பு யூலை...!

கருப்பு யூலை....அன்று
கனத்த நாள்.
கருப்பு யூலை....இன்று
கண்ணீர் கசிந்த நாள்.
கருப்பு யூலை...என்றும்
கரிய நாள்...!

நினைவுகள் எம்மோடு...
நிலைத்து நிற்கின்றது.
எம் உறவுகள்....
இவ்வுலகை விட்டு - 27
ஆண்டுகள் ஆகின்றது.
தாங்குமா... எம்மிதயம்
தூங்குமா.... எம்மீழம்.!

சிறி என்ற சின்னத்தை
தாரிலே கொதிக்கவைத்து
மார்பிலே அச்சிட்டதை...
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பூவைகள் நாம்.!

காடையர் கஞ்சா...அபின்..
குடித்துவிட்டு.
காமத்தின் வேகத்தை...
மிருகத்தனமாய்க் கையாண்டதை
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பாவைகள் நாம்.!

திருகோணமலை நகரில்...
செல்வநாயகபுரத்தில்...
ரயர்களுக்கு மத்தியில்...
செட்டியார் என்ற வயதானவரை
உயிருடன் கொழுத்தியதை...
மறக்கத் தான் முடியுமா
ஈழத்துத் தமிழர் நாம்.!

கொழும்பு மா நகரில்...
கொழுத்தும் வெய்யிலில்...
வேலை விட்டு வந்தவர்களை
வீடு புகுந்து கண்டம் துண்டமாய்...
வெட்டிச் சரித்ததை
மறக்கத் தான் முடியுமா...
உலகத் தமிழர் நாம்.!

வெலிக்கடைச் சிறைக்குள்...
சிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்
சித்திரவதை என்ற போர்வையில்
சிந்திய இரத்தைக்கரை
வதைச்சுவரில் இன்றும்..
காவியமாய்த் திகழ்கின்றதை...
மறக்கத் தாம் முடியுமா...
ஒவ்வொரு மானத்தமிழனும்.!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 24 ஜூலை, 2010

இது எங்கள்...தேசமா...?

இது எங்கள்...
தேசமா...?
இது எங்கள்...
வாசமா...?


இளம் தென்னங்...
கீற்றுக்கள்.
இனி உரத்தைக்...
காணுமா...?


கருவில்
இருந்த போது....
கனிந்த
கனவுகள்.


கருவறை விட்டு...
வெளிவரும் போது.
கலங்கிப் போனது...
தாயின் நினைவுகள்.


இயற்கை அழிவில் என்...
இதயம் போனது.
செயற்கை அழிவில் என்...
சேயும் போனது.


அடர்ந்த காடு
எமது கூடு.
அலைந்த எம்மை
அழைத்த வீடு.


பசியைப் தீர்க்கப்
படுத்து உறங்கு.
பலனை அடைய
குரங்கை நாடு.


வலியைப் போக்க
அமைதி தேடு.
வசந்தம் வீச
வாசல் தேடு.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வெள்ளி, 23 ஜூலை, 2010

vidai kodu angal nadee... விடை கொடு எங்கள் நாடே... :(

செவ்வாய், 20 ஜூலை, 2010

அனுவின் ஓராண்டு நினைவலைகள்.....!

ஓராண்டு காலம் கடந்ததடா...
உன் நினைவுகள்
எம் நெஞ்சில் பதிந்ததடா...!


காலதேவன் கனவு பழித்ததடா...
உன் வரவு காணாது
எம் விழி துடித்ததடா...!


தலைமகனாய்...
தடம் பதித்தாய்.
தங்கமகனாய்...
துளிர் விரித்தாய்.


தாய் தந்தை - எம்
உறவைத் தரிசித்தாய்.
உன் உடன்பிறப்பை...
அன்பால் அரவணைத்தாய்.


அனு என்ற உன் நாமம்
அணையாது ஏழேழு ஜென்மம்.
அமைதியாய் வாழ்ந்த எம் இல்லம்
அனுக்குட்டி நீ.... இல்லாது ஏதடா இன்பம்.


அன்புத் தெய்வமே...
அந்தி வானம் கூட
உன் இழப்பைத் தாங்காது
கண்ணீர்த் துளிகளாய்ப் பொழிகிறது.


பத்துத் திங்கள் - நீ
பத்திரமாய்க் கருவறையில்.
பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தது
எம் இதயக் கனவுகள்.


பத்தொன்பது வயதில் - உன்னைப்
பார்த்தோமே கல்லறையில்.
பாதி உயிர் உன்னோடு போனது
மீதி உயிர் நடைப் பிணம் ஆனது.


அன்னை என் பிறந்த தினமன்று
கட்டி அணைத்துச் சென்ற நீ...
தந்த பரிசு உன் உயிரோ...
தங்கத் தலைமகனே...!


இனிவரும் - என்
பிறந்த தினம் எல்லாம்
இடிந்து நொருங்கப் போகின்றது
என் இதயம் அல்லவா....?


இளமையில் - பல
கனவுகள் சுமந்திருப்பாய்.
இன்பமாய் - அதில்
நனைந்திருப்பாய்.


துன்பமாய்ப் போகும் - என
எமக்குத் தோன்றவில்லையே.
துன்னலர் உன்னைத் தாக்கும் போது
துப்புக்கூட யாரும் தரவில்லையே.


பிரமன் எழுதிய விதியா...!
பழகிய நண்பர் செய்த சதியா...!
விழிகளில் பதிந்த உன் நினைவுகள்
விலகாது....என்றும் அணையாது.


எம் குலத்தின் குலவிளக்கே...
உன் ஆத்மா சாந்தியடைய
உனக்காய்த் தினமும் உருகி வேண்டும்
உன் உறவுகள் உடன் பிறப்புக்கள்...!!!


நன்றி
ரஞ்சிதா இந்திரகுமார்
------------------------------------------------
(ஈழமகள் உங்கள் அபிசேகா.)

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தாய் மடியில்...........

தாய் மடியில்....
தலை சாயும்.
தலைமகனே
நீ.... எங்கே...?


கண்களிலே....
நீர் சுமக்கும்.
தாய் இங்கே
பார்.... மகனே....!


உறவிருந்தும்....
மகிழ்வில்லை.
நினைவிருந்தும்
உன்... உயிரில்லை....!


உணவிருந்தும்....
ருசி இல்லை.
உன் நினைவால்
பசி.... இல்லை....!


பார்க்கும் இடமெல்லாம்....
உன் உருவம்.
நிழலாய் தோன்றி
மறைகின்றதே....!


யார் செய்த பாவம்....
என் வீட்டில் சோகம்.
நீ.... இல்லா வாசம்
நிகர்.... இல்லை சொந்தம்....!


உலகம் போற்றும்....
பிரமனே.
என் சேயைப்
பிரிக்க.... வந்தாயோ....!


பால் கொடுத்த....
முலைகள் இரண்டும்.
பதறித் துடிக்கிறது
நீ.... பாராயோ....!


கருவறை உனக்காய்....
காத்திருக்கும் - நான்
கல்லறை போகமுன்.
வா..... மகனே.....வா....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 27 ஜூன், 2010

அச்சம் இல்லை எமக்கு... இனி அதிர்ச்சி உண்டு சிங்கள அரசே...!

பணத்தையும்.. புகழையும்....
சேர்ப்பதற்காய்....
இரவு பகலாய்ப் தமிழினத்தைக்
கொன்று குவித்தார்கள்
பல அரக்கர் படைகள்.


மண்ணையும்... மானத்தையும்
காப்பாற்றுவதற்காய்....
இரவு பகலாய் கண்விழித்து...
களமிறங்கிப் போராடினார்கள்
எம் மறவர் படைகள்.


அன்று நடந்தது என்ன....?
பல நாட்டு உதவியுடன்
விளையும் எம் மண்ணில்....
எம் குருதியால் சிவந்தமண்ணாய்ப்
போனது தான்....
நாம் கண்ட நினைவலைகளா...?


இல்லை... இல்லை....
நாம் ஏமாறவில்லை.
அன்று நடந்தது எமக்கு ஒரு
படிப்பினை தான்
இன்று நடக்கப் போவது....
பல நாட்டிற்குக் கொடுக்கும்
அர்ச்சனை தான்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 19 ஜூன், 2010

கலைஞரை மன்னிக்காதே....!

இரு நா...
படைத்த.
கலைஞரை...
மன்னிக்காதே....!


தமிழினம் இரத்தக்கடலில்
மீழ்கிய போது....!
மூன்று மணி நேர
உண்ணா நோன்பு யாருக்காய்.....?


பத்திரிகைக்காரனுக்காய்...
தொலைக்காட்டி பார்ப்பவருக்காய்...
உன் உடலில் ஏற்றப்பட்ட
கொழுப்பைக் குறைப்பதற்காய்...!


இதுவும் ஒரு
நாடகமேடைதான்...
அதை மானமுள்ள ஈழத்தமிழர்...
நாம் மறவோம்...!


உன் குலத்திற்கு....
உரிமை சேர்க்கும் போது.
சோனியாவின் காலையும் பிடிப்பாய்.
செறி நாய்களின் வாலையும் பிடிப்பாய்...!


இது தான்
அரசியலின் தந்திரமா....?
உன் அரியனையின்
இரகசிய மந்திரமா...?


மானம் கெட்ட
மனிதயினத்துடன் வளர்ந்தவனே...!
மாசு அறியாத
மானிடரைக் கொன்றவனே...!


கலாச்சாரத்தை பற்றி...
நீ... பேசாதே...!
செந்தமிழைப் பற்றி...
நீ... உரையாதே...!


இரண்டுற்கும் அருகதை...
அற்றவன் நீ...!
உனக்கு யார் தந்தது
கலைஞர் பட்டமடா...!


ஓ.... பணத்தைக்...
கொடுத்து வாங்கினாயா....?
தமிழரின் பிணத்தை...
புதைத்து வாங்கினாயா...?


ஒரு வீட்டில்...
இழவு விழுந்தால்.
மறுவீட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
இது தான் தமிழீழம்...!


ஒரு நாட்டில்...
இழவு விழுந்தால்.
அயல் நாட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
அது தான் அன்றைய பாரத தேசம்...!


இன்று ஈழத்தில் இழவு
விழுந்துகொண்டு இருக்கின்றது.
அயல் நாடுகள் அமைதியாய்
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது...!


இது தான்...
உலக நியதியா....?
அயல் நாட்டின்
இரகசியக் கோரிக்கையா....?


உலகத்தமிழ்த்...
தலைவன் என்று.
சொல்லும் அருகதை...
உனக்கில்லை கலைஞரே...!


உலகத் தமிழரைக்...
கொன்று குவிக்க.
உடந்தையாய் இருந்தேன் என்று...
உன் வாயால் சொல்லு கலைஞரே....!


நீ பிறந்த போது...
உவகையடைந்த உன் அன்னை.
உயிரோடு இன்று இருந்திருந்தால்...
உன் சதிகளைப் பார்த்து...!


புன்னகையில்...
பூரிப்படைந்திருப்பாளா...?
வேதனையில்...
வெட்கப்பட்டிருப்பாளா...?


அன்றும் இன்றும் என்றும்....
எமக்கென்று ஒரு தலைவன்.
அவனே உலகத்...
தமிழருக்கும் தலைவன்...!


இதயத்தில் ஒரிடம்....
இவனுக்காய்.
ஒதுக்கப்பட்டு....
பல ஆண்டுகள் ஆகின்றது.


இவனின்...
செம்மையான ஆட்சியினை.
உலகமே...
ஒரு நாள் போற்றும்...!


மறவர்...
படை என்றால்.
மானமும்... வீரமும்...
சேர்ந்த படையாகும்...!


நல்லிரவில்...
நானல்ல நீயல்ல.
பே... கூட பயணம் செய்யும்....
தமிழீழத்தின் வீதிகளால்...!


இனியாவது நம்ம கரிகாலனை
மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்
அயல் நாட்டு...
அன்புத்தமிழ் உறவுகளே....!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 8 மே, 2010

வாழ்க்கையில் ஏதடா நின்மதி...!

எம்மிடம் விட்டு இடம் வந்ததால்.
வாழ்க்கை என்ன இனிக்குமா...?
வாழ்ந்து தான் ஆகவேண்டும்.
எம் உறவுகளுக்காயல்லவா....!


நீதி கேட்டுக்...
கிடைக்கவில்லை.
நிதி சொஞ்சம் அனுப்பினால்.
நிறைந்துவிடும் பசியல்லவா....!


ருசி பார்த்துப்...
புசித்த நா.
பசிவரும் போது
மலம் கூடத் தின்றதல்லவா...!


குறிபார்த்த வம்சம்...
கூட்டி அள்ளியது
எம்மவர்....
எலும்பித் துண்டல்லவா....!


குறிதவறக் காரணம்...
கூடயிருந்து குழி பறித்த
கூலிப்படைக்...
கைக்கூலிகள் அல்லவா....!


கருணா ஒரு புறம்...
கருணாநிதி மறு புறம்.
வாழ்க்கையில் ஏதடா நின்மதி.
விளங்குமா உந்தன் சந்ததி....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!


ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!


நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!


கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!


நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 25 மார்ச், 2010

பெண்புலி போராளிகள்....

உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.


ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.


மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.


கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?


பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 20 மார்ச், 2010

அன்னமே...

அன்னமே...
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே.


செல்லமே...
உன் மழலை
தென்றலாய் என்
நெஞ்சிலே.


வானமே...
உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்
மூடிக்கொள்.


முத்து முத்தாய்
முத்தம் - நீ...
முகத்தில் தந்தாய்
நித்தம்.


தித்திக்க தித்திக்க...
நீ... பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.


சொன்ன சொல்லை...
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட
கவி பாடும்.


பஞ்சு போன்ற பாதத்தில்...
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்.


தங்க நிலவே...
இன்று போல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails