ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 25 ஜூலை, 2010

கனத்த நாள் கருப்பு யூலை...!

கருப்பு யூலை....அன்று
கனத்த நாள்.
கருப்பு யூலை....இன்று
கண்ணீர் கசிந்த நாள்.
கருப்பு யூலை...என்றும்
கரிய நாள்...!

நினைவுகள் எம்மோடு...
நிலைத்து நிற்கின்றது.
எம் உறவுகள்....
இவ்வுலகை விட்டு - 27
ஆண்டுகள் ஆகின்றது.
தாங்குமா... எம்மிதயம்
தூங்குமா.... எம்மீழம்.!

சிறி என்ற சின்னத்தை
தாரிலே கொதிக்கவைத்து
மார்பிலே அச்சிட்டதை...
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பூவைகள் நாம்.!

காடையர் கஞ்சா...அபின்..
குடித்துவிட்டு.
காமத்தின் வேகத்தை...
மிருகத்தனமாய்க் கையாண்டதை
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பாவைகள் நாம்.!

திருகோணமலை நகரில்...
செல்வநாயகபுரத்தில்...
ரயர்களுக்கு மத்தியில்...
செட்டியார் என்ற வயதானவரை
உயிருடன் கொழுத்தியதை...
மறக்கத் தான் முடியுமா
ஈழத்துத் தமிழர் நாம்.!

கொழும்பு மா நகரில்...
கொழுத்தும் வெய்யிலில்...
வேலை விட்டு வந்தவர்களை
வீடு புகுந்து கண்டம் துண்டமாய்...
வெட்டிச் சரித்ததை
மறக்கத் தான் முடியுமா...
உலகத் தமிழர் நாம்.!

வெலிக்கடைச் சிறைக்குள்...
சிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்
சித்திரவதை என்ற போர்வையில்
சிந்திய இரத்தைக்கரை
வதைச்சுவரில் இன்றும்..
காவியமாய்த் திகழ்கின்றதை...
மறக்கத் தாம் முடியுமா...
ஒவ்வொரு மானத்தமிழனும்.!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 24 ஜூலை, 2010

இது எங்கள்...தேசமா...?

இது எங்கள்...
தேசமா...?
இது எங்கள்...
வாசமா...?


இளம் தென்னங்...
கீற்றுக்கள்.
இனி உரத்தைக்...
காணுமா...?


கருவில்
இருந்த போது....
கனிந்த
கனவுகள்.


கருவறை விட்டு...
வெளிவரும் போது.
கலங்கிப் போனது...
தாயின் நினைவுகள்.


இயற்கை அழிவில் என்...
இதயம் போனது.
செயற்கை அழிவில் என்...
சேயும் போனது.


அடர்ந்த காடு
எமது கூடு.
அலைந்த எம்மை
அழைத்த வீடு.


பசியைப் தீர்க்கப்
படுத்து உறங்கு.
பலனை அடைய
குரங்கை நாடு.


வலியைப் போக்க
அமைதி தேடு.
வசந்தம் வீச
வாசல் தேடு.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வெள்ளி, 23 ஜூலை, 2010

vidai kodu angal nadee... விடை கொடு எங்கள் நாடே... :(

செவ்வாய், 20 ஜூலை, 2010

அனுவின் ஓராண்டு நினைவலைகள்.....!

ஓராண்டு காலம் கடந்ததடா...
உன் நினைவுகள்
எம் நெஞ்சில் பதிந்ததடா...!


காலதேவன் கனவு பழித்ததடா...
உன் வரவு காணாது
எம் விழி துடித்ததடா...!


தலைமகனாய்...
தடம் பதித்தாய்.
தங்கமகனாய்...
துளிர் விரித்தாய்.


தாய் தந்தை - எம்
உறவைத் தரிசித்தாய்.
உன் உடன்பிறப்பை...
அன்பால் அரவணைத்தாய்.


அனு என்ற உன் நாமம்
அணையாது ஏழேழு ஜென்மம்.
அமைதியாய் வாழ்ந்த எம் இல்லம்
அனுக்குட்டி நீ.... இல்லாது ஏதடா இன்பம்.


அன்புத் தெய்வமே...
அந்தி வானம் கூட
உன் இழப்பைத் தாங்காது
கண்ணீர்த் துளிகளாய்ப் பொழிகிறது.


பத்துத் திங்கள் - நீ
பத்திரமாய்க் கருவறையில்.
பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தது
எம் இதயக் கனவுகள்.


பத்தொன்பது வயதில் - உன்னைப்
பார்த்தோமே கல்லறையில்.
பாதி உயிர் உன்னோடு போனது
மீதி உயிர் நடைப் பிணம் ஆனது.


அன்னை என் பிறந்த தினமன்று
கட்டி அணைத்துச் சென்ற நீ...
தந்த பரிசு உன் உயிரோ...
தங்கத் தலைமகனே...!


இனிவரும் - என்
பிறந்த தினம் எல்லாம்
இடிந்து நொருங்கப் போகின்றது
என் இதயம் அல்லவா....?


இளமையில் - பல
கனவுகள் சுமந்திருப்பாய்.
இன்பமாய் - அதில்
நனைந்திருப்பாய்.


துன்பமாய்ப் போகும் - என
எமக்குத் தோன்றவில்லையே.
துன்னலர் உன்னைத் தாக்கும் போது
துப்புக்கூட யாரும் தரவில்லையே.


பிரமன் எழுதிய விதியா...!
பழகிய நண்பர் செய்த சதியா...!
விழிகளில் பதிந்த உன் நினைவுகள்
விலகாது....என்றும் அணையாது.


எம் குலத்தின் குலவிளக்கே...
உன் ஆத்மா சாந்தியடைய
உனக்காய்த் தினமும் உருகி வேண்டும்
உன் உறவுகள் உடன் பிறப்புக்கள்...!!!


நன்றி
ரஞ்சிதா இந்திரகுமார்
------------------------------------------------
(ஈழமகள் உங்கள் அபிசேகா.)

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தாய் மடியில்...........

தாய் மடியில்....
தலை சாயும்.
தலைமகனே
நீ.... எங்கே...?


கண்களிலே....
நீர் சுமக்கும்.
தாய் இங்கே
பார்.... மகனே....!


உறவிருந்தும்....
மகிழ்வில்லை.
நினைவிருந்தும்
உன்... உயிரில்லை....!


உணவிருந்தும்....
ருசி இல்லை.
உன் நினைவால்
பசி.... இல்லை....!


பார்க்கும் இடமெல்லாம்....
உன் உருவம்.
நிழலாய் தோன்றி
மறைகின்றதே....!


யார் செய்த பாவம்....
என் வீட்டில் சோகம்.
நீ.... இல்லா வாசம்
நிகர்.... இல்லை சொந்தம்....!


உலகம் போற்றும்....
பிரமனே.
என் சேயைப்
பிரிக்க.... வந்தாயோ....!


பால் கொடுத்த....
முலைகள் இரண்டும்.
பதறித் துடிக்கிறது
நீ.... பாராயோ....!


கருவறை உனக்காய்....
காத்திருக்கும் - நான்
கல்லறை போகமுன்.
வா..... மகனே.....வா....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.





Related Posts with Thumbnails