ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 3 ஜூலை, 2015

நாளை யார் முகவரியோ...?

அன்று கிரிஷாந்தி... தர்சினி...
இன்று வித்தியா...
நாளை யார் முகவரியோ...?
நாமறியோம்....!

தமிழராய்ப் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா...?
தமிழ் மண்ணில் வளர்ந்தது குற்றமா...?
தன்மானம்  எம்மில் வீசியது குற்றமா...?
தலை சிறக்கப் படித்தது குற்றமா...?
தலை நிமிர்ந்து வாழ்வது  குற்றமா...?

இலங்கை அரசே...!
சற்றுத் திரும்பிப்பார்...
சிந்தித்துப்பார்....!
அன்று பள்ளியில்...
ஆரம்பித்தது முதல் போராட்டம்.
இன்று பள்ளியில்....
ஆரம்பிக்க வேண்டுமா....
அதே போராட்டம்....?

சிட்டாய்ப் பறக்கும் பருவத்தில்....
சிந்தனையை சேமிக்கும் வயதில்....
சிறகுடைத்து... சிதைத்து விட்டானே...!
சீர்கெட்ட பாதகன் யாரவன்...???

நீதிக்கும் முன் நிறுத்து...
நியாயத்தின் பாதையில்...
இழுத்துச்செல்...!
இனி ஒரு இழப்பை...
தமிழினம் சந்திக்காமல்....
இருக்க வேண்டுமென்றால்...
கொடுத்து விடு
குற்றவாளிக்கு மரணதண்டனை.

காம வெறியாட்டக்காரர்களே....!
காயப்படுத்தாதீர்கள் தமிழினத்தை.
தட்டிக் கேட்க  யாருமில்லையென...
தப்புக்கணக்குப் போடாதீர்கள்.

நாட்டுக்கு நாடு...
தமிழரின் வளர்ச்சி...
சாதனையாய்  திகழ்கின்றது.
வேதனையில் ஈழ சிறார்களை...
வீழ்த்த நினைத்தால் ...
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை போல்....
எம் யுத்தம் ஆரம்பமாகும்.


ஈழமகள் உங்கள் அபிஷேகா

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails