அன்னையே..... அன்னையே......
அன்பு உள்ளத்தென்றலே.
என்னையே..... என்னையே......
அணைக்கத் துடிக்கும் கரங்களே.
உன்னையே...... உன்னையே......
என் அன்னையாய் ஏற்றிட
ஏழு ஜென்மம் போதுமா...? எனக்கு
எழு ஜென்மம் போதுமா...?
ஈரைந்து மாதம் கருவறையில் களித்தேன்.
ஈரேழு மாதம் தாய் முளையில் வளர்ந்தேன்.
தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும்...
தொற்று நோய்கள் என்னில் படர்ந்தாலும்...
விட்டு விலகாத தங்கத்தாய்
நீ........ மட்டும் தான் அம்மா.
முகவரியில் என் அகம் அறிய..
உலகிற்கு எடுத்துக்காட்டியவள்
நீ..... தானே நீ..... தானே அம்மா..!!
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
உன் பாசவலையில்......
சிக்கி விட்டேன் அம்மா.
எட்டி நடை நடந்த போதும்
தட்டு தடுமாறி விழுந்த போதும்
அன்னை குரல் மட்டுமே
என் காதில் கனிந்தம்மா.
அன்னை மடித்தூக்கம்
பஞ்சு மெத்தை போலே
கைகள் இரண்டும் தலைவருட
இனிய கனவில் நான் மிதந்தேன்.
தென்றல் வந்து வீசிட...
பூவின் மணம் நாடிவர
கண்டேன் என் அன்னையை..!!
சின்னஞ் சிறு கைகளால்
சிறு மணல் வீடு கட்டினேன்.
சிற்றலைகள் வந்து அதை
தின்று விட்டு போனதங்கே.
என் அழுகைக் குரலைக் கேட்ட அன்னை
பதறி ஓடி வந்து அங்கே
அலையைப் பார்த்துக் கேள்வி கேட்டால்.
அதற்குப் பிறகு எனது மனம்
பறக்கும் பட்டாம் பூச்சியாய்......
நிலாவைப் பார்த்து கதைகள் பல
நினைத்து நினைத்து சொல்லித் தந்தாள்
நிலவை நான் கேட்ட போது
அதையும் எனக்குப் பிடித்துத் தந்தாள்
அன்னை முகத்தில்
அன்று கண்ட சிரிப்பு.- என்
இதய அறைக்குத் தனிச் சிறப்பு
அன்னை என்ற நாமம்
மூன்றெழுத்து மூச்சு.
பிள்ளை என்ற நாமம்
மூன்றெழுத்துப் பேச்சு
முல்லை மலர்ச்சோலை நடுவே..
புன்னகை அரசியாய் என் அன்னை
தமிழ் மணம் முளையிலே
ஊட்டி விட்டாய்.....
தரணியில் என் பெயர்
சரித்திரமாய் மாற்றி விட்டாய்
அன்னையர் தினத்தில்
என் அன்னைக்கு
அன்புப்பரிசு 'பா' வரிகள்
உங்கள் அபிசேகா
தமிழாசான் பதிவேடு விருது 2019
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக