வீர நடை நடந்த வீரர்கள்.
சாவின் விழும்பில் இவர்கள் உயிர்கள்.
வெடி மருந்தினை
ஆடையாய்...ஆபரணங்களாய்...
அலங்கரித்து.
புறமுதுகு காட்டாமல்...
தன்னுடல் மிஞ்சாமல்.
ஈழத்தின் இலச்சியத்துடன்.
ஈழமண்ணுக்காய் வித்தாகும்
விடுதலைப் புலிகள் கரும்புலிகள் தான்.
அக்கினிக் குஞ்சு மில்லர்..அரங்கேற்றம்.
ஈழக்கரும்புலிகளின்... தொடறேற்றம்.
தொட்டு விட்டது வான் படை.
கற்று விட்டது கடல்ப் படை.
ஆணும் பெண்ணும் நிகராய்...
கரும்புலிகள் வரியில் என்றும்.
அகிலம் போற்றுது உயர்வாய்.
மறத்தமிழர் நெஞ்சம் கசியுது இன்றும்.
தம் கனவுகளை நெஞ்சிலே புதைத்து.
எம் உறவுகளைக் காக்கப் புறப்பட்ட வீரர்.
சாவிற்கு தேதி குறித்து...
சரித்திரத் தலைவருடன் படம் பிடித்து.
சக போராளிகளுடன்..
சாமத்தியமாய்ப் பேசி விட்டு.
சாந்தமாய் கல்லறையில் துயிலுது பார்.
வலிகளை நெஞ்சிலே...
சுமந்த நாள் இன்று.
வீரப்புலிகளை தாய்மண்ணிலே...
வித்திட்ட நாள் இன்று.
இதை மறவோம்......
உலகத்தமிழர் நாம் இன்று.
என்றும் மலரும் மலர்கள்.
கல்லறை வாசல் செல்லும்.
இவர்கள் வருகைக்காய்...எம்
இதயம் காத்திருக்கும்... பூத்திருக்கும்.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
2 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக