கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.
தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!
ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!
கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!
புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
2 ஆண்டுகள் முன்பு
2 கருத்துகள்:
அன்பு ஈழ அரசியே!
உன் கவிதைகள் அருமை.
நான்தான் face book ல் நீங்கள் பார்த்த ராஜதிருமகன்.
www.susenthilkumaran.blogspot.com
இது என்னுடையதுதான்.
அண்மையில் இறந்த என் அம்மாவின் நினைவாக ஒரு கவிதை.
முடிந்தால் தனிப்பட்ட விதத்தில் எடுத்து உங்கள் வலைப் பூவில் மலர வைக்கலாம்
* * *
அம்மா...!
உன்
மரணச் செய்தி என்
மனசைத்
துளைத்த நொடி ....
கண்கள் ஊமையாயின.
காதுகள் குருடாயின.
வாய் செவிடானது.
பல்லிடுக்கில்
சிக்கிய நாக்குக்குப்
பைத்தியம் பிடித்தது.
என்னைப்
புறந்தள்ளிவிட்டுப்
புறப்பட்டுப் போனது
பூமிப் பந்து .
இருளைக் கிழித்த
ஒளியைப் பிளந்து
எழுந்து நடந்தது
இருள்.
தானாக
வானாக
நீ ஆக
சரிகின்ற
தூணாக
நானாக
ஆனேன் அம்மா!
* * * *
நண்பர்களே!
கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் நான் அனாதையானேன்.
அன்று என் தாய் பாகயலட்சுமி மரணமடைந்து விட்டர்கள்
உன் துயரத்தில்....
நானும் என் நண்பர்களும்...
பங்கு கொள்கின்றோம் நண்பா...
என் அன்னையை உன் அன்னையாய்...
நினைத்து இந்த பூமியிலே வாழ்ந்து விடு நண்பா.
உன் கவிவரிகள் என் பூங்காவனத்தில்..
பூத்துக்குலுங்கிவிட்டது நண்பா.
நன்றி...!
கருத்துரையிடுக