ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

எங்கள் தேசம் இன்று எதிரியின் பிடியில்.



எங்கள் தேசம்வளமான மண்ணில்.
எங்கள் தேசம் விளையும் மண்ணில்.
எங்கள் தேசம் அன்று வீரர் கையில்.
எங்கள் தேசம் இன்று எதிரியின் பிடியில்.

குண்டு மழை பொழிகிறது.
குருதி வெள்ளம் பாய்கிறது.
கூட உள்ள உறவுகள் மடிகிறது.
கூட்டுச் சேர்ந்த காக்கைகள்...
கொத்திக் கொத்திக்
கத்திக் கத்திக் பிணம் தின்னுகிறது.

சாவு மணி கேட்கிறது.
நாய்கள் கூட்டம் - மனித
எலும்பிற்காய் அடிபடுகிந்தது.
சுகந்தம் வீசும் வேளையிலே.
துர்நாற்றம் வீசுது எம் பூமியிலே.
விசைப் புகையால் மேகம் மறைகின்றது.
துக்கம் தாங்க முடியாமல்
முகிலும் அழுகின்றது.

தாயின் கதறல் தங்கை கதறல்
தனித்தனியே கேட்கிறது.
சுடுகாடு போகவில்லை - வீடே
சுடுகாடாய் மாறிவிட்டது.
ஒரு குழியில் ஒன்பது பேர்.
மறு குழியில் பத்தொன்பது பேர்.
புதைக்கும் நிலை ஆகிவிட்டது.
நரிகள் போல நாயும் ஊளையிட்டது.
நாம் வளர்த்த பசுவும்.....
எமனைக் கண்டு கதைக்கத் தொடங்கியது.

வயிற்றில் பசி எடுக்கிறது.
வாந்தி கூட வருகிறது.
உண்ண மட்டும் முடியவில்லையே.
தந்தை நெஞ்சில் பாரம்.
தம்பி நெஞ்சில் வீரம்.
அண்ணன் வழியே தூரம்.
அடைந்து விட்டான் அதிவேகம்.
பயிற்சி எடுத்து..... பயிற்சி கொடுத்து...
பயணம் தொடர்கிறான்...

போன பாதை திரும்பவில்லை.
போட்ட கணக்கு மாறவில்லை.
தன்னைச் சுற்றி வெடி மருந்தை...
மாலையாக அணிந்தான்.
சாவை நோக்கிச் சென்றான்.
சக போராளிகளை...
சார்ந்தமாய்ப் பார்த்தான்.

கண்ணீர் தவழும் விழிகளிலே.
கடமை கண்ணியம் தென்பட்டது.
வாய்மை பேசும் வாய் வழியே.
வார்த்தைகள் இலட்சியமாய் மாறியது.
புத்துணர்வில் புறப்பட்டான்.
புதுக்கனவினை புணைந்துவிட்டன்.
புவியை விட்டு சென்றுவிட்டான்.
புது உலகை படைத்து விட்டான்.

சரித்திர ஏட்டில் புகுந்துவிட்டான்.
சரித்திர நாயகன் ஆகிவிட்டான்
இவன் பாதச்சுவடில்......
பதிந்த இலட்சியங்கள்.
ஆழம் விழுது போல்.
ஆயிரம் மடங்காகியது.
அண்ணன் வழியே தனி வழி
அதை நாமும் அடைவோமென
உறுதியளி...... உறுதியளி....!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

arumaiyaanakavi varikal....
vaazththukkal.

ஈழமகள் சொன்னது…

நன்றி பெயரில்லா உறவே....!

Related Posts with Thumbnails