ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

முடிசூடா மன்னனே...!


முடிசூடா மன்னனே...!
உன் இசையின் வரலாறு...
சோக மழையாய்
மாறிய கீதம்.


பாப் என்னும் புதிய உலகை...
பரப்பிய பெருமை - உனக்கு
மட்டும் தான் சொந்தம்.


ஆவணி 29 இல்....
அதிசயப் பிறவியாய்
அவதரித்தாய் இந்த அகிலத்தில்.


ஆண்டுகள் விலக...
ஆதரித்தாய் இசையை...
ஏழ்மையின் நிலையில்...
ஏற்றம் கண்டாய் நடிப்பில்.


மேனியில் சிறு
மாற்றம் கண்டோம்.
மெய் சிலிக்கும்
நடிப்பைக் கண்டோம்.


வானத்தை அலங்காரம் செய்கிறது
நட்சத்திரக் கூட்டம் - உன்
இசையை அலங்காரம் செய்கிறது
ரசிகர் கூட்டம்.


வாய் திறந்து நீ பாடினால்....
வந்த வலி நின்று விடும்.
நோய் தழுவி நீ சாதலால்...
மறுபடியும் உன் இசை..
இவ்வுலகில் படர்ந்து விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

4 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

அழகான கவிதை ...அலங்காரம் என்று (எழுத்துப்பிழை)திருத்தி விடவும். பாராடுக்கள்.

கவி அழகன் சொன்னது…

வாய் திறந்து நீ பாடினால்....
வந்த வலி நின்று விடும்.
நோய் தழுவி நீ சாதலால்...
மறுபடியும் உன் இசை..
இவ்வுலகில் படர்ந்து விடும்.
nice

ஈழமகள் சொன்னது…

நன்றி நிலாமதி அக்கா.
நான் பிழைகளைத் திருத்திவிட்டேன்.
பிழைகள் வராமல்...
எழுதமுயற்சி செய்கின்றேன்.

ஈழமகள் சொன்னது…

யாதவன் உங்களுக்கும்
என் மனம் கனிந்த நன்றி.

Related Posts with Thumbnails