முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!
என் சிகையில்... உன் முகம் சிக்கிவிட... உணர்வலைகள் உயிர் பெற்றுவிடும். உதடுகளின் ஈரம் கண்பார்வை மேல் விழ... மறு ஜென்மம் மலர்ந்து விடும்...!!
ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிமையறை படுக்கை அறை தான். பந்த பாசம் பார்வையில்... பட்ட இன்பம் போர்வையில்... தெய்வீக வாசனை அவன் வியர்வையில்... தென்றலாய் மாறியது அவள் மேனியில்...!!
இருட்டில் முகம் நடமாட... படுக்கும் முறை நிலை தடுமாற... மூச்சோடு மூச்சு பேசி விளையாட... முளைத்தது மூன்றாம் பிறை. வரம்புக்கு மீறிய ஆசை. வந்தது கட்டிலில் ஓசை...!!
கண் மூடிக் கண்ட சுகங்கள்... கை கால் கண்ட நியங்கள்... காலத்தால் அழியாத நினைவுகள். கையணை தலையணையாய் மாறிவிட... தலையணை தடங்களாய் மாறிவிடும். உடலும் உயிரும் உலாவுமிடத்தில். உடைகள் தடைகளாய் மாறிவிடும்...!!
பெண் உள்ளம் பேசிவிட... ஆண் உள்ளம் மௌனமாகிவிடும். இது தான் தலையணை மந்திரமா...? தவிக்க முடியாத யந்திரமா...? அவள் மார்புக்கு மத்தியில்... புதைக்கப் பட்ட அவன் முகம் பூரிப்படைந்த காட்சி - என் கண்கள் மட்டும் தான் சாட்சி...!!
2 கருத்துகள்:
நல்லாருக்கு....
நன்றி அண்ணா.
கருத்துரையிடுக