நெஞ்சிலே....
அன்பின் ஏக்கம்.
தொலைவிலே....
தாய்தந்தை இல்லம்.
என் கரத்திலே தாங்குமா.
தம்பிமாரின் பாரம்.
கல்லாய்ப் போனது...
கபடமில்லா என் இதயம்.
அன்னை மடி சூடு...
அறியவில்லை நாங்கள்
அன்னை போனபின்னே...
அநாதையானோம் நாங்கள்.
அன்பு காட்டி ஊட்டி விட்டால்
அன்னை போல் ஆகுமா....?
அள்ளி அணைத்து முத்தமிட்டால்
தந்தை போல் ஆகுமா....?
பத்து வயது கூடியிருந்தால்....
பத்துப் பாத்திரமாவது துலக்கியிருப்பேன்
பிஞ்சுக் கரத்தால்
பிச்சை கூட எடுக்க முடியவில்லையே...!
என்ன பாவம் செய்தேன்....
என் தாய்தந்தையை இழப்பதற்கு.
தமிழீழத்தில் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா....?
அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம்
மின் கம்பிகள் ஊடே.
அலட்சியமாய்ப் பார்க்கின்றதே
வெளியுறவு நாடே.
நான் மட்டும்
அநாதையல்ல...
உறவென்று சொல்ல
இரு உள்ளங்கள் என்னருகே...!
அது கூட இல்லாமால்....
பேசும் மழலை மொழியும்
பேச உறவின்றி
அநாதையாய் அழுகின்றது.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
2 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக