விழி மோதி வந்த காதல்...
நாணம் கண்டு...
கால்விரல் போடுது கோலம்.
வழி தேடி வந்த காதல்...
பயம் கண்டு...
வலைத்வீசித் தேடுது வார்த்தை.
ஏதோ ஒரு ஜென்மத்தில்....
என் காதலைத் தந்தேன்
உன் உள்ளத்தில்.
நினைவுகள் கனியுது...
இந்த ஜென்மத்தில்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
ஆதாம் ஏவாள் காலத்தில்...
காதல் பிறந்தது பூங்காவனத்தில்.
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்...
அடுத்த வம்சம் உருவாகும்
அந்த ஆணும் பெண்ணும் நீயும் நானும்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
வெள்ளைப் பூவைக் கண்டால்....
வேப்பமர நிழல் தேடுவாய்.
கல்லை வைத்து... பூவை வைத்து...
கைகூப்பிக் கண் மூடி
கணபதி கவசம் பாடுவாய்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
பள்ளி செல்லும் போது....
பாதை இரண்டும் வேறு
என்னைப் பார்த்த பின்
தான் செல்வாய்
பள்ளிக்கூடம் அன்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
பருவம் அடைந்த போது....
பார்க்க என்னை மறுத்தாய்.
பாசம் உள்ளே இருந்தும்
வேசம் போட்டுத் திரிந்தாய்
ரோசம் உள்ள பெண்ணே..!
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
காதல் கவிதை எழுதி...
கையில் தந்தேன் உனக்கு.
காதல் முத்தம் ஒன்று
கன்னத்தில் தந்தாய் எனக்கு.
கடைசிவரை காத்திரு என்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?
ஈழமகள் உங்கள் அபிசேகா
சுற்றூலா
2 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக