ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 8 மே, 2010

வாழ்க்கையில் ஏதடா நின்மதி...!

எம்மிடம் விட்டு இடம் வந்ததால்.
வாழ்க்கை என்ன இனிக்குமா...?
வாழ்ந்து தான் ஆகவேண்டும்.
எம் உறவுகளுக்காயல்லவா....!


நீதி கேட்டுக்...
கிடைக்கவில்லை.
நிதி சொஞ்சம் அனுப்பினால்.
நிறைந்துவிடும் பசியல்லவா....!


ருசி பார்த்துப்...
புசித்த நா.
பசிவரும் போது
மலம் கூடத் தின்றதல்லவா...!


குறிபார்த்த வம்சம்...
கூட்டி அள்ளியது
எம்மவர்....
எலும்பித் துண்டல்லவா....!


குறிதவறக் காரணம்...
கூடயிருந்து குழி பறித்த
கூலிப்படைக்...
கைக்கூலிகள் அல்லவா....!


கருணா ஒரு புறம்...
கருணாநிதி மறு புறம்.
வாழ்க்கையில் ஏதடா நின்மதி.
விளங்குமா உந்தன் சந்ததி....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வலிகளை எப்படி சொன்னாலும்
வலி வழி அறியாது..

ஈழமகள் சொன்னது…

கே.ஆர்.பி.செந்தில் அண்ணா...
உங்கள் வருகைக்கு...
மிக்க நன்றி.
வலிகளை வழி அறியாது.
உண்மைதான்.
வலிகளை என் விழிகள் அறிந்தது
இதுவும் உண்மைதான் அண்ணா.

Related Posts with Thumbnails