ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 25 மார்ச், 2010

பெண்புலி போராளிகள்....

உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.


ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.


மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.


கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?


பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 20 மார்ச், 2010

அன்னமே...

அன்னமே...
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே.


செல்லமே...
உன் மழலை
தென்றலாய் என்
நெஞ்சிலே.


வானமே...
உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்
மூடிக்கொள்.


முத்து முத்தாய்
முத்தம் - நீ...
முகத்தில் தந்தாய்
நித்தம்.


தித்திக்க தித்திக்க...
நீ... பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.


சொன்ன சொல்லை...
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட
கவி பாடும்.


பஞ்சு போன்ற பாதத்தில்...
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்.


தங்க நிலவே...
இன்று போல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வந்துதித்த நாயகனே...!

தமிழ்த் தாய் மண்ணில்
வந்துதித்த நாயகனே...!
பாசம் என்னும் வலையை - உன்
விழிகளால் பின்னி முடித்தாய்.


முத்து முத்து மணியே மணியே...
முகவரி தந்தாய் முழுநிலவாய்.
வட்ட வட்ட விழியே விழியே...
வாழ்த்துகின்றோம் உன் வருகைகண்டு.


சின்னச் சின்னத் துன்பமெல்லாம்
உன்னைக் கண்டு போனதின்று
மாதா பிதா உன்னருகில்
சின்ன மாமன் உன் விழியில்.


உறவு என்று சொல்ல.....
ஓராயிரம் முறைகள் உண்டு கனடாவில்.
நீ.... வாழ்க என்று சொல்ல
பல்லாயிரம் வாழ்த்து உண்டு எம் உள்ளத்தில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 6 மார்ச், 2010

சுயநினைவு அற்ற பள்ளிப்பருவம்


அம்மா நீ எங்கே....?
உன் பிள்ளை இங்கே...
தலைவிரி கோலமாய்...
தனைமறந்து வாழ்கின்றாள்.
தாயே நீ எங்கே....? இவளை
தவிக்கவிட்டுச் சென்றாய்.


ஊர் இருண்டு போனாலும்....
உன் மகள்விழி உறங்கவில்லை.
ஏதோ நினைவுகள்....
ஏதோ எண்ணங்கள்....
தோன்றி மறையுது
அவள் உள்ளத்தில்.


இரவும்... பகலும்....
இவளுக்கு நிகர்தானா....?
இறைவன்... கொடுத்த...
வரம்தான் இதுதானா....?


உறவைக் கூடதெரியவில்லை.
உள்ளுடுப்புத் தெரிவதைப் புரியவில்லை
படிக்கும் போது பரிசுகள் பெற்றபிள்ளை.
அரக்கர்படையால் கெடுத்த போது...
தொலைந்து போனது எதிர்காலம்
மறைந்து போனது இவள் எண்ணம்.


விதியா....சதியா....?
இவள் ஒரு தமிழிச்சியா....?
இதுதான்.... குறையா....?
தமிழுக்கு வந்த கதியா....?


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails