ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 6 மார்ச், 2010

சுயநினைவு அற்ற பள்ளிப்பருவம்


அம்மா நீ எங்கே....?
உன் பிள்ளை இங்கே...
தலைவிரி கோலமாய்...
தனைமறந்து வாழ்கின்றாள்.
தாயே நீ எங்கே....? இவளை
தவிக்கவிட்டுச் சென்றாய்.


ஊர் இருண்டு போனாலும்....
உன் மகள்விழி உறங்கவில்லை.
ஏதோ நினைவுகள்....
ஏதோ எண்ணங்கள்....
தோன்றி மறையுது
அவள் உள்ளத்தில்.


இரவும்... பகலும்....
இவளுக்கு நிகர்தானா....?
இறைவன்... கொடுத்த...
வரம்தான் இதுதானா....?


உறவைக் கூடதெரியவில்லை.
உள்ளுடுப்புத் தெரிவதைப் புரியவில்லை
படிக்கும் போது பரிசுகள் பெற்றபிள்ளை.
அரக்கர்படையால் கெடுத்த போது...
தொலைந்து போனது எதிர்காலம்
மறைந்து போனது இவள் எண்ணம்.


விதியா....சதியா....?
இவள் ஒரு தமிழிச்சியா....?
இதுதான்.... குறையா....?
தமிழுக்கு வந்த கதியா....?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

3 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

தமிழ் மகளே வலிக்கிறது . கவிதை வரிகள் மனதை காயப் படுத்துகின்றன,உன்னை நினைத்து . கவி வாழ்த்துக்கள்.

ஈழமகள் சொன்னது…

மதுரை சரவணன் அண்ணா....
உங்களுக்கு கவிதைவரிகள் வலிக்கின்றது....
ஆனால் எனக்கு என் நண்பியின்...
இளமை நினைவுகள்... வலிக்கின்றது அண்ணா.
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி அண்ணா.

vimalan சொன்னது…

nalla pathivu...sila varikal vaalkaiyil nan thulaiththa nanparkalaiyum enni paarkka vaiththathu...padaippukku vaalthukkal!

Related Posts with Thumbnails