ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

என்ன பாவம் செய்தேன்....

நெஞ்சிலே....
அன்பின் ஏக்கம்.
தொலைவிலே....
தாய்தந்தை இல்லம்.


என் கரத்திலே தாங்குமா.
தம்பிமாரின் பாரம்.
கல்லாய்ப் போனது...
கபடமில்லா என் இதயம்.


அன்னை மடி சூடு...
அறியவில்லை நாங்கள்
அன்னை போனபின்னே...
அநாதையானோம் நாங்கள்.


அன்பு காட்டி ஊட்டி விட்டால்
அன்னை போல் ஆகுமா....?
அள்ளி அணைத்து முத்தமிட்டால்
தந்தை போல் ஆகுமா....?


பத்து வயது கூடியிருந்தால்....
பத்துப் பாத்திரமாவது துலக்கியிருப்பேன்
பிஞ்சுக் கரத்தால்
பிச்சை கூட எடுக்க முடியவில்லையே...!


என்ன பாவம் செய்தேன்....
என் தாய்தந்தையை இழப்பதற்கு.
தமிழீழத்தில் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா....?


அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம்
மின் கம்பிகள் ஊடே.
அலட்சியமாய்ப் பார்க்கின்றதே
வெளியுறவு நாடே.


நான் மட்டும்
அநாதையல்ல...
உறவென்று சொல்ல
இரு உள்ளங்கள் என்னருகே...!


அது கூட இல்லாமால்....
பேசும் மழலை மொழியும்
பேச உறவின்றி
அநாதையாய் அழுகின்றது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 27 பிப்ரவரி, 2010

ஞாபகம் வருகுதா..?

விழி மோதி வந்த காதல்...
நாணம் கண்டு...
கால்விரல் போடுது கோலம்.
வழி தேடி வந்த காதல்...
பயம் கண்டு...
வலைத்வீசித் தேடுது வார்த்தை.

ஏதோ ஒரு ஜென்மத்தில்....
என் காதலைத் தந்தேன்
உன் உள்ளத்தில்.
நினைவுகள் கனியுது...
இந்த ஜென்மத்தில்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

ஆதாம் ஏவாள் காலத்தில்...
காதல் பிறந்தது பூங்காவனத்தில்.
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்...
அடுத்த வம்சம் உருவாகும்
அந்த ஆணும் பெண்ணும் நீயும் நானும்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

வெள்ளைப் பூவைக் கண்டால்....
வேப்பமர நிழல் தேடுவாய்.
கல்லை வைத்து... பூவை வைத்து...
கைகூப்பிக் கண் மூடி
கணபதி கவசம் பாடுவாய்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

பள்ளி செல்லும் போது....
பாதை இரண்டும் வேறு
என்னைப் பார்த்த பின்
தான் செல்வாய்
பள்ளிக்கூடம் அன்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

பருவம் அடைந்த போது....
பார்க்க என்னை மறுத்தாய்.
பாசம் உள்ளே இருந்தும்
வேசம் போட்டுத் திரிந்தாய்
ரோசம் உள்ள பெண்ணே..!
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

காதல் கவிதை எழுதி...
கையில் தந்தேன் உனக்கு.
காதல் முத்தம் ஒன்று
கன்னத்தில் தந்தாய் எனக்கு.
கடைசிவரை காத்திரு என்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

ஈழமகள் உங்கள் அபிசேகா

சனி, 20 பிப்ரவரி, 2010

காதலுக்கு ஜாதி என்ன...?


உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பிகளில்...
நானும் ஒருத்தி....!


உன் சோக‌த்தின் பாதியைக்
கொடுத்து விடு...
ந‌ல் ந‌ண்ப‌ரிட‌ம்.....!


உன‌க்காய்....
ஒரு நிமிட‌ம்
மெள‌ன‌ம்.


க‌ட‌வுளிட‌ம்...
மண்டியிட்டுக்
கேட்கின்றேன்.


எத‌ற்காய்ப்...
ப‌டைத்தாய்
காத‌ல் வ‌ரிக‌ளை.....!


க‌ல‌ங்க‌ம் இல்லாக் காத‌ல்...
காத்திருக்கும்
சாகும் வரை.....!


காதலுக்கு...
ஜாதி என்ன
மதம் என்ன...?


உன் காதலுக்கு...
முள்வேலி போட்டு
விட்டால் காதலி.


காத்திருக்கும்
உம் உறவுகள்
உயிரோடு வாழ்வதற்காய்...!


நீ செய்வது யாகமா...?
அவள் செய்வது தியாகமா...?
உம் உறவுகள் செய்வது நியாயமா...?


பதில் தேடி...
நாமும் அலைகிறோம்...
விடை கொடு நண்பரே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.வியாழன், 18 பிப்ரவரி, 2010

நட்பின் வாழ்த்துகள்.

அழகு என்ற பொருள்
உன்னைப் பார்த்ததும்
அகராதியில்
இருந்து வில‌க...


அகிலம் உன்னை அழைக்க...
ஆனி உன்னைத் தாளாட்ட...
அன்னைமடி நீ... தூங்க‌...
அழகாய் வந்து அவதரித்தாய்.


அன்பும் பண்பும்...
அள்ளித்தந்த உறவை
அணைத்துவிடு
உன் புகழால்.


சொல்லும் செயலும்...
கற்றுத்தந்த குருவை
கடைசிவரை நினை
உயர்வாய்.


உனக்குள் ஒரு கனவு
உதயமாகி இருக்கும்.
உன்னோடு உறவாடும் இதயம்
ஏன் இன்னும் மெளனம்.


காதல் கை கூடும்...
உன் வரவால்
கடைசிவரை நினை
உன் உறவை.


உகலத்தின் சுடர்...
உன் நாமம்.
உயரப்பறக்க
நட்பின் வாழ்த்துகள்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

மனதைக் கொள்ளை அடித்தாய்.

கொள்ளை அடித்தாய் - என் மனதைக்
கொள்ளை அடித்தாய்.
கண்ணாலே பேசிய‌....கவிதை
என் நெஞ்..சிலே விம்பமாய்ப் பதிந்ததடி
உன்னாலே ஒரு.... ஜீவன்
உதயம் ஆனான் சூரியனாய்.!


வானத்தில் உன்னைக் கொண்டு
வளர் பிறையில் ஊஞ்சல் கட்டி.
வ‌ளமாக வாழ‌ வைப்பேன்.
வ‌ல‌து காலை எடுத்து வை.
வ‌ருங்கால‌ தெய்வ‌மே....!


மொழிக‌ளை ம‌துவாக்கி...
ம‌துவிலே நீ குளிக்க.
ம‌ன்ம‌த‌னாய் நான் வ‌ந்து...
ம‌ல‌ர்க‌ளைத் தூவி...
ம‌ணிம‌குட‌ம் சூடுவேன்.!


மேக‌த்தை மெத்தையாக்கி...
வெண் முகிலைப் போர்வையாக்கி.
விண் மீன்க‌ள் கண்ணுற‌ங்க‌...
உன் காத‌ல் சேர்ந்துற‌ங்க.
தென்றலாய் தாளாட்டுவேன் உன்னோடிருந்து.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.திங்கள், 15 பிப்ரவரி, 2010

அணைக்க இரு கை இல்லை.

அணைக்க இரு கை இல்லை.
அடுத்தவனுக்கு உதவ
என் கை...
இயலவில்லை.


சாதனை படைக்கக்...
காத்திருந்தேன்.
வேதனை என்னை...
அள்ளிச் சென்றது.


என்னுடன் உறவை....
கண்ணெதிரே இழந்தேன்.
உணர்வற்ற தந்தையை...
நினைத்துக் கலங்குகின்றேன்.


உலகம் இன்று...
என்னை வேதனையோடு பார்க்கின்றது.
என் உருவம் குலையமுன்...
அந்த உலகமே வேடிக்கை பார்த்தது.


இதயத்தில்...
கசிகின்றது குருதி.
இதைத் தாங்குமா...?
விழிகளில் வெளிவரும் கண்ணீர்.


ஒரு கை இருந்தாலே....போதும்
ஓடி ஓடிப் படித்திருப்பேன்...
இரு கை இழந்ததால்....
இறைவனை இன்று மறந்துவிட்டேன்.


பொய்க்கை போட....
உதவிய நல் உள்ளங்களுக்கு
இருகை இல்லா....
சஜீவனின் நன்றிகள் கோடி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

உன் நினைவுகள்...நனைகிறது.

மழையாய்...
வரும் கவியில்.
உன் நினைவுகள்...
நனைகிறது.


வானில் மிளிரும்...
விண் மீன்கள்
பூக்களாய் மாறி...
உன்பாதம் தொடுகிறது.


தேரில்...
வரும் சிலையில்.
உன் விம்பம்...
தெரிகிறது.


தென்ற‌ல் வ‌ந்து...
மோதிய‌தால்
பாலைவ‌ன‌ம்...
சோலைவ‌ன‌மாய் மாறிய‌து.


உனக்கும்...
எனக்கும் இடையில்
எம் சுவாசக்காற்றுகள்...
காதலிக்கின்றது.


நதி போல்...
வரும் உறவில்.
வாழ்ந்து காட்டுவோம்...
விரைவில்


நாளை மலர...
விரும்பா விடியல்.
நமக்காய்...
இரவாய் தொடர்கிறது.


நீ பேசுகின்ற...
இனிமை கண்டு
தமிழ் மொழிக்கே...
மகிமை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

விழ விழ எழுவோம்......

விழ விழ எழுவோம்......
விடியலைக் காண்போம்.
விழ விழ விரைவோம்......
விடுதலை வெல்வோம்.


எம்மில்.... ஓடும் ..... குருதி.
எம் தாய்மண்ணில் தவழ்வது உறுதி.
எம்மில்.... சேரும்..... உறவு.
எம் தாய்மண்ணில் வாழ்வது உறுதி.


சத்தியம்....
தாய் மண் மேல் சத்தியம்.
சத்தியம்....
தமிழ் மொழி மேல் சத்தியம்.


நாவால் பேசும் வார்த்தை....
நாடே போற்றும் பலநாள்.
தீயாய் மாறும் பார்வை.....
எதிரியைக் கொல்லும் ஒருநாள்.


சத்தியம்....
எம் தாய் மேல் சத்தியம்.
சத்தியம்....
எம் தலை மேல் சத்தியம்.


வீட்டில் வாழும் உறவு....
சுடு காட்டை நோக்கி நகர்வு.
சுத்தம் இல்லா வார்த்தை
சொன்னான் அரசு அன்று.


நிச்சயம்......
நீதி நேர்மையின் பக்கம்.
நிச்சயம்.....
நியாயம் தர்மத்தின் பக்கம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

விழிகளில்...பாதை அமைத்தேன்.

என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக.


இருளிலே...
உன் பார்வை
நிலவைப் போலே
நிரந்தரமாய்...
தங்கிவிடு என்
இதயத்துள்ளே


நிழலிலே...
உந்தன் உருவம்
சிலையைப் போலே.
நீ... சொல்லிவிட்டாய்...
உந்தன் காதல்
என் மனசைப் போலே.


தரணியே...
தடுமாறுது...
உந்தன் வரவைக்கண்டு.
தடுத்து...
நிறுத்தவேண்டும்
உன்மேல் வைத்த கண்களை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அழு... ஓவென்று அழு.

எம் தமிழினமே.....
அழும்போது.
உன்னினம்
கைகொட்டிச் சிரித்தது.


இன்று நீ....
மனமுருகி அழும் போது.....
உன்னினமே
வேடிக்கை பார்க்கின்றது


இறந்த எம் உறவுகள்...
திருப்பி எமக்குக் கிடைக்குமா....?
இழந்த எம் மானம்....
திருப்பி எமக்குக் கிடைக்குமா...?


பதவி பதவி என்று...
காக்கிச் சட்டையிலே
பல பொத்தான்கள்
பல நிறங்களில்.


இனியும் மறந்துவிடாதே....
அத்தனையும் எம் உறவை
அகோரமாய்க் கொன்றதற்கு
கிடைத்த...பரிசுப் பொத்தான்கள்.


அன்று மலர்ந்தது...
உன் சந்ததியின் புன்னகை.
இன்று எம் கண்ணீரில் மிதக்கின்றது.
எம் சந்ததியின் நினைவுகள்.


உன் புத்த இனத்துக்குள்ளே
பிளவுகள் வரவேண்டும்.
அந்த நேரம் புரியும்...
எம் இதயத்தின் வலி.


தமிழருக்காய் திறக்கப்பட்ட...
சிறைக்கதவுகள்.
இன்று உன் கணவருக்காய்க்
காத்திருக்கின்றது.


நீ... மட்டுமல்ல பெண்ணே...
தமிழனுக்கு எவன் எவன்
தீங்கி விளைவித்தானோ
அவன் அவனுக்கெல்லாம்....
இப்படித்தான் கடைசியில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

முடிசூடா மன்னனே...!


முடிசூடா மன்னனே...!
உன் இசையின் வரலாறு...
சோக மழையாய்
மாறிய கீதம்.


பாப் என்னும் புதிய உலகை...
பரப்பிய பெருமை - உனக்கு
மட்டும் தான் சொந்தம்.


ஆவணி 29 இல்....
அதிசயப் பிறவியாய்
அவதரித்தாய் இந்த அகிலத்தில்.


ஆண்டுகள் விலக...
ஆதரித்தாய் இசையை...
ஏழ்மையின் நிலையில்...
ஏற்றம் கண்டாய் நடிப்பில்.


மேனியில் சிறு
மாற்றம் கண்டோம்.
மெய் சிலிக்கும்
நடிப்பைக் கண்டோம்.


வானத்தை அலங்காரம் செய்கிறது
நட்சத்திரக் கூட்டம் - உன்
இசையை அலங்காரம் செய்கிறது
ரசிகர் கூட்டம்.


வாய் திறந்து நீ பாடினால்....
வந்த வலி நின்று விடும்.
நோய் தழுவி நீ சாதலால்...
மறுபடியும் உன் இசை..
இவ்வுலகில் படர்ந்து விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 6 பிப்ரவரி, 2010

காமத்தின் எல்லை வரை..........


என் சிகையில்...
உன் முகம் சிக்கிவிட...
உணர்வலைகள் உயிர் பெற்றுவிடும்.
உதடுகளின் ஈரம்
கண்பார்வை மேல் விழ...
மறு ஜென்மம் மலர்ந்து விடும்...!!


ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிமையறை
படுக்கை அறை தான்.
பந்த பாசம் பார்வையில்...
பட்ட இன்பம் போர்வையில்...
தெய்வீக வாசனை அவன் வியர்வையில்...
தென்றலாய் மாறியது அவள் மேனியில்...!!


இருட்டில் முகம் நடமாட...
படுக்கும் முறை நிலை தடுமாற...
மூச்சோடு மூச்சு பேசி விளையாட...
முளைத்தது மூன்றாம் பிறை.
வரம்புக்கு மீறிய ஆசை.
வந்தது கட்டிலில் ஓசை...!!


கண் மூடிக் கண்ட சுகங்கள்...
கை கால் கண்ட நியங்கள்...
காலத்தால் அழியாத நினைவுகள்.
கையணை தலையணையாய் மாறிவிட...
தலையணை தடங்களாய் மாறிவிடும்.
உடலும் உயிரும் உலாவுமிடத்தில்.
உடைகள் தடைகளாய் மாறிவிடும்...!!


பெண் உள்ளம் பேசிவிட...
ஆண் உள்ளம் மௌனமாகிவிடும்.
இது தான் தலையணை மந்திரமா...?
தவிக்க முடியாத யந்திரமா...?
அவள் மார்புக்கு மத்தியில்...
புதைக்கப் பட்ட அவன் முகம்
பூரிப்படைந்த காட்சி - என்
கண்கள் மட்டும் தான் சாட்சி...!!


நாவால் நனைந்த உன் மேனி...
மூச்சுக் காற்றால் உலர்ந்து போனாய் நீ...
பதுமையாய் வளர்த்த பற்கள்...
பௌவியமாய் கடித்த...
சிவந்த கன்னங்கள்.
சில் என்று ஏறிய உணர்வுகள்...
சீறியது இன்பத் துளிகளாய்...!!


தடைகளை உடைத்து வந்த...
சுகந்திரப் புறாவாய்...
அடைக்கலமாய்த் தாவியது நெஞ்சறையில்.
இதயத் துடிப்பின் ஓசை...
இளமைப் பருவத்தின் ஆசை...
இரண்டும் பொக்குள் கொடி உறவுகள்...!!


காதோரம் கதை கேட்க...
காத்திருந்தேன் சில நாட்கள். - என்
பூவோடு விளையாட...
பூ முடிந்திருந்தேன் சடையோடு.
தேனோடு உறவாட...
தேர்ச்சி பெற்றேன் உன்னோடு.
மானோடு விளையாட...
மாட்சிமை பெற்றேன் தாயாக.
சீறோடு வளப்பேன்....
சிந்தனையில் சிதறாமல்...!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

உன் நினைவருகில்.

விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.


மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.


உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.


மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.


கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.


உன் காதல்...
மடல்கள்.
இரவென்றல் எனக்கு...
பஞ்சுமெத்தை.


காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் இதயம் .... வலிக்கிறதே....!

என் உயிரே.... என் உயிரே...
என் இதயம்.... அழுகிறதே...!
என் உறவே.... என் உறவே...
என் இதயம் ....வலிக்கிறதே...!


வாழ்க்கை என்னும் கோபுரத்துள்
வாசல் வரை சென்றிருந்தேன்.
வழிமறித்து இன் ஒருத்தி
வல்லமையால் சென்றுவிட்டால்.


தூங்கும் கண்கள்...
கண்ணீரில் மிதக்கின்றது.
பேசும் நியங்கள்...
மெளனமாய் அழுகின்றது.


உத‌டுக‌ள் இருந்தும்...
உண்மைக‌ள் இருந்த‌தில்லை.
உண‌ர்வுக‌ள் இருந்தும்...
உள்ள‌ம் சாக‌ விரும்ப‌வில்லை.


தேன் நில‌விற்கு செல்ல‌ இருந்த‌ வாழ்க்கை.
தேன் கூட்டில் சென்று விட்ட‌து.
யார் க‌ண் ப‌ட்ட‌தோ....
புண் ப‌ட்டுப் போன‌து என் ம‌ன‌ம்.


சாவிற்கு வ‌ழி தேடுகிறேன்.
சாட்சிக‌ள் இல்லாம‌ல்...
நேர்மைக்கு வ‌ழி தேடுகின்றேன்
வ‌ஞ்ச‌னைக‌ள் இல்லாம‌ல்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.வரம் தர வேண்டும்.

வரம் தர வேண்டும்
தலைவா..........- நீ
வரம் தர வேண்டும்.
போருக்குப் போக........
வரம் தர வேண்டும்.


போரிலே புலி முகம்.....
ஒளி பெற வேண்டும்.
போர்க்களம் புகுந்து..... - அங்கே
புலிக்கொடி பறந்திட வேண்டும்
புலிக்கொடி பறந்திட வேண்டும்


கானகம் காக்கும்....
வானகம் போற்றும்.
வையக மைந்தன்....
எம் தலைவன்.


உன் பாதச்சுவடுகளில் ஒளிரும்
இலட்சியக் கனவுகள்
இன்றே மலந்திட வேண்டும்....- அது
இன்றே மலந்திட வேண்டும்


ஆயிரம் ஆயிரம்....
கருவறை போற்றும்.
காவிய நாயகர்....
நம் மறவர்.


எம் வேங்கைகள் துயிலும்....
ஈழத்து மண்ணில்.
எதிரியின் பாதம்பட விடுவோமா...-நாம்
எதிரியின் பாதம்பட விடுவோமா.


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.
Related Posts with Thumbnails