ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 6 பிப்ரவரி, 2010

உன் நினைவருகில்.

விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.


மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.


உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.


மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.


கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.


உன் காதல்...
மடல்கள்.
இரவென்றல் எனக்கு...
பஞ்சுமெத்தை.


காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.5 கருத்துகள்:

Madurai Saravanan சொன்னது…

nallathu kaththiruppilum sukam irukkirathu . kavithai kaathalaai vanthullathu. valththukkal.

நிலாமதி சொன்னது…

காதல் நினைவுகளை சொல்லும் அழகான் கவிதை. பாராடுக்கள் உங்களுக்கு.
மேலும் தொடர்க.

ஈழமகள் சொன்னது…

nanri...
Madurai Saravanan annaa.

ஈழமகள் சொன்னது…

நிலாமதி அக்கா....
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அடிக்கடி என் கவிமழையில்
நனைகின்றீர்கள்...
அது மட்டுமல்லாமல்...
என்னை ஊக்கப்படுத்துவதாலும் தான்
நானும் ஒரு கவித்தோட்டத்திற்குள்
காலடி எடுத்துவைத்துள்ளேன்.
நன்றி நன்றி நன்றி.

அண்ணாமலையான் சொன்னது…

அழகான காதல் வரிகளடங்கிய கவிதை

Related Posts with Thumbnails