ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

திங்கள், 28 டிசம்பர், 2009

யார் அவள்....... யார் அவள்......!யார் அவள்....... யார் அவள்......- என்
இதயத்தை ஏற்றவள் யார் அவள்.
வார்த்தைகள் இருந்தும் பேசவில்லை.
வாழ்க்கையின் பாதைக்குப் போகின்றேன்.
கனவில் காட்டும் உன் முகத்தை..
சுவரில் வரைந்து பார்க்கின்றேன்.
சுகமா என்று கேட்கின்றேன்....?


இளமைக் குரலை அறிந்துவிட்டேன்.
இன்பக் கடலில் மூழ்கிவிட்டேன்.
உன்னைக் கண்டா - குயிலும்
கூவப் பழகியது...!
உன்னைக் கண்டா - கிளியும்
பேசப் பழகியது...!
இளமை இனிமை இரண்டும்
என்னைத் தனிமை ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!


அழகைப் பார்த்து மயங்கிவிட்டேன்.
உன்னை எண்ணி அன்னையை
அணைத்துவிட்டேன்.
உன்னைக் கண்டா - மயிலும்
ஆடப் பழகியது.
உன்னைக் கண்டா - அன்னம்
நடை பழகியது.
அழகும் அறிவும் இணைந்து
என்னை அமைதி ஆக்கியது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!


தேவதையை நேரடிப் பார்வையில்
பார்த்து விட்டேன். - அவள்
காலடியில் தரிசனம் ஆகிவிட்டேன்.
உன்னைக் கண்டா - கோயில்ச்சிலைகள்
செதுக்கப் பழகியது.
உன்னைக் கண்டா - புடவைகள்
நெய்யப் பழகியது. - நீ.......
தேவதையா......? தெய்வச்சிலையா......?
என்னைச் சிந்தனையில் மூழ்கவைத்தது.
ஸ ரி க ம.......... யாரவள்
ப த நி ஸ்.......... யாரவள்....!!!


ஈழ‌ம‌க‌ள் உங்கள் அபிசேகா.

நீ ஒரு வீரனடா...!தோழா...... தோழா..... நீ.....
தோற்கவில்லையடா தோழா.
தமிழா....... தமிழா...... நீ.....
தண்ணீர் மட்டுமா பருகிறாய் தமிழா.
வீரா...... வீரா........ எம்.....
விடுதலைக்காய் உண்ணா நோம்பா.


ஆசைகள் அதிகம் இருந்தாலும் - தமிழ்
ஆணவம் உன்னைச் சுற்றியதோ......
உன்னையே உனக்குப் புரியவில்லை
உலகமும் விழித்துப் பார்த்ததில்லை
மானத் தமிழன் பொழிகின்றான் கண்ணீர்.


நாளை மலரும் பருவம் எல்லாம்
நச்சுக் குண்டில் அழிகிறதே......
நாட்டை விட்டுச் சென்றாலும்
உன் நினைவலைகள் அங்கே.
உன் நின்மதி கெடுகிறது இங்கே


நாளுக்கு நாள் பத்திரிகை பேசுகிறது.
நாட்டுக்கு நாடு என்மினம் உண்ணா நிலை.
நாடி நரம்புகள் தளருது இங்கே
நால்வர் சேர்ந்து தூக்க நாதியில்லை அங்கே
நடைப் பிணமாய் நாம் இங்கு


தாய் மண்ணில் தவளாவிட்டாலும்
தான் இருக்குமிடத்தில்......
தமிழுக்கு ஓர் சிறப்பு தந்தது பா வரிகள்.
தமிழுக்காய் உன் உயிர்.
தரை இறங்கும் நேரமல்ல நண்பா.


தியாகி திலீபனை இழந்த வேதனை
இன்னும் தீரவில்லை......
அன்னை பூபதி மறைந்த வேதனை
இன்னும் ஆறவில்லை. எம்
நெஞ்சில் இன்னொரு காயம்
ஏற்படுத்தாதே சோதரா......!!!
ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 26 டிசம்பர், 2009

காதலில் தோல்வி.....!


கண்டதால் வந்ததா காதல் - இல்லை
கடிதத்தை பார்த்தபின் வந்ததா காதல்.
கண்ணெதிரே நீ.... ஒரு நாள்
கலங்கினாய் எனைப் பார்த்து
உறைந்தது என் உதிரம்.
தளர்ந்தது என் சரீரம்.


தாயகம் விட்டு சென்றிருந்தாலும் - உன்னைத்
தாங்கியது என் இதயம்.
காத்திருந்தேன் பல நாட்கள்
தன்னந்தனியாய்......
கனவு கண்டிருந்தேன் சில நாட்கள்
வந்தது உன் தகவல்
வாடிய பூவும் மலர்ந்தது....!


ஊருக்கு ராஜாவாய் நீ.....
உன்னுடலுக்கு ராணியாய் நான்
இருப்பேன் என நினைத்தேன்.
அதில் ஒரு மாற்றம் கண்டேன்
சரியென சொன்ன உதடுகள்
சத்தியம் மறந்தது ஏனோ....!


கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!


புதிரான அகிலத்தில் - ஏன்
பிறந்தேன் அன்று...
திறக்கப்பட்ட என் இதயக்கதவுகள்
இருட்டறையாய் மாறியது ஏனோ...
புதுயுகம் படைக்கப் புறப்பட்டேன்
புரியவில்லை போகும் பாதைகள்


ஈழ‌ம‌க‌ள் உங்கள் அபிசேகா.

புத்தாண்டு பிறக்குதடி...!


சித்திரை நிலவில்...
செதுக்கிய ஓவியம்.
தேசத்தின் நிழலில்...
படருது காவியம்.
புத்துயிர் மலர...
புத்தாண்டு பிறக்குதடி...!


சித்திரை சிறக்க...
செவ்விதழ் சிவக்க.
தேன் சொட்டும் தமிழ்...
தேசமெல்லாம் தழுவ.
எம் தேசியக் கொடி...
எம் இதயத்தில் பறக்குதடி...!


செம்பருத்தி சேலை கட்டி...
தலை நிறைய பூ முடிந்து.
கொலுசுச் சத்த ஓசையுடன்...
கோவிலுக்குச் சென்று வாறாளே.
பெண் ஒருத்தி..........!


இரட்டை மாட்டு வண்டியிலே...
இளநீர் ஏற்றிப் போகையிலே.
மாட்டுச் சலங்கை ஓடையுடன்...
பாட்டுப் பாடிப் போறானே.
மாட்டுவண்டிக் காரன் ஒருவன்...!


பட்டாம் பூச்சியாய்...
கண்கள் படபடக்க.
தந்தி மூலம் தபால்க்காரன்...
காதலை வெளிப்படுத்த.
தன்னை அறியாமல் தேன் நிலவில்...
நுழைகிறாள் பருவமங்கை ஒருத்தி.......!


படிக்கும் வயதில் விளையாட்டு...
விளையாடும் வயதில் ஒரு தலைக்காதல்.
கடற்கரை ஓரம் கவிதை மழை...
கண்டதெல்லாம் புலம்புவான்.
நல்ல கவிஞனாய் மாறிடுவான்.
கால் போன போக்கில்...
அவன் பயணம் தொடரும்.


சந்தித்தான் தன் காதலியை...
மாற்றான் மனைவியாய்.
சற்று சிந்தித்தான்... - தன்
தாய் தந்தையை.
நேற்று முதல் இவன் கவிதை...
காதலாய்க் கசிந்தது.
இன்று முதல் இவன் கவிதை...
புரட்சியாய் வெடித்தது.
நாளை முதல் இவன் பயணம்...
நல்லபடி அமையும்............................!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 24 டிசம்பர், 2009

உன் ஈர‌மும் வீர‌மும்....!


வானத்தில் உனக்காய்...
வடித்த‌ வரிகள்.
கவி என்னும் மழையால்....
கலங்கி பூமியைத் தொடுகின்றது.


நிலவில் உனக்காய்...
வரைந்த ஓவியங்கள்.
வழி தேடி வந்து....
உன் கல்லறையைத் தேடுகின்றது.


பூமியில் உன‌க்காய்...
புனைந்த புதுக் க‌விக‌ள்.
தென்ற‌லைத் தேடி அனைத்து
தேன்த‌மிழ் கீத‌ம் பாடுகின்ற‌து.


என் நெஞ்சில் உன‌க்காய்....
புதைத்து வைத்த காத‌ல்.
உன் நினைவைத் தேடி.
க‌ரும்புலியின் க‌ல்ல‌றை தேடுகின்ற‌து.


ஏட்டில் உன‌க்காய்...
எழுதிய‌ எழுதுகோல் கூட.
மை என்னும் த‌ன்னுயிரை...
த‌ந்துவிட்ட‌து ந‌ம‌க்காய்.


வீட்டில் உன‌க்காய்...
ஏற்‌றி வைத்த‌ தீப‌ம் கூட‌.
திரி என்னும் த‌ன்னுயிரை...
த‌ந்துவிட்ட‌து ந‌ம‌க்காய்.


த‌மிழீழ‌த்தில் உன‌க்காய்...
த‌லைவர் தொடங்கி
த‌மிழ‌ர் வ‌ரை அக‌வ‌ண‌க்க‌ம்.
உன் ஈர‌மும் வீர‌மும்....
க‌ளத்தினில் க‌ண்டோம்.


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

புதன், 23 டிசம்பர், 2009

க‌ரும்புலிக‌ள்


வீர ந‌டை ந‌ட‌ந்த‌ வீர‌ர்க‌ள்.
சாவின் விழும்பில் இவ‌ர்க‌ள் உயிர்க‌ள்.
வெடி ம‌ருந்தினை
ஆடையாய்...ஆபரண‌ங்க‌ளாய்...
அல‌ங்க‌ரித்து.

புற‌முதுகு காட்டாம‌ல்...
த‌ன்னுட‌ல் மிஞ்சாம‌ல்.
ஈழ‌த்தின் இல‌ச்சிய‌த்துட‌ன்.
ஈழ‌ம‌ண்ணுக்காய் வித்தாகும்
விடுத‌லைப் புலிக‌ள் க‌ரும்புலிக‌ள் தான்.


அக்கினிக் குஞ்சு மில்லர்..அர‌ங்கேற்றம்.
ஈழ‌க்க‌ரும்புலிக‌ளின்... தொட‌றேற்ற‌ம்.
தொட்டு விட்ட‌து வான் ப‌டை.
க‌ற்று விட்ட‌து க‌ட‌ல்ப் ப‌டை.
ஆணும் பெண்ணும் நிக‌ராய்...
க‌ரும்புலிக‌ள் வ‌ரியில் என்றும்.
அகில‌ம் போற்றுது உய‌ர்வாய்.
மறத்த‌மிழ‌ர் நெஞ்சம் க‌சியுது இன்றும்.


த‌ம் க‌ன‌வுக‌ளை நெஞ்சிலே புதைத்து.
எம் உற‌வுக‌ளைக் காக்க‌ப் புற‌ப்ப‌ட்ட‌ வீர‌ர்.
சாவிற்கு தேதி குறித்து...
ச‌ரித்திர‌த் த‌லைவ‌ருட‌ன் ப‌ட‌ம் பிடித்து.
ச‌க‌ போராளிக‌ளுட‌ன்..
சாம‌த்திய‌மாய்ப் பேசி விட்டு.
சாந்தமாய் க‌ல்ல‌றையில் துயிலுது பார்.


வலிகளை நெஞ்சிலே...
சுமந்த நாள் இன்று.
வீரப்புலிகளை தாய்மண்ணிலே...
வித்திட்ட‌ நாள் இன்று.
இதை மறவோம்......
உலகத்தமிழர் நாம் இன்று.
என்றும் மலரும் மலர்கள்.
கல்லறை வாசல் செல்லும்.
இவர்கள் வருகைக்காய்...எம்
இதயம் காத்திருக்கும்... பூத்திருக்கும்.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.

உண்மைக் க‌ண்க‌ள் எங்குமில்லை.


வெடி மழையில் நீ பிறந்தாய்...‍‍‍என்
வேதனையில் நீ கண் திறந்தாய்.
மண்ணை பார்க்க முன்னே _ உன்
க‌ண்ணை இழந்தாய் க‌ருவிற்குள்ளே...


வாழ்க்கை இன்று வீதியில்_உன் மாமன்
வாழ்க்கை முட் கம்புக்குள்.
வீடு பார்க்க சென்ற உன் தந்தை
வீதி திரும்பவில்லையே...


கோடு போட்டு வாழ்கின்றோம்.
கோரைப் புல்லை உண்டு சாகின்றோம்.
கொட்டும் ம‌ழையில் ந‌னைகின்றோம்.
கொடிய‌ விஷ‌ங்க‌ளால் சாகின்றோம்.


க‌ட்டிக் காத்த‌ த‌மிழ் இன‌ம்.
க‌ரைந்து போகுது செங்குருதியால்.
க‌ட்டிக் காத்த‌ த‌மிழ் ஈழ‌ம்.
காணாமல் போகுது அரக்கபடையால்.


உள்ள‌ம் திறந்து பேச‌...
உத‌விய‌ கர‌ங்க‌ள் இங்கில்லை.
உலகே உற்றுப் நோக்க‌...
உண்மைக் க‌ண்க‌ள் எங்குமில்லை.


ப‌த‌வி வ‌கிக்கும் உல‌க‌த் த‌லைவ‌ர்
ப‌ய‌ண‌ம் தொட‌ர் இல‌ங்கையாம்._த‌மிழ‌ர்
ப‌டும் வேத‌னையைப் பார்த்து விட்டு
ப‌த்திரிகைக்கு விஞ்ஞான‌ விள‌க்க‌ம் கொடுப்பாராம்.


க‌ண்ணீர் வ‌ற்றிய‌ விழிக‌ளால்...
க‌டைசி வ‌ரை காத்திருப்போம் உன் உற‌விற்காய்.
கை கால் அற்ற ஊன‌ங்க‌ளாய்....
சாகும் வ‌ரை காத்திருப்போம் உன் வ‌ர‌விற்காய்.


நீ வ‌ந்த‌த‌ன் பின் தான்
நமக்கு கிடைக்கும் த‌மிழீழ‌ம்.
நீ பேசும் வார்த்தையில் தான்
ந‌ம‌க்கு கிடைக்கும் த‌மிழ் வேத‌ம்.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.செவ்வாய், 22 டிசம்பர், 2009

தமிழீழக்கருவில் சேயாகட்டும்...!
எத்தனை உயிர்களடா.........!
எத்தனை உறவுகளடா.........!
அத்தனையும் - நம்
நாட்டு நலன் கருதி.


ஐயோ என்று அழுகிறது...!.
தொப்புள்க்கொடி உறவுகள்
அத்தனைக்கும் எப்படி
செய்ய முடியும்...
எம்மால் கைமாறுகள்...!

தமிழகமே.................!
நீங்கள் விடும் உயிர் மூச்சு
தமிழீழத்தில் கலக்கட்டும்...!


தமிழகமே...................!
நீங்கள் விடும் கண்ணீர்.
தமிழீழத்தில் மழையாக பெய்யட்டும்...!


காற்றும் மழையும் சேர்ந்து.....
எமக்கொரு நல்ல
வாழ்வை அளிக்கட்டும்...!


உங்கள் உறவுகள்......
எங்கள் உறவோடு
இணையட்டும்...!


அடுத்த யென்மம்
ஒன்றிருந்தால்..........
தமிழகத்து உயிர் நாடிகள்
தமிழீழக்கருவில் சேயாகட்டும்...!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

திங்கள், 21 டிசம்பர், 2009

அன்னையே..... அன்னையே......


அன்னையே..... அன்னையே......
அன்பு உள்ளத்தென்றலே.
என்னையே..... என்னையே......
அணைக்கத் துடிக்கும் கரங்களே.
உன்னையே...... உன்னையே......
என் அன்னையாய் ஏற்றிட
ஏழு ஜென்மம் போதுமா...? எனக்கு
எழு ஜென்மம் போதுமா...?


ஈரைந்து மாதம் கருவறையில் களித்தேன்.
ஈரேழு மாதம் தாய் முளையில் வளர்ந்தேன்.
தொல்லைகள் தொடர்ந்து வந்தாலும்...
தொற்று நோய்கள் என்னில் படர்ந்தாலும்...
விட்டு விலகாத தங்கத்தாய்
நீ........ மட்டும் தான் அம்மா.
முகவரியில் என் அகம் அறிய..
உலகிற்கு எடுத்துக்காட்டியவள்
நீ..... தானே நீ..... தானே அம்மா..!!


விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
உன் பாசவலையில்......
சிக்கி விட்டேன் அம்மா.
எட்டி நடை நடந்த போதும்
தட்டு தடுமாறி விழுந்த போதும்
அன்னை குரல் மட்டுமே
என் காதில் கனிந்தம்மா.
அன்னை மடித்தூக்கம்
பஞ்சு மெத்தை போலே
கைகள் இரண்டும் தலைவருட
இனிய கனவில் நான் மிதந்தேன்.
தென்றல் வந்து வீசிட...
பூவின் மணம் நாடிவர
கண்டேன் என் அன்னையை..!!


சின்னஞ் சிறு கைகளால்
சிறு மணல் வீடு கட்டினேன்.
சிற்றலைகள் வந்து அதை
தின்று விட்டு போனதங்கே.
என் அழுகைக் குரலைக் கேட்ட அன்னை
பதறி ஓடி வந்து அங்கே
அலையைப் பார்த்துக் கேள்வி கேட்டால்.
அதற்குப் பிறகு எனது மனம்
பறக்கும் பட்டாம் பூச்சியாய்......


நிலாவைப் பார்த்து கதைகள் பல
நினைத்து நினைத்து சொல்லித் தந்தாள்
நிலவை நான் கேட்ட போது
அதையும் எனக்குப் பிடித்துத் தந்தாள்
அன்னை முகத்தில்
அன்று கண்ட சிரிப்பு.- என்
இதய அறைக்குத் தனிச் சிறப்பு
அன்னை என்ற நாமம்
மூன்றெழுத்து மூச்சு.
பிள்ளை என்ற நாமம்
மூன்றெழுத்துப் பேச்சு
முல்லை மலர்ச்சோலை நடுவே..
புன்னகை அரசியாய் என் அன்னை


தமிழ் மணம் முளையிலே
ஊட்டி விட்டாய்.....
தரணியில் என் பெயர்
சரித்திரமாய் மாற்றி விட்டாய்
அன்னையர் தினத்தில்
என் அன்னைக்கு
அன்புப்பரிசு 'பா' வரிகள்


உங்கள் அபிசேகா

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வீசியது கடும் புயற்காற்று.....


தமிழீழத்தில் ஓர் தென்றல்
திசை மாறி வீசியது.....
அது நீ பிறந்த போது...!
தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல்
திசை தெரிந்து வீசியது.....
அது நீ தவண்ட போது...!

தமிழீழத்தில் சில்லென
வீசியது காற்று.....
அது நீ படிக்கும் போது...!
தமிழீழத்தில் மெல்லப்
படந்தது பருவக்காற்று.....
அது நீ பருவமடைந்த போது...!

தமிழீழத்தில் ஆங்காங்கே
வருடியது வாடைக்காற்று.....
அது நீ சாதனை புரிந்த போது...!
தமிழீழத்தில் திசை தெரியாது
வீசியது கடும் புயற்காற்று.....
அது நீ செல்லடித்து சாகும் போது...!

புயற்காற்றே நீ.......... எப்போது
தென்றலாய் மாறுவாய்.............?
தென்றலே நீ............ எப்போது
எம் தேசத்தை தாளாட்டுவாய்....?
தேசமே நீ............. எப்போது
எம் தமிழினத்தை சீராட்டுவாய்...?
பாராட்டுவாய்....? தாளாட்டுவாய்...?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஆம் தமிழீழம் தெரிகிறது...!பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடைந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராட்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

வட்டக் கண்ணழகி...!


வாழ்த்துக்கள் கூற வந்தோம்
வட்டக் கண்ணழகி...
பாட்டுக்கள் பாட வந்தோம்
பாவை முத்தழகி...

உற்றார் உறவு உலா வர...
உள்ள நட்பு உன்னைப் பாராட்ட...
உனக்குள் ஒரு நாணம்.
அது வந்தே... பல மாதம்.

உன் பாதம் பட்ட பூமி
வைரக்கல்லாய் மாறும்.
உன் பாசம் பட்ட பார்வை
உன்னை நோக்கி நகரும்.

தொட்டில் கட்டி தொட்ட கவி...
தோகை விரித்து ஆடுது பார்...
உனக்குள் பல திறமை
அது வந்ததே... எமக்கு பெருமை.

நீ பேசும் மொழிகள் எல்லாம்.
நீந்திப் போகுது நிலாவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்.
மண்ணில் மயங்குது மதுவாய்.

அழகிற்காய் அகராதியை புரட்டினேன்
அந்த நேரம் நீ... அவதரித்தாய்
உலக அழகியில் நீயும் ஒருத்தி...
உலகிற்கு மகிமையாம் உன் விருத்தி.

உன்னைப் பெற்ற உயிரும்.
ஊட்டி வளத்த உறவும்.
உதிரம் கலந்த பந்தபாசமும்
உன் உயர்விற்கு உயிர் கொடுக்கும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு...


தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு
குடில் இருக்கிறதா.....எம்
உடலுக்கு ஒரு ஆற‌டி அளவு
இடம் இருக்கிறதா.....?

தொப்புள் கொடி உறவே.... எம்
சோகக் கதை கேளாயோ.
முத்த‌மிடும் ஈழ ம‌ண்ணில்.....
நித்த‌மிடும் உதிர‌ம் பாராயோ...!

வாழ்வே தொலைந்த‌த‌ம்மா.....
வ‌ந்த‌ உற‌வும் பிரிந்த‌த‌ம்மா.!

வீடும்... சுடுகாடும்....
எம‌க்கு ஒன்று தா‌ன‌ம்மா.
வீதி ஓர‌ம் விளையும் புற்கள்...
எம‌க்கு உண‌வு தான‌ம்மா...!

தாக‌ம் எடுத்தால் குடிப்ப‌து....
க‌ழிவு நீர் தான‌ம்மா.
காத்திருந்து ப‌கையை தீர்க்கும்...
விஷ‌ப் பாம்புக‌ள் இங்கு அதிக‌ம‌ம்மா.

உண்மைக‌ள் அழிந்த‌தையா...
உல‌க‌க் க‌ண்க‌ள் தூங்குதையா.
முற் க‌ம்பிக‌ள் ந‌டுவே... எம்
வாழ்க்கை போகுதையா...!

அர‌சிய‌ல் வியாதிக‌ள் எம்மை வைத்து...
க‌ப‌டி விளையாடுதையா.
அரிய‌ணை ஆசையில் _ எம்மை...
அக‌தியாய் ஆக்கிப் பார்க்குதையா.

ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா

இளங்கவித் தென்றலின் பிறந்த தினமாம்..!!!


பனி விழும் பங்குனியில் - உன்
பாதம் பட்டது பாரினில்.
ஐந்தில் கற்ற அறிவை.......
அழியா வண்ணம் இன்றுவரை.!!!

அறுபத்திநான்கு கலையும்..
உனக்கே சொந்தமடி.- ஆனால்
நீ... மட்டும் எமக்குச் சொந்தமடி.!
உலகம் உன்னைப் போற்ற..
ஊரார் உன்னை வாழ்த்த..
உனக்குப் புரியும்
பிறப்பின் அர்த்தமடி.!!!

கவிதனை விழியால் வரைந்து
கலையென எண்ணி
அபிநயம் பிடித்துப்பார்.
அகிலமே உன் காலடியில்.!!!

செந்தமிழ் சேலையில்..
பைந்தமிழ் பாதையில்..
முத்தமிழ் மூளையில்..
முடிச்சு போட்டது பா வரிகளில்.!!!

இளங்கவித் தென்றலே.!
ஈழம் ஒரு நாள் உன்னை அழைக்கும்.
இனிய தமிழ் அங்கே ஒலிக்கும்
உன் அண்ணன் கையால் பரிசு கிடைக்கும்.!!!

வண்ண ஓவியம் வரைந்து.
வார்த்தையும் சேர்த்து புனைந்து
வாசலிலே கோலமாய் மாட்டிவிடு.
வசந்த மாளிகை ஆகிவிடும் உன் வீடு.!!!

மாதா... பிதா... உன் அருகில்.
தம்பி... தங்கை... உன் வழியில்.
அக்கா(மார்)...அத்தான்(மார்)... உன் விழியில்.
அனைத்து உறவுகளும்... உன் பிடியில்.!!!

கற்பனை கலந்த உலகம் - இதில்
நற்றம் காண்பது கடினம்.
விற்பனை கலந்த வழ்க்கை - இதில்
வெற்றி நடை போடுவது கடினம்.

கற்றது கரையாமல்....
கல்லாதாரை கனிய
வைப்பது உன் கடமை.!
வந்த புகழ் அழியாமல்
வளப்படுத்துதல் உன் கடமை.!
கதைகளுக்குள் நீ புகுந்து - திரைக்
கதையாய் மாற்றிவிடு - அதைக்
கண்டு களிப்பது....எம் கடமை.!

உ.........ன்............னா........ல்..
முடியும் என நினைத்தால்..
முலதனம் தேவையில்லை.
முன்னேற்றம் காண்பது
உறுதி என்றால்...
முடிவிற்கு எல்லையே இல்லை..!!!


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

தோற்க வந்த படையல்ல புலிப்படை...!


தோற்க வந்த படையல்ல புலிப்படை.
சோர வந்த படையல்ல தமிழ்ப்படை.
சாக வந்த படையல்லோ கூலிப்படை.
காட்டிக் கொடுக்க வந்த...
படையல்லோ துணைப்படை - எம்மைக்
காட்டிக் கொடுக்க வந்த...
படையல்லோ துணைப்படை.

உலகம் அறியும் உண்மை நிலைகள்.
ஊமைகளாய் மாற்றுது சில ஊடகங்கள்.
பேருக்குத்தான் வல்லரசு...
பேச்சுக்குப் போனால் வாயடைப்பு.
தமிழினக் குமுறல்கள்...
தரணியில் ஒலிக்கிறது.
தாயகத்துக் கடமையை...
தயங்காமல் செய்
உலகத்தமிழினமே

நீதி நியாயம் நெடுந்துரப் பயணம்.
அநீதி அநியாயம் ஈழத்தில் நிலந்தரம்.
பேச்சுக்குப் போனால்...
காதும் காதும் பேசுகிறது.
பேச்சு முடிந்து வந்தால்...
வானில் குண்டு மழை பொழிகிறது.
மூச்சு விட நேரமில்லை முத்தமிழே.
முகம் பார்த்துப் பேச...
முடியவில்லை உலகத்தமிழரே.

உன்னால் முடியும் உலகத் தமிழா - எம்
உரிமைக்காய் போராட.
உண்ணாமல்... உறங்காமல்...
உயிரைக் கொடுக்கிறோம்...
அரக்கனுக்கு இரையாய் .
பாதுகாப்பு வளையம் வரவழைத்து.
பகிரங்கமாய் சுட்டுத் தள்ளுது அரசு.
பார்க்கும் விழிகள் கடலாய் மாற...
கேட்டும் செவிகள் சுமையைத்
தாங்க முடியாமல் தவிக்கிறது...

வார்த்தையால் வரைய முடியுமா...
வன்னி மக்கள் உணர்வை...
வானமே எமக்கு உயிர் பிச்சை கொடு
வரும் எதிரியை - உன்
வார்த்தையால் அடக்கி விடு.
தாயை சேயை மட்டும்...
இழக்கவில்லைத் தோழா - எம்
தமிழினனே அழிகிறது சோதரா
தன்மானத் தமிழனே...
தமிழுக்காய் குரல் கொடு தமிழா.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 19 டிசம்பர், 2009

பூமிக்கு வந்த நிலாவே....


பங்குனியில் படர் நிலவில்....
பாதம் பதித்திட்ட பாவை நீ....
பார் உன்னைப் போற்ற....
பல்கலையும் கற்றுவிடு...!

தமிழினம் உன்னைப் வாழ்த்த...
தமிழ்மொழி பேசப் பழகிவிடு...!
தமிழ் ஈழத்தில்.....உன் வருகைக்காய்....
தாய்மாமன் காத்திருப்பான்...!!

எட்டி நடை போடும் அன்னமே...!
ஏன் பிறந்தாய் பூமியில் சொல்லவா...?
கலைகள் அனைத்தும் கற்று விடு....!
கலையுலகில் உன் வாழ்க்கையை
திருப்பி விடு....!

கற்ற கல்வி கைகொடுக்க...
பெற்ற அன்னை பிதா....
தோள் கொடுப்பார்...!
உற்றார் உறவு - உன்
உடன் இருக்க....
உயரப்பறப்பாய் நிலா வரை...!

அகவை ஒன்றைத்தாண்டி விட்டாய்.
அகிலம் போற்றும்.... உன்
அதிசையங்களுக்காய் காத்திருக்கும்
உறவுகள்..... உயிர் நாடிகள்......!!!

ஈழ‌ம‌க‌ள் உங்கள் அபிசேகா


பெண்ணை நம்பாதே......!!


பெண்ணின் மனம்
அடிக்கடி மாறுவதுண்டா.......?
பெண்ணைப் பெற்ற அன்னை கூட
அடிக்கடி மாற்றுவதுண்டா......?

உன்னை நம்பி இங்கு நான்
வந்தது பாதி.....!
உன்னை எண்ணி உறங்காமல்
தவித்தது பாதி.....!

காதலுக்கு முற்றுப் புள்ளி
வைத்தவள் நீ........ தான்.
கடைசி வரை காத்திருப்பேன் என
வாக்களித்ததும் நீ........ தான்

உன்னை நம்பி........
உன்னை நம்பி........
ஊட்டி விட்டாய்
நஞ்சை நெஞ்சில்.

பூவைப் போல - உன்
மனசு பூத்திருந்தது.
கல்லைப் போல மாற்றி விட்டாய்
ஏன் தெரியல.......!

வாக்குப் போட்ட விதத்தில்
தவறு இருந்ததோ........!
வந்தவனைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!

உன்னைக் கண்டு தாய் நினைவை
மறந்தது விட்டது ஒரு காலம்.
என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை
வந்தது விட்டது மறு காலம்...!!!

தேனைப் போல - உன்
வார்த்தை இனிமையானது.
தேளைப் போல மாற்றிவிட்டாய்
ஏன் தெரியல.......!

குறிப்புப் பார்த்த விதத்தில்
தவறு இருந்ததோ.......!
சுளை சுளையாய் பணத்தைக் கண்டதும்
என்னை மறந்து விட்டதோ.......!

உன்னைக் கண்ட நாள் முதல்
உற்று நோக்க வில்லை - வேறு
பெண்ணுடல்........
என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன்
தனிமையில்..........

ஈழ‌ம‌க‌ள் உங்கள் அபிசேகா


உணர்வுகள் உணவின்றி தள்ளாட....


உணர்வுகள் உணவின்றி தள்ளாட...
உதிக்கும் சூரியன் நெருப்பாக...
உலகத்தமிழர் கைகள் எல்லாம்...
உதவி கேட்டு துடிக்கின்றது...

ஈழ மக்கள் விடிவிற்காய்...
தினமும் இதயம் அழுகின்றது.
உறவுகள் அங்கே உயிரின்றி...
உண்மைகள் இன்னும் உடையவில்லை.

காட்டுக்கும் மேட்டுக்கும் இடையில்.
காலையும் மாலையும் உறக்கம்.
நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையில்.
நல்ல அரசியல் வாதி உறக்கம்.

வீட்டுக்கும் வீதிக்கும் இடையில்.
ஆறடிக் குழிகள் அதிகம். - எம்
உறவுக்கும் எமக்கும் இடையில்.
ஓராயிரம் மைல்கல் அதிகம்.

தமிழர் கையில் இங்கு புலிக்கொடி.
ஈழத்தமிழர் கையில் அங்கு உயிர்க்கொடி.
தாயம் கண்டது தமிழ் வெறி - இனித்
தரணியை ஆழ்வது தமிழ் மொழி

கல்லறை கண்டது காவியம்.
காளைகள் சிதைத்தது ஓவியம்.
கருவறை கண்டது பாலின் நிறம்.
கலங்கியே போனது சேயின் நிறம்.

இருகை கூப்ப இறைவன் இல்லை .
மறுபடி பேச வார்த்தை இல்லை
ஒருபடி உயர உதவி இல்லை.
ஒருமித்து வாழ வழியும் இல்லை.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

தமிழினமே புலிப்படை.

தொலைந்த விடியலைத் தேடுகின்றோம்.
தூரத்தே காவலரண்கள்...
துணை போகின்றனர்...
தேசத் துரோகிகள்.

களத்திலே வெற்றியின் கடினம்.
கண்ட பின் தான் எமக்கு மரணம்.
போராடுவது சுலபமல்ல...
போராடினால் புரியும் வித்தையுமல்ல...!

தொலை நோக்குப் பார்வை.
தொலைந்தது எதிரியின் ஏவுகணை.
விடிவிற்காய் ஏங்குகின்றோம்.
வீரத்தோடு போராடுகின்றோம்.

உண்மை உலகத்தின் கண்கள்.
உதிரம் ஊர்ரெடுக்க...
உருவம் உருக்குலைய...
உள்ளம் ஊமையாகவில்லை.
தமிழரின் படையல்ல...
தமிழினமே புலிப்படை.

ரவைகள் நெஞ்சில் பாயும் வரை.
படரும் பார்வை நெடுந்தூரம் வரை.
புனிதமான படை தான்...புலிப்படை.
கற்பிலே புனிதம்...கரத்திலே புனிதம்...
கல்லறையிலும் புனிதம்.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

எங்கள் தேசம் இன்று எதிரியின் பிடியில்.எங்கள் தேசம்வளமான மண்ணில்.
எங்கள் தேசம் விளையும் மண்ணில்.
எங்கள் தேசம் அன்று வீரர் கையில்.
எங்கள் தேசம் இன்று எதிரியின் பிடியில்.

குண்டு மழை பொழிகிறது.
குருதி வெள்ளம் பாய்கிறது.
கூட உள்ள உறவுகள் மடிகிறது.
கூட்டுச் சேர்ந்த காக்கைகள்...
கொத்திக் கொத்திக்
கத்திக் கத்திக் பிணம் தின்னுகிறது.

சாவு மணி கேட்கிறது.
நாய்கள் கூட்டம் - மனித
எலும்பிற்காய் அடிபடுகிந்தது.
சுகந்தம் வீசும் வேளையிலே.
துர்நாற்றம் வீசுது எம் பூமியிலே.
விசைப் புகையால் மேகம் மறைகின்றது.
துக்கம் தாங்க முடியாமல்
முகிலும் அழுகின்றது.

தாயின் கதறல் தங்கை கதறல்
தனித்தனியே கேட்கிறது.
சுடுகாடு போகவில்லை - வீடே
சுடுகாடாய் மாறிவிட்டது.
ஒரு குழியில் ஒன்பது பேர்.
மறு குழியில் பத்தொன்பது பேர்.
புதைக்கும் நிலை ஆகிவிட்டது.
நரிகள் போல நாயும் ஊளையிட்டது.
நாம் வளர்த்த பசுவும்.....
எமனைக் கண்டு கதைக்கத் தொடங்கியது.

வயிற்றில் பசி எடுக்கிறது.
வாந்தி கூட வருகிறது.
உண்ண மட்டும் முடியவில்லையே.
தந்தை நெஞ்சில் பாரம்.
தம்பி நெஞ்சில் வீரம்.
அண்ணன் வழியே தூரம்.
அடைந்து விட்டான் அதிவேகம்.
பயிற்சி எடுத்து..... பயிற்சி கொடுத்து...
பயணம் தொடர்கிறான்...

போன பாதை திரும்பவில்லை.
போட்ட கணக்கு மாறவில்லை.
தன்னைச் சுற்றி வெடி மருந்தை...
மாலையாக அணிந்தான்.
சாவை நோக்கிச் சென்றான்.
சக போராளிகளை...
சார்ந்தமாய்ப் பார்த்தான்.

கண்ணீர் தவழும் விழிகளிலே.
கடமை கண்ணியம் தென்பட்டது.
வாய்மை பேசும் வாய் வழியே.
வார்த்தைகள் இலட்சியமாய் மாறியது.
புத்துணர்வில் புறப்பட்டான்.
புதுக்கனவினை புணைந்துவிட்டன்.
புவியை விட்டு சென்றுவிட்டான்.
புது உலகை படைத்து விட்டான்.

சரித்திர ஏட்டில் புகுந்துவிட்டான்.
சரித்திர நாயகன் ஆகிவிட்டான்
இவன் பாதச்சுவடில்......
பதிந்த இலட்சியங்கள்.
ஆழம் விழுது போல்.
ஆயிரம் மடங்காகியது.
அண்ணன் வழியே தனி வழி
அதை நாமும் அடைவோமென
உறுதியளி...... உறுதியளி....!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

முதல் முறை சந்தித்தல்...!

தேவதையா......! நீ.. ஒரு தேவதையா..!
தேவதையா......! அவள் ஒரு தேவதையா..!
என் விரல்கள் பட்டால்.....
சிலித்திடும் உன் அங்கம்.
கண்கள் நோக்க....
இமைகள் பேச....
புன்னகை தவழுது செவ்விதழில்.
தேவதையா......! நீ.. ஒரு தேவதையா..!
தேவதையா......! அவள் ஒரு தேவதையா..!

முதல் முறை காலடி வைத்தவளே..!
என்னிதயத்தில் இடம்பிடித்தாய்.
உனக்கென நானும்.....
எனக்கென நீயும்.....
உயிர் மூச்சில் இணைந்து விட்டோம்.
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உன்னுடன் வாழ்வது உறுதி.
ஓரக்கண்ணால் பார்க்காதே...
ஓதியதெல்லாம் மந்திரம்.
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.

முதல் முறை உன் நாமம்..!
என்னிதயத்தில் பதித்துவிட்டாய்.
என்னையே உனக்கு.....
உன்னையே எனக்கு.....
இறைவன் இணைத்துவிட்டான்.
ஒருநாள் வாழ்ந்தேன் கற்பனையில்.
ஒன்பது குழந்தை என்னருகில்.
கோபத்தோடு பார்க்காதே...
வெட்கம் எனக்கு வந்துவிடும்.
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.

முதல் முறை ஒரு பாடல்..!
உனக்காய் புனைந்துள்ளேன்
முறைப்படப் சங்கீதம்......
முடப்க்கவில்லை உன் ஜீவன்.....
அங்கும் இங்கும் சேர்த்த வரிகள் இங்கே.
ஒருநாள் பார்த்தேன் உன் விழிகள்...
உருவம் அமைத்தேன் என் விழியில்.
சிலையைப் போல உன் மேனி.
செதுக்கிய கலைமான் இன்றெங்கே..........?
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.


என்ன கொடுமை இங்கே - தமிழா

என்ன கொடுமை இங்கே - தமிழா
ஏன் இந்தக் கொடுமை இங்கே

சொல்லி வைத்துச் சாகவில்லை.
சொந்தம் சுகம் பார்க்கவில்லை.
போற இடத்தில் குடிமனைகள். - அதில்
போகுது எங்கள் உயிர்கள்.....
போகுது எங்கள் உயிர்கள்.

சின்னஞ் சிறு கைக்குழந்தைகள்.
சின்னா பின்னமாய்..... சிதறிய தசைகள்.
முத்து முத்து ஆசைகள்.....
முகவரி தெரியாமல் போகின்றது.....
முகவரி தெரியாமல் போகின்றது.

சொந்த வீடும் இல்லை.....
சொல்ல உறவும் இல்லை.
சோகக்கதை கேட்க.....
யாருக்கும் நேரம் இல்லை - இங்கே
யாருக்கும் நேரம் இல்லை.

இன்று பார்த்த முகங்கள் எல்லாம்.....
நாளை பார்க்க முடியவில்லை.
நாங்கள் கண்ட கனாக்கள் எல்லாம்.
கரைந்து போகுது கண்ணீரிலே.....
கரைந்து போகுது கண்ணீரிலே.

ஆண்டவன் இங்கு இல்லை.....
அகதிகள் ஆபத்தில் இங்கு.
சிரிப்புச் சத்தம் கேட்பதில்லை - இங்கு
செல்கள் சத்தம் அலை அலையாய்.....
செல்கள் சத்தம் அலை அலையாய்.

வீடு கூட எரிகிறது.....
வீட்டில் உள்ள உயிர்கள் கருகுகிறது.
நாளை வரும் செய்திகளில்
யார் உயிர் போனது தெரிகிறது.
யார் உயிர் போனது தெரிகிறது.

சொத்து சுகம் தேவையில்லை.....
சொர்ப்பனமும் தேவையில்லை.
சொந்த பூமி நமக்கு இருந்தால்.....
வயிற்றுப்பசி போய் விடுமே.
வயிற்றுப்பசி போய் விடுமே.

கூடு மட்டும் போதும் எமக்கு.
கூடி இருந்து வாழ்வதற்கு.....
கண்ட துன்பம் போதும் எமக்கு.
நாமும் வருகிறோம் போராடுவதற்கு...... - இன்றே
நாமும் வருகிறோம் போராடுவதற்கு...!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.
மனசே... மனசே....மாறிவிடு.மனசே... மனசே....மாறிவிடு.
மழையில்..நனைந்து ஓடிவிடு.
உனக்காய் வரைந்த கவிமல‌ர்
என்னிதயத்தில் விரிந்தது முள்ளாய்.

இரத்தம் கசியுது விழியில்
இருளாய்ப் போனது உலகம்.
வாழும் வாழ்க்கை நெருப்பில்
பிணமாய்ப் போனது அங்கம்

வார்த்தை எல்லாம் கூட்டில்
வ‌ளைந்து போன‌து சட்டம்.
கால்கள் இன்று ரோட்டில்
தனித்துப் போகுது பயணம்.

கவலை எல்லாம் தன் உறவில்
தாயாகப் போகிறாள் வெகு விரைவில்.
தூங்கப் போகிறாள் மரநிழலில்
துணையின்றித் தவிக்கிறாள் பசிவலியில்.

முகவரி அறியா ஊரில்
பேசுவது புரியாத மொழி.
குளியல் போட்டால் குளநீரில்
ஆடைய‌ங்கம் உலரத்தேடினால் வெய்யில்

கோடிபுண்ணியம் கொண்ட கோவில்
கொடுத்தது அன்னதானம் கையில்.
அன்னமிட்ட அவள் கரங்களை
அழைக்கிற‌து கோவில் குருக்க‌ள்.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

தலைமகனை இழந்த தாயின் கதறல்....!


கருவில் கண்ட கனவு
களைந்து போனதையா...
உன் உருவில் கண்ட நினைவு
கலங்கிப் போனதையா....!

பத்து மாதம் உன்னைப்...
பெற்றெடுக்கப் பட்ட துன்பம்
உன்னைக் கண்டவுடன்...
என்னை விட்டுப் போனதையா....!

தலைமகனாய்த் தரணியிலே
தடம் பதித்திட்ட நாயகனே...
தாங்கவில்லையடா - இந்த
பூமி உந்தன் வருகைதனை....!

எட்டி நடை போடும் அன்னமாய்...
எம்மைச் சுற்றிச் சுற்றி
வலம் வந்த கண்ணழகா...!
யார் கண் பட்டதோ
உன் விழி மூட....!

பிறர் பிள்ளை தலை தடவி
பெருமைப் பட்டேனையா...
என் பிள்ளை தானாய் வளருமென
கனவு கண்டேனையா....!

பாலுட்டும் போது பாசத்தை
மட்டும் தான் ஊட்டினேனையா...
நீ... போகப் போவது தெரிந்திருந்தால்
வீரத்தையும் சேர்த்து ஊட்டியிருப்பேனையா....!

உன் வரவு காணாமல் வாசலிலே
உன் உறவுகள் துடிக்குதையா...
ஒரு இரவு வந்தாலே
உன் வீடு சுடுகாடாய் மாறுதையா....!

காலை என்னைக் கட்டியணைத்து
பிறந்த நாள் முத்தம் தந்தாயையா...
மாலை என்னைக் கதறவைத்து
உன்னுயிரையே பரிசாய் தந்தாயையா....!

பாத்துப் பார்த்து உனைப்
பத்திரமாய் வளர்த்தேனையா...
பார்த்த விழி பூத்திருக்கப்
பாவிகள் உனக்கு
பாடை கட்டி விட்டார்களையா....!

அனுக்குட்டி என்று
ஆயிரம் தடவை அழைப்பேனையா...
இந்த அம்மாவை விட்டு விட்டு
எங்கே குட்டி போனாயையா.....!

உன்னுடன் பிறப்புக்கள் அழும்குரல்
உனக்குக் கேட்கவில்லையாயையா...
உன் தம்பிமார் படும் வேதனையை
என்னால் பார்க்க முடியவில்லையையா....!

உன் தந்தை உன்னில்
உயிராய் இருந்தாரையா...
உன்னுயிர் போனபின்
உள்ளம் உடைந்து போனாரையா....!

உன்னுயிருக்குப் பதிலாய்
என்னுயிர் போயிருக்கலாமேயையா...
நீ இல்லா இவ்வுலகில்
என்னுடலும் பிணமாய் மாறிவிட்டதையா....!

உன் ஆத்மா சாந்திய‌டைய‌
தின‌மும் பிராத்திப்போமையா...
உன் நினைவுக‌ள் என்றும்
எம் உயிரில் உறைந்திருக்குமையா....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 17 டிசம்பர், 2009

காதலுக்கு ஜாதிமதம் இல்லை...!

கண்ணீரில் மிதக்கின்றது....
கண்மணிகள்.
கன்னங்கள் தாங்குகின்றது
....
கண்ணீர்த்துளிகள்.
எண்ணங்கள் சுரக்கின்றது....
குரல்வளையில்.
என் மனம் துடிக்கிறது....
உந்தன் நினைவில்....!

இறைவன் படைத்தான்....
இதயம் ஒன்று - அது
யாருக்குச் சொந்தம்
புரியவில்லை இன்று
உலகறிந்த உண்மை எல்லாம்....
ஊமையாகிப் போனதிப்போ.
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊனமாகிப் போனதிப்போ....!

பாசம் வைத்தாள்....
எந்தன் உயிரில் - அது
பட்டுப் போனது
ரோஜா செடிபோல்.
நேசம் வைத்த உறவு எல்லாம்....
வேசம்போட்டு பாடுதிப்போ.
நீயும் நானும் மலரும் நேரம்
ஜாதிமதம் தடுக்குதிப்போ....!

ஆணும் பெண்ணும்
ஜாதி இரண்டு - அது
ஆதாம் ஏவாள்
ஆட்சி அன்று.
காலம் கனிந்த கண்கள் எல்லாம்....
கருத்தை விரித்துப் பார்க்குதிப்போ.
காதல் செய்த பாவம் என்ன
கண்ணீர் மழை பொழியுதிப்போ....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.


இலங்கையில் பாதி தமிழீழம்...!

தோல்விகள் வரும் போது
துவண்டு... விடாதே தமிழா.
தோல்விக்குப் பின்னே வெற்றி
அதை மறந்து விடாதே தமிழா.
இலட்சியப் பாதை நோக்கி
அடி... எடுத்து வை தமிழா.
இலங்கையில் பாதி தமிழீழம்
அதை மறந்து விடாதே தமிழா..(2)

மானத்தமிழா..... நீ... மறத்தமிழா...
மானம் காக்க..... நீ... புறப்படடா...(2)

ஆணும் பெண்ணும் வேறல்ல
சமத்துவம் படைக்க முன் வருவோம்.
ஆயுதம் ஏந்தும் எம்கரங்கள்
அழிக்கத்துடிக்குது எதிரியின் பாசறையை.

வானம் இடிந்து வீழ்ந்தாலும்...
வடித்த இலட்சியம் கரையாது.
வடிவம் மாறிப் போனாலும்....
எடுத்து வைத்த பாதம் திரும்பாது.
அன்னையாய் தாய்மண்ணை அணைத்தோம்.
தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம்.
கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம்.
உறவாய்.... தமிழினத்தையே... உணர்ந்தோம்.

கல்லறை வாசல் சென்றாலும்
கருவறையாய் நினைத்து உறங்கிடுவோம்
எதிரிகள் பார்வை பட்டாலும்.
பாசறையாய் நினைத்து விழித்திடுவோம்.
எதிரியின் ஏவுகணையை அழித்தோம்.
எட்டப்பன் கூட்டத்தை ஒழித்தோம்.
எட்டிப்பார்க்கும் நாடுகளை தடுத்தோம்.
ஏனிவர்கள்.... வந்தார்களென.... புரிந்தோம்.

தமிழகம் தம்பி சீமானை சிறைப்பிடித்தால்
சீறி எழும்பும் சீமானின் தமிழ்ப்படை. .
தமிழகம் தமிழில் குறை பிடித்தாலும்
தீப்பொறியாய் மாறும் பல சீமான்கள்.
சீமைத் தமிழன் சீமான்
சீமந்தத் தமிழன் ஆகிவிட்டான்.
முற்பிறவி இவன் தமிழீழம்.
முடிந்தவரை குரல்கொடுக்கின்றான் ஈழத்தமிழருக்காய்.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

காற்றே........ நீயும் பெண் தான்.

காற்றே........ நீயும் பெண் தான்.
என் சுவாசம்.... என்றும் நீ தான்.
எனக்குள்ளே... குடி கொண்டாய்
என் மீது... உயிர் வைத்தாய்.
உலகே... இதோ இதோ.
என் காதல்... கதை இதோ.

காலை க‌ண்ட‌ க‌ன‌வு
காத‌ல் ப‌ண்ண‌ உத‌வும்.
உயிரே... நீ தான் என் தென்ற‌ல்.
உண‌ர்வே... நீ தான் சொல்லு தூது.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

மாலை கொண்டு உன்னை
வாழ்த்த‌ வேண்டும் ம‌ல‌ரே.
உற‌வே... நீ தான் என் கண்க‌ள்.
உல‌கே... நீ தான் எம் தூண்க‌ள்.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

தாயில் வைத்த‌ பாச‌ம்
உன்னில் வைக்க‌ ஆசை.
ந‌தியே... நீ தான் என் துணை.
ந‌ல‌மே... வாழ‌ எம் தாய் துணை.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

ஈழமகள் உங்க‌ள் அபிசேகா

கரிகாலக் கடவுளாய் அவதார மானிடன் நீ...!

விதியோடு விளையாடிய விழியே...
வீரப் புலியோடு களம் கண்ட கதிரே...
உலகிற்கு தழிழ் மொழி காட்டிய குருவே...
எம் இனத்திற்கு தமிழ் ஈழம் காட்டிய உயிரே...

தமிழ் மானம் காத்த தங்கத் தலைவா_ உன்
பாதம் பட்ட தாய் மண்ணிற்கு...
ப‌ல்லாயிர‌ம் முத்த‌ங்க‌ள் ச‌ம‌ர்ப்ப‌ண‌ம்.
உன் வ‌ழி த‌னை ஒளியாய் மாற்றிட‌
தீப்பொறியாய் மாறிய‌ மா... வீர‌ர்க‌ளே...
த‌லை வ‌ண‌ங்குகின்றோம் ஈழ‌த்த‌மிழ‌ர் நாம்.

முப்ப‌து ஆண்டுக‌ள் மேல் உன் அனுப‌வ‌ம் க‌ண்டு
முன் ந‌க‌ர்வை முறிய‌டிக்காத‌ இல‌ங்கை அர‌சு
வ‌ல்ல‌ர‌சுட‌ன் கை கோர்ப்ப‌து நியாய‌மா...?
முக‌வ‌ரி ஒன்று முழுமையாய்க் கிடைக்க‌...
முப்ப‌டைக்கும் முக‌ம் கொடுக்கும் த‌ம்பி க‌ரிகால‌னே...
த‌லை வ‌ண‌ங்குகின்றோம் உல‌க‌த்த‌மிழ‌ர் நாம்.

வ‌ய‌தொன்று உன்னைக் க‌ட‌ந்தாலும்
வாழிப‌ கால‌த்தில் வ‌டித்த‌ இல‌ட்சிய‌ங்க‌ள்...
ந‌ன‌வாகும் நேர‌மிது
த‌மிழீழ‌த் தாக‌ம் த‌ணிய‌...
த‌ன் மான‌த் த‌மிழ‌ர் நாம்
த‌லை நிமிர்ந்து வ‌ருகின்றோம் போராட‌.

உள்ள‌த‌தால் உய‌ர்ந்த‌ ம‌னித‌ன் நீ...
உருவாக்குவ‌தில் இய‌ந்திர‌ ம‌னித‌ன் நீ...
மான‌ம் காக்கும் ம‌ற‌த் த‌மிழ‌ன் நீ...
ம‌த‌ங்க‌ள் போற்றும் மான‌த் த‌மிழ‌ன் நீ...
கால‌த்தால் அழியாத‌ அதிச‌ய‌ ம‌னித‌ன் நீ...
க‌ரிகால‌க் க‌ட‌வுளாய் அவ‌தார‌ மானிட‌ன் நீ...

உல‌க‌ம் உன்னைக் க‌ண்டு அச்ச‌ம்.
உன‌க்கு இருக்கிற‌து ஏதோ ம‌ச்ச‌ம்.
பார்வையால் ப‌லி எடுத்தாய் துரோகியை
கூர்மையால் ப‌டுகுழியில் வீழ்த்தினாய் எதிரியை
நேர்மையால் வ‌ளைத்துப் பிடித்தாய் த‌மிழ‌ரை _ எம்
நெஞ்ச‌ம் ஒருபோதும் ம‌ற‌வாது எம் த‌ங்க‌த் த‌லைவ‌ரை

ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

Related Posts with Thumbnails