ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 17 டிசம்பர், 2009

இலங்கையில் பாதி தமிழீழம்...!

தோல்விகள் வரும் போது
துவண்டு... விடாதே தமிழா.
தோல்விக்குப் பின்னே வெற்றி
அதை மறந்து விடாதே தமிழா.
இலட்சியப் பாதை நோக்கி
அடி... எடுத்து வை தமிழா.
இலங்கையில் பாதி தமிழீழம்
அதை மறந்து விடாதே தமிழா..(2)

மானத்தமிழா..... நீ... மறத்தமிழா...
மானம் காக்க..... நீ... புறப்படடா...(2)

ஆணும் பெண்ணும் வேறல்ல
சமத்துவம் படைக்க முன் வருவோம்.
ஆயுதம் ஏந்தும் எம்கரங்கள்
அழிக்கத்துடிக்குது எதிரியின் பாசறையை.

வானம் இடிந்து வீழ்ந்தாலும்...
வடித்த இலட்சியம் கரையாது.
வடிவம் மாறிப் போனாலும்....
எடுத்து வைத்த பாதம் திரும்பாது.
அன்னையாய் தாய்மண்ணை அணைத்தோம்.
தந்தையாய் தமிழ்மொழியை சுவைத்தோம்.
கடவுளாய் தங்கத்தலைவரை நினைத்தோம்.
உறவாய்.... தமிழினத்தையே... உணர்ந்தோம்.

கல்லறை வாசல் சென்றாலும்
கருவறையாய் நினைத்து உறங்கிடுவோம்
எதிரிகள் பார்வை பட்டாலும்.
பாசறையாய் நினைத்து விழித்திடுவோம்.
எதிரியின் ஏவுகணையை அழித்தோம்.
எட்டப்பன் கூட்டத்தை ஒழித்தோம்.
எட்டிப்பார்க்கும் நாடுகளை தடுத்தோம்.
ஏனிவர்கள்.... வந்தார்களென.... புரிந்தோம்.

தமிழகம் தம்பி சீமானை சிறைப்பிடித்தால்
சீறி எழும்பும் சீமானின் தமிழ்ப்படை. .
தமிழகம் தமிழில் குறை பிடித்தாலும்
தீப்பொறியாய் மாறும் பல சீமான்கள்.
சீமைத் தமிழன் சீமான்
சீமந்தத் தமிழன் ஆகிவிட்டான்.
முற்பிறவி இவன் தமிழீழம்.
முடிந்தவரை குரல்கொடுக்கின்றான் ஈழத்தமிழருக்காய்.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails