ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வட்டக் கண்ணழகி...!


வாழ்த்துக்கள் கூற வந்தோம்
வட்டக் கண்ணழகி...
பாட்டுக்கள் பாட வந்தோம்
பாவை முத்தழகி...

உற்றார் உறவு உலா வர...
உள்ள நட்பு உன்னைப் பாராட்ட...
உனக்குள் ஒரு நாணம்.
அது வந்தே... பல மாதம்.

உன் பாதம் பட்ட பூமி
வைரக்கல்லாய் மாறும்.
உன் பாசம் பட்ட பார்வை
உன்னை நோக்கி நகரும்.

தொட்டில் கட்டி தொட்ட கவி...
தோகை விரித்து ஆடுது பார்...
உனக்குள் பல திறமை
அது வந்ததே... எமக்கு பெருமை.

நீ பேசும் மொழிகள் எல்லாம்.
நீந்திப் போகுது நிலாவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்.
மண்ணில் மயங்குது மதுவாய்.

அழகிற்காய் அகராதியை புரட்டினேன்
அந்த நேரம் நீ... அவதரித்தாய்
உலக அழகியில் நீயும் ஒருத்தி...
உலகிற்கு மகிமையாம் உன் விருத்தி.

உன்னைப் பெற்ற உயிரும்.
ஊட்டி வளத்த உறவும்.
உதிரம் கலந்த பந்தபாசமும்
உன் உயர்விற்கு உயிர் கொடுக்கும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails