ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

ஆம் தமிழீழம் தெரிகிறது...!பார்வையின் வேகம்
படைத்தவன் கண்ணிற்கு
புரியாவிட்டாலும்.
எம்மை வாழவைப்பவன்
கண்ணிற்கு புரிகிறது.

அடைந்த காட்டில்
அதிசய மனிதன்.
தாய் மண்ணை மீட்க.....
தனி இராட்சியம் அமைக்க.....
தன்னைத் தயார் படுத்துகின்றான்.

அயல் நாட்டு மூளை
இவனுக்குத் தேவையில்லை.
உடம்பெல்லாம் மூளை
இவனுக்கு உதயமாகியுள்ளது.

யார் யாரோ படைத்த.....
போர்க்கருவிகளை
தன் வல்லமையால்
வெடிக்கவும் வைப்பான்.
செயல் இழக்கவும் வைப்பான்.

இவனின் பாதச் சுவடுகளில் - இன்று
எந்தனையோ ஒளிச்சுடர்கள்.
ஆணிவேராய்.......அத்திவாரமாய்......
எம் நாட்டிற்கே பெருமையல்லவா.....?

அகவை அடுத்தடுத்துத் தாண்டினாலும்.
இவனின் இலட்சியக் கனவுகள்.....
இன்று நனவாகி....... நாலாபக்கமும்.
ஒளி விட்டுப் பிரகாசித்து வருகின்றது.
ஆம் தமிழீழம் தெரிகின்றது.......!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails