ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு...


தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு
குடில் இருக்கிறதா.....எம்
உடலுக்கு ஒரு ஆற‌டி அளவு
இடம் இருக்கிறதா.....?

தொப்புள் கொடி உறவே.... எம்
சோகக் கதை கேளாயோ.
முத்த‌மிடும் ஈழ ம‌ண்ணில்.....
நித்த‌மிடும் உதிர‌ம் பாராயோ...!

வாழ்வே தொலைந்த‌த‌ம்மா.....
வ‌ந்த‌ உற‌வும் பிரிந்த‌த‌ம்மா.!

வீடும்... சுடுகாடும்....
எம‌க்கு ஒன்று தா‌ன‌ம்மா.
வீதி ஓர‌ம் விளையும் புற்கள்...
எம‌க்கு உண‌வு தான‌ம்மா...!

தாக‌ம் எடுத்தால் குடிப்ப‌து....
க‌ழிவு நீர் தான‌ம்மா.
காத்திருந்து ப‌கையை தீர்க்கும்...
விஷ‌ப் பாம்புக‌ள் இங்கு அதிக‌ம‌ம்மா.

உண்மைக‌ள் அழிந்த‌தையா...
உல‌க‌க் க‌ண்க‌ள் தூங்குதையா.
முற் க‌ம்பிக‌ள் ந‌டுவே... எம்
வாழ்க்கை போகுதையா...!

அர‌சிய‌ல் வியாதிக‌ள் எம்மை வைத்து...
க‌ப‌டி விளையாடுதையா.
அரிய‌ணை ஆசையில் _ எம்மை...
அக‌தியாய் ஆக்கிப் பார்க்குதையா.

ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails