ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

புதன், 23 டிசம்பர், 2009

உண்மைக் க‌ண்க‌ள் எங்குமில்லை.


வெடி மழையில் நீ பிறந்தாய்...‍‍‍என்
வேதனையில் நீ கண் திறந்தாய்.
மண்ணை பார்க்க முன்னே _ உன்
க‌ண்ணை இழந்தாய் க‌ருவிற்குள்ளே...


வாழ்க்கை இன்று வீதியில்_உன் மாமன்
வாழ்க்கை முட் கம்புக்குள்.
வீடு பார்க்க சென்ற உன் தந்தை
வீதி திரும்பவில்லையே...


கோடு போட்டு வாழ்கின்றோம்.
கோரைப் புல்லை உண்டு சாகின்றோம்.
கொட்டும் ம‌ழையில் ந‌னைகின்றோம்.
கொடிய‌ விஷ‌ங்க‌ளால் சாகின்றோம்.


க‌ட்டிக் காத்த‌ த‌மிழ் இன‌ம்.
க‌ரைந்து போகுது செங்குருதியால்.
க‌ட்டிக் காத்த‌ த‌மிழ் ஈழ‌ம்.
காணாமல் போகுது அரக்கபடையால்.


உள்ள‌ம் திறந்து பேச‌...
உத‌விய‌ கர‌ங்க‌ள் இங்கில்லை.
உலகே உற்றுப் நோக்க‌...
உண்மைக் க‌ண்க‌ள் எங்குமில்லை.


ப‌த‌வி வ‌கிக்கும் உல‌க‌த் த‌லைவ‌ர்
ப‌ய‌ண‌ம் தொட‌ர் இல‌ங்கையாம்._த‌மிழ‌ர்
ப‌டும் வேத‌னையைப் பார்த்து விட்டு
ப‌த்திரிகைக்கு விஞ்ஞான‌ விள‌க்க‌ம் கொடுப்பாராம்.


க‌ண்ணீர் வ‌ற்றிய‌ விழிக‌ளால்...
க‌டைசி வ‌ரை காத்திருப்போம் உன் உற‌விற்காய்.
கை கால் அற்ற ஊன‌ங்க‌ளாய்....
சாகும் வ‌ரை காத்திருப்போம் உன் வ‌ர‌விற்காய்.


நீ வ‌ந்த‌த‌ன் பின் தான்
நமக்கு கிடைக்கும் த‌மிழீழ‌ம்.
நீ பேசும் வார்த்தையில் தான்
ந‌ம‌க்கு கிடைக்கும் த‌மிழ் வேத‌ம்.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.0 கருத்துகள்:

Related Posts with Thumbnails