
மனசே... மனசே....மாறிவிடு.
மழையில்..நனைந்து ஓடிவிடு.
உனக்காய் வரைந்த கவிமலர்
என்னிதயத்தில் விரிந்தது முள்ளாய்.
இரத்தம் கசியுது விழியில்
இருளாய்ப் போனது உலகம்.
வாழும் வாழ்க்கை நெருப்பில்
பிணமாய்ப் போனது அங்கம்
வார்த்தை எல்லாம் கூட்டில்
வளைந்து போனது சட்டம்.
கால்கள் இன்று ரோட்டில்
தனித்துப் போகுது பயணம்.
கவலை எல்லாம் தன் உறவில்
தாயாகப் போகிறாள் வெகு விரைவில்.
தூங்கப் போகிறாள் மரநிழலில்
துணையின்றித் தவிக்கிறாள் பசிவலியில்.
முகவரி அறியா ஊரில்
பேசுவது புரியாத மொழி.
குளியல் போட்டால் குளநீரில்
ஆடையங்கம் உலரத்தேடினால் வெய்யில்
கோடிபுண்ணியம் கொண்ட கோவில்
கொடுத்தது அன்னதானம் கையில்.
அன்னமிட்ட அவள் கரங்களை
அழைக்கிறது கோவில் குருக்கள்.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக