ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 17 டிசம்பர், 2009

காதலுக்கு ஜாதிமதம் இல்லை...!

கண்ணீரில் மிதக்கின்றது....
கண்மணிகள்.
கன்னங்கள் தாங்குகின்றது
....
கண்ணீர்த்துளிகள்.
எண்ணங்கள் சுரக்கின்றது....
குரல்வளையில்.
என் மனம் துடிக்கிறது....
உந்தன் நினைவில்....!

இறைவன் படைத்தான்....
இதயம் ஒன்று - அது
யாருக்குச் சொந்தம்
புரியவில்லை இன்று
உலகறிந்த உண்மை எல்லாம்....
ஊமையாகிப் போனதிப்போ.
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊனமாகிப் போனதிப்போ....!

பாசம் வைத்தாள்....
எந்தன் உயிரில் - அது
பட்டுப் போனது
ரோஜா செடிபோல்.
நேசம் வைத்த உறவு எல்லாம்....
வேசம்போட்டு பாடுதிப்போ.
நீயும் நானும் மலரும் நேரம்
ஜாதிமதம் தடுக்குதிப்போ....!

ஆணும் பெண்ணும்
ஜாதி இரண்டு - அது
ஆதாம் ஏவாள்
ஆட்சி அன்று.
காலம் கனிந்த கண்கள் எல்லாம்....
கருத்தை விரித்துப் பார்க்குதிப்போ.
காதல் செய்த பாவம் என்ன
கண்ணீர் மழை பொழியுதிப்போ....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.


0 கருத்துகள்:

Related Posts with Thumbnails