ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!

முகம் அறியா....
முத்துக்குமாரா - உன்
முகவரி இன்று
முழுமையாய் பதிந்தது
உலகத்தமிழர் நெஞ்சிலடா...!


எழுதுகோல் என்னும்
தீச்சுடரால்....
ஏற்றி வைத்தாய்
பல தீபமடா...!


ஏழ்மையில் வாழ்ந்தாலும்
நேர்மை என்னும்
நேர்... வழியில்...
போனது உன் உள்ளமடா...!


ஈழத்தமிழர்
வேதனையை...
ஏற்க மறுத்தது
இந்திய தேசமடா...!


அந்தச் சோகக்கதையை
சொந்தக்கதையாய்
எழுதிவிட்ட எழுதுகோல்
தீக்குச்சி ஆனதடா...!


பார் எங்கும் உன் கதை
பாரத தேசத்தில்...
ஈழ உணர்வாளர்
பொழிகின்றனர் கண்ணீர் மழையடா...!


நீ ஏற்றி
வைத்த தீபம்
தொடர் அரங்கேற்றம்
ஆகுதடா...!


ஈழமண்ணிற்காய் உன்
உயிர் போனதடா...
இனி நீயும் எம்
உறவில் ஒருவனடா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 30 ஜனவரி, 2010

சுவாச தேவதையே.....!


என் சுவாச தேவதையே...!
உன்னை என் விரல்களால்
அணைக்கும் போது...
எனக்குள் ஓர் உணர்வு
என்னை அறியாமலே...
அலை பாய்கின்றது.


விழிகளை மூடி
உன்னிதழோடு என்னிதழ்
முத்தமிடும் போது...
உன் சுவாசக் காற்று
என்னிதயத்தை ஒரு
நொடியில் அணைக்கின்றது.


என் காதல் தேவதையே...!
உன்னைக் கைவிட்டால்
என் ஐம்புலன்களும்....
என்னை மறந்து விடும்.
அணு அணுவாய்த் தம்
உயிரைப் போக்கிவிடும்.


என் இதயத்தைக் - குடி
கொண்ட தேவதையே...!
உன்னை ஒரு நாள்
அணைக்கத் தவறினால்...
என் வாழ்க்கை இருளில்
மூழ்கி விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

வீரனுக்கு அழகு இதுவல்ல...தாயிற்கு ஒரு பிள்ளை ஆனாய் - ஏன்
ஆமியில் போய்ச் சேர்ந்தாய்.
நாட்டைக் காப்பது...
வீரனுக்கு அழகு.


ஆனால் எம் தேசத்தை அழிப்பது
உனக்கு அழகல்ல புகழல்ல...
ஈழத்தை அழிக்க முயன்றால்...
அழிவது நாமல்ல நீயல்லோ...


வீரத்தைக்.....
காட்டவில்லை போரில்.
வீழ்ந்த ஆமியைத்.....
தூக்கவில்லை உன் கரத்தில்.


எட்டப்பன்.....
கூட்டத்தின் கூற்றில்.
எடுத்து வைத்த பாதம்...
சரிந்தது இன்று ஏட்டில்.


அப்பாவி மக்களைச்.....
சுட்டுத்தள்ளினாய் நேரில்.
அறியாத பாவைகளை.....
அம்மணமாக்கினாய் சாவில்.


அத்தனையும் செய்துவிட்டு.....
தள்ளிவிட்டாய் புதைகுழியில்.
இதைப் பார்த்து உயர்பதவி.....
கிடைத்தது உன் கையில்.


மதம் கொண்ட யானைக்கும்....
வெறி கொண்ட சிம்மத்திற்கும்....
தேர்தலில் போட்டியா....? இல்லை
சாவதில் போட்டியா... புரியவில்லை.


ஈழமகள் உங்கள் அபிசேகா.ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிறைக்கம்பிகள் பேசினால்.....!


சிகரத்தை எட்டிப் பார்க்கும்
உனக்கு...
சிறைக் கம்பிகள் எண்ணுவது
ஏனடா...!


சிங்களக் காடையர்
வீசிய வலையில்
சிக்கிய தமிழ்த் தோழா....
உன்னைப் பார்த்ததும்
வடிகின்றது கண்ணீர்.


என்னைப் பற்றுவதால்....
உனக்குப் பெருமையல்ல.
உன்னை எனக்குள் அனைப்பதால்....
அளவில்லா ஆனந்தம்.


காரணம் மொழிகின்றேன் கேளடா தமிழா...
நீ.... கஞ்சா கடத்தவில்லை.
கொலை கற்பழிப்பு செய்யவில்லை.
ஆள்க் கடத்தல் கடத்தவில்லை.


தமிழுக்காய் வாதாடி இருப்பாய்...
தாய் மண்ணிற்காய் போராடி இருப்பாய்.
தமிழ் உறவுகளுக்காய்....
உன்னையே வெடிகுண்டாய் மாற்றி இருப்பாய்.


இது தான் நீ... செய்த குற்றமா...?
இல்லை இல்லை
உன்னைப் பார்த்துத் திருந்தட்டும்
உண்மைக் குற்றவாளிகள் தோழா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலில் விழுந்து விட்டேன்.உரச உரச வருகுது நெருப்பு...
உன்னைப் பார்த்ததும் வருகுது சிரிப்பு...
ஆடை இல்லா மேனியை
ஆளும் சக்தி எனக்கில்லை.


நான்கு சுவர்களின் மத்தியில்
கூட்டம் போட்டு பேசுவோம்.
நீயும் நானும்.. சேரும் காலம்.
வரும்.. வரும்.. வரும்.


காதல் வசனம் பேசமுன்
காமம் பற்றி பேசுவோம்.
வீசும் காற்றை தூது சொல்ல...
பேசும் உயிரைக் கொடுத்திடுவோம்.


காதல் என்ற பூஜை அறையை
காம நூலாய் மாற்றிடுவோம்.
இதய அறையில் குடி கொண்டு...
இரவு இன்றி வாழ்ந்திடுவோம்.


ராகம் கேட்டு பாடமுன்
ராசிப் பலனைப் பார்த்திடுவோம்.
பூசும் மஞ்சள்; கிண்ணத்தில்...
புதிய உலகம் படைத்திடுவோம்.


உலகை ஆளும் சக்தி எல்லாம்
உனக்கும் எனக்கும் பாதி பாதி.
உள்ளம் கவர்ந்த காதலனாய்...
காலமெல்லாம் நீ வேண்டும்.


என்னுயிரை எடுத்து தந்துவிட்டேன்
எனக்கு நீ... தான் நீதிபதி.
காதல் என்னும் சின்னத்தில்...
இருவர் நாமம் பதியட்டும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 21 ஜனவரி, 2010

வன்னியின் காதல் இதுதான்....கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.


புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
படுத்து உறங்குகிறேன் இன்று.
பண்ணிசை மன்னனே...... உன்
பாட்டு என்னிடம்............!!!


மழையே.......... மழையே........!
ஏன் இந்த சோகம்.
மனமே............. மனமே............!
ஏன் இந்த வாதம்.
வாழ்வில் ஒரு படி
வாழவில்லை என் காதல்.
பூவின் மணம் போல்
பூக்க வில்லை நம் காதல்.
தேனே.......நீ........ எங்கே.......?
தேடுகிறேன்........உன் பாதம்...!!


விதியே........... விதியே............!
ஏன் இந்தக் கோலம்.
சதியே.......... சதியே...........!
ஏன் இந்தப் பாவம்.
திரி கொண்ட தேசம்
தீர்ப்புக் கிடைக்கவில்லை இன்னும்
வெறி கொண்ட வேதம்
வெந்து போனது எம் தேசம்
மனமே.......... நீ உள்ள தூரம்
என்னை அழைக்க மறந்து விடாதே ...!!


எரி குண்டே ....... எரி குண்டே.......!
ஏன் இந்த நாசம்
வான் குண்டே...... வான் குண்டே......!
ஏன் இந்த அகோரம்.
கூடு விட்டு கூடு வந்த
நம் காதல் சேர முன்.
என் இதயத்தைப் பறித்துவிட்டாயே.
இதயமில்லாக் குண்டே.....
இனி என் வாழ்வு
இருட்டுக்குள் சங்கமம் தனா...?...?...?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சாட்சி இல்லை...!கருவறையில் இருந்தபடி
தாய் மண்ணை சுவாசித்தேன்.
தொல்லைகள் தொடர்ந்தது
கருவறையில்...
சொந்த அன்னையை இழந்தது
இதுவரையில்....


வானமும் சாட்சி இல்லை... இந்த‌
பூமியும் சாட்சி இல்லை.
பத்து மாதம்....
கருவறை கூட
எனக்கு சொந்தம் இல்லை.
எட்டு மாத‌த்...தால்
எட்டிப் பார்த்தேன்.
என் தாய் கண் திறக்கவில்லை


வீடும் சாட்சி இல்லை....இருந்த‌
விடுதியும் சாட்சி இல்லை.
தேடிப் பார்த்த....
உற‌வு கூட
என‌க்கு சொந்த‌ம் இல்லை.
ஏழை என்னை
க‌ட்டிக் காக்க‌..
யாரும் முன் வ‌ர‌வில்லை.


உதிர‌மும் சாட்சி இல்லை_என்
உருவ‌மும் சாட்சி இல்லை
ப‌டிக்க‌ப் போக‌ பாதை இல்லை
பார்த்துப் பேச‌ யாருமில்லை.
முற்க‌ம்பி ந‌டுவே
முடிய‌ப் போகுது
என் போன்ற‌ ம‌க‌வின் வாழ்க்கை.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா... காட்டிக் கொடுக்காதே தமிழா...
காட்டிக் கொடுக்காதே.
கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா...
கூட்டிக் கொடுக்காதே.
விட்டுக் கொடுக்காதே தமிழை...
விட்டுக் கொடுக்காதே...!


ஈழம் எங்கள் நாடு.
ஈன்றாள் அன்னை உன்னை.
ஏட்டில் உள்ள செய்தி
எட்டியது வானில்.
ஈழமண்ணில் குருதி
வசை பாடுது எதிரி.!


மண்ணுக்கு ஆசைப் பட்டால்...
மன்னிப்பு கிடைப்பதில்லை
பொன்னுக்கு ஆசைப் பட்டால்...
பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை.
சொத்துக்கு அடிமைப் பட்டால்...
சொந்தங்கள் தெரிவதில்லை.!


தமிழனாய் நீ பிறந்து...
தமிழ் ஈழத்தை அழிப்பதினால்.
என்ன சுகம் கண்டாய் இன்று வரை.
தமிழர் முன்...- உன்னால்
தலை நிமிர முடியுமா....?
தன்னந் தனியாய்...- உன்னால்
வெளியே போக முடியுமா....?


தலை எழுத்தை மாற்றி விட்டாய்.
தரித்திரத்தை ஏட்டில் விட்டாய்
திரும்பிப் பார்.... உன் பாதச் சுவடுதனை.
கை விரல்கள் அத்தையும்
அழுக்காய் போனதுவோ....
சாவு மணியை கையில் எடுத்தாய்.
சாகும் தேதி தலைவர் தருவார்.!


எட்டப்பன் கூட்டத்தை...
எட்டி உதைக்கும் தமிழீழம்
எந்த நாட்டிலும்......
கிடைக்காது அடைக்கலம்.
ஏவி விட்டால்.....
திரும்பி வரவேண்டும் தமிழீழம்.!


மறத்தமிழனாய் மாற விரும்பினால்...
பகைவனைக் கொன்று விட்டு...
நீயும் மாண்டு விடு.
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்...
மறு படியும் பிறந்து விடு.
தமிழ் மண்ணைக் காக்கும்
மானத் தமிழனாய் மாறிவிடு.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

தமிழன்...!!!தலை நிமிந்ததால் தமிழன்...!
தன் மானம் படைத்தவன் தமிழன்...!
தாயைத் தரிசிப்பவன் தமிழன்...!
தாகம் தீர்ப்பவன் தமிழன்...!
தாலிக்கு மகத்துவம் கொடுப்பவன் தமிழன்...!
தாய் நாட்டை தன் வீடாய் காப்பவன் தமிழன்...!


தேசத் துரோகியை அழிப்பவன் தமிழன்...!
தேச வரலாற்றில் புகுந்தவன் தமிழன்...!
தேசிய விருதை பெற்றவன் தமிழன்...!
தேகத்தை வெடிகுண்டுகளாய் மாற்றியவன் தமிழன்...!
தேசியத்தை வென்றவன் தமிழன்...!
வல்லரசை விரட்டியவன் தமிழன்...!
வாய் நிறைய செந்தமிழைப் பேசுபவன் தமிழன்...!


அன்னிய சக்திகளை எரிப்பவன் தமிழன்...!
ஆட்சியில் அமர்ந்திருக்கும் பிரபாகரன் தமிழன்...!
போருக்கு முகம் கொடுப்பவன் தமிழன்...!
போரிலே பல வெற்றிகளைக் கண்டவன் தமிழன்...!
தமிழன் என்றால் தன் மானம்...!
தன் மானம் என்றால் தமிழன்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சிறையில் ஒரு கனவு.சிறையில் ஒரு கனவு...
சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில்.
சுவரைத் தாண்டிப் பறக்க முயல்கிறேன்.
துப்பாக்கி முனையில் தூதர்கள்.


சுட்டுத் தள்ளுகின்றார்கள்
என் சிறகுதனை.
பஞ்சாய்ப் பறந்து.....
காற்றோடு காற்றாய்.....
விண்ணில் விளையாடுகின்றது.


என் நிலையோ கப்பிகள் நடுவே.
எனக்குள் ஓர் கணக்கு
கண்ணீரால் கறள் பிடித்த கப்பிகள்.
ஒரு காலத்தில் உக்கிவிடும்.


அன்று நான் வெளிவருவேன்.
அன்று என் வயதோ முப்பது.
அந்தக் கம்பிகள் உக்கியது.
முப்பது வருடத்தின் பின்


இன்று என் வயதோ அறுபது
இரும்புக் கம்பிகள் உக்கியது போல்
என் அழுகையால்........
எலும்புக் கூடும் உக்கிவிட்டது.


என்னால் எப்படிப் பறக்க முடியும்....?
இளவயதில் கண்ட இனிமைகளை....
இதயத்தில் அணைத்தபடி
ஆயுட்காலம் சிறையில் பிணைக்கப்படுகின்றது.....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 16 ஜனவரி, 2010

விதைக்கப் பட்ட உள்ளங்கள்....!
ஆயிரம் கண்கள் பார்வையிலே.
உந்தன் உயிர்கள் போகையிலே.
கண்ணீர் தரையில் ஓடுகையில்.
ஓவென்று அழும் சத்தம் - எம்
நெஞ்சைப் பிளக்கிறதே...!


நாட்டின் நலத்தை
நாம் அறியவில்லை.
நால்வர் சேர்ந்து தூக்கும் போது
நாடே போற்றுதே............!


வீட்டுக்கொருவர் கேட்ட போது
வீரம் வரவில்லையே.
வீதி வழியே சாகும் போது
விரக்தி வரவில்லையே...!


காட்டிக் கொடுக்கும் பகைவர் கூட்டம்
நாட்டில் நிரம்பி வழியுதே.
கடல் கடந்து கொண்டுவந்த
ஏவுகணையை கையாள முடியவில்லையே...!


காலதேவன் வந்த போது
கைகள் சோரவில்லையே.
கடல் அன்னை துணை கொண்டு
களமிறங்கி தோல்வி அடையவில்லையே...!


தனை மாய்த்து எமைக் காத்த
புலிவீரர் இவ்வுலகில் இல்லையே.
புதுயுகம் படைக்கப்...
புறப்பட்ட வீரர் நாமில்லையே...!


அது நானில்லையே......
அது நாமில்லையே.....
அது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

நாளை விடிய நாங்கள் இல்லை.
கல்லறைகள்... கருவறையாய்...
மாறுவது... தமிழீழத்தில் மட்டும் தான்.
சில்லறைகள்... சிதறியதால்...
சிவந்தது... தமிழீழம் மட்டும் தான்.
எம் உயிரும்... நினைவும்... அங்கே.
எம் உடலும்...குரலும்... இங்கே.


நாளை விடிய நாங்கள் இல்லை.
ஏழை வீட்டில் விறகு இல்லை.
முள்ளுக் கம்பி எங்கள் பாதை.
மூலை முடக்கு எங்கள் படுக்கை
விதியைச் சொல்லிக் குற்றம் இல்லை.
வ‌லியைப் போக்க‌ ம‌ருந்தும் இல்லை


நாங்க‌ள் செய்த‌ பாவ‌ம் என்ன‌...
நாங்க‌ள் பெற்ற பாலக‌ர் எங்கே...?
இருட்டு அறையில் பருவ மங்கை...
காம வெறியில் காடையர் அங்கே
வாய்க‌ள் க‌ட்டி கைக‌ள் க‌ட்டி
வாழ்க்கை சாகுது உயிருடன்.


வீதி ஓரம் கழுகுக் கூட்டம்.
வேவு பார்க்குது வெள்ளை வ‌ண்டியில்.
த‌லையை மூடி த‌லையை ஆட்டி
எங்க‌ள் உற‌வைப் பிரிக்குது ஒரு நெடியில்.
போன‌ பிள்ளை பிண‌மாய்த் திரும்ப‌முன்
போய் விட்ட‌து தாய் த‌ந்தை உயிர்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

எனக்குள் ஒருத்தியாய் நினைத்தேன்....!


பார்த்தேன்.....
ஒரு தரம் பார்த்தேன்.
கேட்டேன்.....
அவள் குரல் கேட்டேன்....!


ரசித்தேன்.....
தனிமையை ரசித்தேன்.
நினைத்தேன்.....
எனக்குள் ஒருத்தியாய் நினைத்தேன்....!


காதல்...
இதயத்தைச் சுற்றுகிறதே.....
நானும்...
உலகத்தை சுற்றுகிறேனே...!


காதல் என்னும் மூச்சு.....
காற்றோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...!


வானமே.....
நீ பார்த்தாயா.....?
வண்ணத்துப்பூச்சியே.....
நீ பார்த்தாயா.....?


மின்னலே.....
நீ பார்த்தாயா.....?
மின்மினிப்பூச்சியே.....
நீ பார்த்தாயா.....?


நீயும் பார்ககவில்லை.....
நானும் பார்ககவில்லை.....
யார் தான் பார்த்தார்கள்
என் தேவதையை...!!!


கண்கள்.....
உன்வரவைத் தேடுகிறதே....
காலம்.....
என்னை விட்டுப் போகிறதே....!


காதல் என்னும் கவிமழை
கண்ணீறோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...!


கண்கள்.....
கண்டது உண்மையா.....?
காதல் .....
வென்றது உண்மையா.....?


உன் மூச்சு.....
என்னில் பட்டது உண்மையா.....?
என் பேச்சு.....
நின்று போனது உண்மையா.....?


நீயும் ஏதோ பார்க்கிறாய்.....
நானும் ஏதோ பார்க்கிறேன்.....
யார் தான் பார்த்தாலும்
நம் காதல் நிறைவேரும்....!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

பூட்டிய என்னிதயம் பேசுது...!உன்னைப் பார்த்ததும்...
பூட்டிய என்னிதயம் பேசுது...
வா... வா... வா...
என்னிதயத்தின் சாவி...
உன்னிடம் என்று சொல்லுது...
தா... தா... தா...
அன்பே வா...வா...வா...
அழ‌கே தா...தா...தா...!!!


இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!!


நிலவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
நேரம் கிடைத்தால்...
சுற்றிப் பார்த்திடுவோம்.
பாவை உன் ராகம்...
காற்றில் மோதி
பூமியை அடையும்...!!!


படகில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
படரும் பனிக்குளிரில்...
நாம் சேர்ந்திடுவோம்.
விலகும் நம் வார்த்தை...
தனிமை தேடி
காதல் புரியும்...!!!


வானில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
வானவில் கொண்டு...நம்
காதல்கவி வளர்த்திடுவோம்
கொட்டும் மழையில்...
சிதறிய கவித்துளிகள்
தேனாறாய் பாயும்...!!!


பூவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
பூவோடு பூவாய்...
பூஜையறை சென்றிடுவோம்.
மெளனம் காத்து...
வரத்தை வேண்டினால்
வாழ்க்கை சிறக்கும்...!!!


என் இதய‌த்தில் ஒரு நாள்...
வாழ்ந்து விடு.
என்னைப் பிடித்ததா என்று...
இதயத்தைக் கேட்டு விடு.
உதிரமும் சரீரமும்
சேர்ந்தே சொல்லும்
உன்னைப் பிடிக்கும்...!!!


உன் இதயத்தில் பல நாள்...
வாழ்ந்து விட்டேன்.
பிடித்திருக்கு உன்னை விட்டுப்...
போக‌மாட்டேன்.
வில‌கும் நேர‌ம் வ‌ந்தால்...
ம‌ர‌ண‌ப் பாதையில்
என் கால்கள் செல்லும்...!!!


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.

யார் இவ‌ள் என் விழியில்...!வளையல் சத்தம்...
கேட்ட போது.
திரும்பிப் பார்த்தேன்.
அழகி ஒருத்தி..._ என்னை
அழைத்த விதத்தை
வியந்து பார்த்தேன்.


வழி தவறி வந்த பார்வையா...?
என்னை வாழ வைக்க வந்த பாவையா...?
திசை மாறிப் போகும் என் கால்க‌ள்.
பசை போட்டு ஒட்டிவிட்டால் ஒரு நெடியில்.
யார் இவ‌ள் என் விழியில்...
யார் இவ‌ள் என் வழியில்...!


தேன் மொழியில் வ‌ரும் வார்த்தை
தென்ற‌லால் ம‌ய‌ங்கி கேட்க‌வில்லை என் செவியில்.
உன் உத‌டுக‌ளால் உலாவும் அசைவுக‌ள்.
உத‌ய‌மாகி உல‌கையே குளிர‌ வைக்கின்ற‌து என் எதிரில்.
யார் இவ‌ள் என் வ‌லையில்...
யார் இவ‌ள் என் க‌தையில்...!
தெய்வ‌த்தின் அருளோடு... பூமிக்கு வ‌ந்த‌வ‌ள் இவ‌ளோ.
தேச‌த்தில் யார் க‌ண்ணும்... ப‌டாத‌ பூம‌க‌ள் இவ‌ளோ.
சாவிற்கு அடி எடுத்த என் கால்க‌ள்.
ச‌ற்றுத் தாம‌தித்த‌து... இவ‌ள் வ‌ருகை கண்டோ.
யார் இவ‌ள் என் விதியில்...
யார் இவ‌ள் என் ம‌தியில்...!


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.வா.... வா.... அன்பே...!


வா.... வா.... அன்பே
வா.... வா....!
தா.... தா.... முத்தம்
தா.... தா....!


வார்த்தைகள்...
தேவையில்லை.
காதலே...
வாழ்வின் எல்லை...!


தூது சொன்னால்...
துரத்தும் தொல்லை.
தூங்கப் போனால்...
தூவு முல்லை...!


வா... வா...
அன்பே.....!
தா... தா...
முத்த‌ம்.....!


க‌ன‌வில் க‌ண்ட‌...
முகவ‌ரியே.
கான‌ல் நீராய்...
மாறாதே...!


ம‌ன‌தில் போட்ட‌...
பொன்வ‌ரிக‌ள்.
ம‌னுவாய் ஏற்க‌...
ம‌றுக்காதே...!


ப‌டுக்கை அறையில்...
உன் விம்ப‌ம்.
பார்த்து ர‌சிப்பேன்...
தின‌ம் தின‌ம்...!


தூக்க‌ம் இல்லாப்...
போதனை.... - நீ
துணையாய் வ‌ந்தால்...
சாத‌னை...!


தாக‌ம் தீர்க்கும்...
தாம‌ரையே.
த‌னிமை உன‌க்கு...
ஆகாது...!


மோக‌ம் கொண்ட‌...
என் ம‌ன‌தை.
மோதிப் பார்க்க‌...
நினைக்காதே...!


பார்வை எல்லாம்...
உன் ப‌க்க‌ம்.
பார்த்து ர‌சிப்பேன்...
வித‌ம் விதமாய்...!


காத‌ல் உன்னை...
அனுகும் வ‌ரை.... - நான்
காத்திருப்பேன்...
சாகும் வ‌ரை...!


க‌ன்ன‌க் குழிச்...
சிரிப்ப‌ழ‌கே.
க‌விதை சொன்னால்...
கேட்பாயோ...!


க‌ண்ணிமைக்கும்...
நேர‌த்தில்.
என்காத‌ல் உன்னில்...
தாவாதோ...!


ம‌ன‌தைக் கொடுத்தேன்...
உன் வாச‌ம்.
ம‌குட‌ம் சூடு...
என்னாளும்...!


உல‌கைக் க‌ண்டேன்...
உன் கால‌ம்.
அடிமையானேன்...
உன் பாத‌ம்...!


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.எம்மால் மறக்கமுடியுமா...?வன்னியில் ஓர் அதிர்வு.
பூகம்பம் பூக்கவில்லை
பூமித்தாய் பெற்றெடுத்த தமிழினம்.
எரி குண்டிற்கு இரையானது...
கண்டவர் நெஞ்சம்.
காதால் கேட்டவர் உள்ளம்.
அன்றும் இன்றும் புண்பட்ட...
நெஞ்சோடு உலா வருவது தான் உண்மை.
இது இயற்கை அழிவல்...
செயற்கை அழிவுதான்.


அம்மா என்று உணரத் தெரியாத பருவங்கள்.
அங்கம் அங்கமாய் அள்ளியதை...
எம்மால் மறக்க முடியுமா...?
தாயோடு சேயை மட்டுமல்லாமல்...
கருணை காட்டும் வேதாகமத்தையும்...
சேர்த்து அணைத்தபடி...
உயிர் மூச்சைக் காற்றோடு...
கலக்க வைத்ததை எம்மால் மறக்கமுடியுமா...?


கருவறையில் சேயோடு...
கல்லறையாய் மாறியதை எம்மால் மறக்கமுடியுமா...?
உறவுகள் உயிரின்றி பிணமாய்
மாற்றியமைத்ததை எம்மால் மறக்கமுடியுமா...?
ஒளிவீச்சின் ஓலங்கள் எம் நெஞ்சில்.
அவலங்களாய் மாறியதை எம்மால் மறக்கமுடியுமா...?


உலக நாடுகள் உறங்குவதும்...
ஊமையாய் மாற்றப்படுவதும்...
இன்றல்ல நேற்றல்ல...- இது
நெடுங்காலத் தொடர்கதை.
தமிழர் நாம் ஒன்று திரண்டால்... - எம்
தாயகம் எமக்கே சொந்தம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா

வெள்ளி, 15 ஜனவரி, 2010

உன்னைக் கண்டதும் காதல் வந்தது.


காதல் வந்தது...
உன்னைக் கண்டதும்.
கண்கள் கண்டது....
உந்தன் புன்னகை.
உலகம் உருண்டது....
உன்னைத் தேட.
என்னுருவம் குலைந்தது.....
உன்வாசம் அடைய.


இமைகள் மூடுதே புயற் காற்றில்.
புருவம் உயருதே உனைப் பார்த்து.
விழிகள் பேசுதே உனை நோக்கி.
வார்த்தை மயங்குதே உன்நடை கண்டு.
உன் பாதம் பட்ட பூமி இது
வைரக்கல்லாய் மாறும் நேரமிது.
உன் பாசம் பட்ட பார்வை இது
உன்னை நோக்கி நகரும் நேரமிது.


அமைதி தேடுதே கடல் அலைகள்.
அகிலம் போற்றுதே உன் அதிசயங்கள்.
அழகே அழகு உன் அழகு.
அடிமை ஆனது இவ் உலகு.
நீ பேசும் மொழிகள் எல்லாம்
நீந்திப் போகுது நிலவிற்கு.
மழையாய் விழும் உன் கவித்துளிகள்
மண்ணில் மயங்குது மதுவாய்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

நெஞ்சே... வழி விடு.பாதையோரம் உந்தன்
காதல் போக.....
அந்தப் பாதையோரம்
எந்தன் கால்கள் போகும்.
நெஞ்சே... வழி விடு.
நான்தான்... விடை கொடு.


மெளனம் என்னைக் கொல்லுதே...
என்மனமே உன்னை நாடுதே.
இரவில் காணும் கனவிலே...
அடிமையாகிறேன் உன் பேச்சிலே.!


கண்கள் திறந்தால் உன் நினைவுகள்...
நிழலாய்த் தோன்றி மறையுதே.
தினமும் காலை தவிக்கிறேன்...
வரமாய் உன்னை அடையவே.!


கண்கள் பார்க்குது கண்ணாடி _ அதில்
தெரியுது உன்விம்பம் முன்னாடி.
புன்னகை தவழும் பூவே _ உன்னைப்
புரிஞ்சுக்க முடியல என் மனசே.!


என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.
தவம் இருந்தேன் உனையடைய...
தரிசனமாய் வந்தாய் என்னருகே.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 9 ஜனவரி, 2010

புலத்தில் ஓர் புலம்பல்.


தென்றல் காற்றே... தென்றல் காற்றே...
உந்தன் சுவாசம் நானறியேன்.
தென்னங் கீற்றே... தென்னங் கீற்றே...
உந்தன் வாசம் நானறியேன்.


பாட்டியை பார்த்ததில்லை...
பாட்டனை பார்த்ததில்லை...
புகைப்படத்திலே பார்த்து ரசித்தேன்.
தாய் மண்ணைப் பார்த்ததில்லை...
என் உறவுகளை பார்த்ததில்லை...
வரைபடத்திலே தமிழீழம் கண்டு ரசித்தேன்.


தாய்மொழி என் நாவில் தவழவில்லை...
தாய்தந்தை என் அருகில் இருக்கவில்லை...
காலைபோய் மாலைவரும்போது பார்த்து அழுவேன்.
தாய்ப்பால் குடித்ததில்லை...
தந்தை என்னைத் தூக்கியதில்லை...
கடை உணவைப் பார்த்து அழுவேன்.


அக்கா அண்ணா சொல்லயில்லை...
தம்பி தங்கை கூடயில்லை...
தனிமையைப் பார்த்து வெறுப்தேன்.
பறந்துதிரிய எனக்கு சிறகில்லை...
ஆடிப்பாட எனக்கு நட்பில்லை...
என்னை நானே வெறுத்தேன்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

வீர மகனைப் பெற்றெடுத்த.... வீரத் தந்தையே...!


வீர மகனைப் பெற்றெடுத்த....
வீரத் தந்தையே...!
வேத வாக்காய் வன்னி மண்ணில்
வாழ்ந்த தெய்வமே....!


உன் மகனின் பெயரைக் கேட்டாலே....
பயந்து ஒடுங்கும் எதிரிப் படைகள்.
உன் வயதை மதியாது....
சிறைக்குள் சிந்தனை சிதறாமல்.
சித்திரவதையாலேயே கொன்றுவிட்டு....
உலகிற்கு இயற்கை மரணம் எய்தாரென.
வதந்திகளை பரவவிடுவது...
இலங்கை அரசிற்குக் கைவந்த கலையல்லவா...?


உன் பேரன் எங்கள் நேசக்குமரன்
எம்மை விட்டுப்போன துயரம்
இன்னும் ஆறவில்லை.
ஆறாய்ப் பாய்கின்றது கண்ணீர்த் துளிகள்.
உன் மரணச் செய்தி கேட்டவுடன்
சுனாமி வந்தது போல்...
உலகத்தமிழர் செவிகளில்
சோககீதங்கள் ஒலிக்கின்றது.


சுயநலம் இல்லாமல் வாழ்ந்தாய்
சுற்றி இருப்பவர்களை உறவாக்கினாய்.
தமிழைத் தாயாய் நினைத்தாய்
தங்கத் தலைவரைப் எமக்குப் பரிசாய்த் தந்தாய்.
தமிழீழம் மலருமென
தமிழ் நாட்டில் இருக்கும் போதும் சொன்னாய்.
அன்று உன் விழியில் பயம் தெரியவில்லை.
இன்று உன் வழியில் பயம் தெரியவில்லை.


வாயிருந்தும் எம்மால் பேசமுடியவில்லை
விம்மி விம்மி வாய் கூட வலிக்கும் நிலையின்று
கையிருந்தும் எம்மால் எழுதமுடியவில்லை
கைதியாக்கி மரணமாக்கும் நிலையின்று.
கண்ணிருந்தும் எம்மால் சாட்சி சொல்லமுடியவில்லை.
கற்பழிப்பின் அகோரம் எம்மீதும் தாவும் நிலையின்று.
உன் இறப்புக்கு யார் காரணம் ஈழத்தின் தந்தையே...!
சாட்சி சொல்ல வருவாயா கரிகாலக் கடவுளே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா

புதன், 6 ஜனவரி, 2010

இது எங்கள் பூமி...!


புத்தன் பூமி - இல்லை
இது எங்கள் பூமி.
சித்தன் சொன்னான்
இது எங்கள் பூமி.


மண்ணின் மணம் - தமிழ்
தாய்ப்பாலின் குணம்.
பெண்ணின் வீர‌ம் - வ‌ரும்
எதிரிக்கு ம‌ர‌ண‌ம்.


தாயின் கருப்பை - செய்தது
பல தியாகம்.
தாய்மண்ணைக் காக்கச் - சென்றது
பல பாசம்.


பூவின் குணத்தை - அறிந்தது
தங்கத் தமிழீழம்.
தேசியப் பூவாய்.- ஏற்றது
கார்த்திகைப் பூவை


வாகைப்பூ சூடி - போருக்கு
அனுப்பிய சரித்திரம்.
மறவர் படைக்கு - மட்டும்
தான் சொந்தம்.


ஈழமகள் உங்கள் அபிசேகாநீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே...!


உனைப் போல் ஒருவன்
இருந்தால் உலகம்
ச‌தியில் இருந்து விடுப‌டும்.
எனைப் போல் பலரும்
இருந்தால் தேசம்
இருளில் இருந்து விடுபடும்.


பார்த்தாயா... எங்கள் மண்ணின் வாசம்.
கேட்டாயா... எங்கள் அழுகைச் சத்தம்
தினமும் நினைக்கிறோம் உன்னையே.
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே


ஆலைய மணியின் ஓசை
அங்கு கேற்பது கூட இல்லை.
செல் அடியின் ஓசை
அதனால் காதுகள் கேற்பது இல்லை.


ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
மா...வீரர் ஆனது ஈழ‌மண்ணில்.
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
சாம்பலாய்ப் போனது வன்னிமண்ணில்.


காட்டிக்கொடுக்கும் கூட்டம்...
புலிகள் பேரைக் கேட்டால் நடுக்கம்.
காலை மாலை தூக்கம் இல்லை...
கனவிலும் வருகிது கரும்புலித் தொல்லை.


மீன் பிடித்தொழிலும் இல்லை...
மீறிப் போனால் திரும்பி வருவதுமில்லை
காய்கறிக் கடையும் இல்லை...
கடைசியில் பிச்சை எடுக்கப் பாத்திரமுமில்லை.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கண்கள் கண்டதால் காதல் வந்தது பெண்ணே....!


உன்னையும் என்னையும்
படைத்தவன் இறைவன்....
அவனுக்கு எங்கே
போனது இதயம்....!


உன்னையும் என்னையும்
இணைப்பவன் எவனோ....
அவனுக்கு கொடுப்பேன்
என் இதயம்....!


விழிகளால் கவிதைகள்
கூறும் பெண்ணே....
வியப்பிலே மயங்கிப்
போனேன் கண்ணே....!


வார்த்தைகள் ஒன்றும்
வரவில்லைக் பெண்ணே....
உன்னைப் பார்த்ததும்
ஊமையாகிப் போனேன் கண்ணே....!


உன் மனம்
என்னோடு பேசுது பெண்ணே....
உனக்குப் புரியவில்லையா
என் காதல் கண்ணே....!


உன் அழகைக் கண்ட
பின் தான் பெண்ணே....
இந்த உலகம் அழகாய்த்
தெரிகின்றது கண்ணே....!


உன் சுவாசக்காற்றில்
வாழ விரும்புகின்றேன் பெண்ணே....
என்னை உன் உயிராய்
ஏற்றுக் கொள்வாயா கண்ணே....!


பாதையில் பார்த்த உறவு
பாசமாய்ப் போகவேண்டும் பெண்ணே....
பயணமாய்த் தொடரும் இரவு
பந்தமாய்ப் போகவேண்டும் கண்ணே....!


நீ... இல்லா நிணைவு
எனக்கு நரகம் பெண்ணே....
நீ... இல்லா வாழ்க்கை
எனக்கு மரணம் கண்ணே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

கண்ணீரைத் தாங்குமா - இதயம்


கண்ணீரைத் தாங்குமா - இதயம்
கண்ணீரைத் தாங்குமா.
விண்மீன்கள் சிரிக்கிறது - உலகே
வேடிக்கை பார்க்கிறது.


தமிழ் மண்ணின் மணம்
மறந்து போனதம்மா...
எம் உதிரத்தின் மணம்
எம்மில் வீசுதம்மா....!


சோலைவனம் எங்கள் தேசம்
பாலைவனம் ஆனதிப்போ...
பாசவனம் எங்கள் வாசம்
சுடுகாடாய்ப் போனதிப்போ...!


தந்தை தாயின் உறவு
சொல்லப் பிள்ளை இல்லையம்மா...
பிள்ளை உள்ள வீட்டில்
சொந்தம் எதுவும் இல்லையம்மா....!


தென்றல்வீசும் எங்கள் தேசம்
சோகமயம் ஆனதிப்போ...
செந்தமிழ் எங்கள் வேதம்
செவ்வினால் எம்முயிர் போகுமிப்போ...!


கடற்கரைக் காற்றில் வரும்
பேரின்பம் இன்றில்லையம்மா...
கல்லுரிகள் கண்ட கனவு
கரைந்து புதைகுழியில் போனதம்மா....!


நீதி மறவா எங்கள் தேசம்
நேர்மையில்லா சிங்கள அரசு ஆளுதிப்போ...
சாதி.. மதம் ஒன்றே எங்கள் தேசம்
பௌத்த மதமாய் மாறுதிப்போ...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

காலமெல்லாம் உன் நிழலில்...!


காதலால் வரும் குருதி
கசிந்து இந்த மண் சிவக்குதடி...
உன்னைப் பார்த்ததால்
வருகின்ற தனிமை
கல்லறை தேடுதடி...!


வேகமாய் வந்த வார்த்தை
வேதனையை தந்ததடி...
வேடிக்கையாய் பார்த்தேன்
மணப் பந்தல் வாசலடி.


பாரமாய் இருந்த நெஞ்சில்
கடைப்பால் வார்த்து விட்டாயடி...
பாவை உன்னை கோலமகளாய்ப்
பார்த்ததும் குருடாய்ப் போனதடி.


பாசமே புரியாத உலகம்
வேசம் போட்டு கைகுலுக்குதடி...
ரோசமே இல்லா எனக்கு
உன்னைப் பார்த்ததும் பாசம் கொட்டுதடி.


உன்னில் வரும் நினைவில்
என் உறக்கம் போனதடி...
உன்னைத் தாங்கி - அந்த
விமானம் பறந்து போனதடி.


பணத்தால் வந்த வாழ்க்கை - என்
குணத்தால் ஈடாகவில்லையடி...
பாசத்தை பிரித்துப் பார்க்க
முடியாப் பாவியாய்ப் போனேனடி.


மனமும்... மனச்சாட்சியும்
பேசுகின்ற நாட்கள் அதிகமடி...
உதடும்... உணர்வும்
ஊமையாய்ப் பல காலமடி.


உறவாய் இருந்த உலகம்
உருகி மழையாய்க் கொட்டுதடி...
அகவை அகன்று போக‌
அயலார் அரட்டை அதிகமடி.


வானில் பறக்கும் பறவை கூட‌
விமானமாய்த் தோன்றுதடி...
நீ... வருவாய் - உனை
வாழ்த்த மனசு துடிக்குதடி.


நீ... கோலம் போட்ட கோவில்
தினமும் காலை போவேனடி...
உன் பேர் சொல்வதற்காய்
தினமும் அரிச்சனை செய்வேனடி.


காலை மலர்ந்த போது
கண்கள் துடிக்குதடி...
சாலை நகர்ந்த போது
சந்தி சிரிக்குதடி.


காது கொடுத்த போது உன்
பெயர் காற்றில் பறந்ததடி...
விதவை என்ற பேரில்
கைவளையல் நொறுங்குதடி.


எம் காதல் இன்றுவரை
கருவறையாய் உணர்ந்தேனடி...
காலமெல்லாம் உன் நிழலில்
காதலனாய்...கணவனாய்...குடிகொள்வேனடி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

பேசத் துடிக்கும் வார்த்தைகள்...!பெண்ணே...! உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.


பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது


பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.


பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.


பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.


பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.


பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

மோதலால் வந்த காதல்காற்றோடு அலை மோதிக் காதல்.
நற்பண்போடு சொல் மோதிக் காதல்.
கவியோடு பொய் மோதிக் காதல்.
என் விழியோடு நீ மோதிக் காதல்.


நிலவோடு முகில் மோதிக் காதல்.
நீள் நதியோடு கடல் மோதிக் காதல்.
உறவோடு உடல் மோதிக் காதல்.
என் உயிரோடு நீ மோதிக் காதல்.


பாவோடு இசை மோதிக் காதல்.
பார்க்கும் திசையோடு விசை மோதிக் காதல்.
ப+வோடு மணம் மோதிக் காதல்.
என் மனதோடு நீ மோதிக் காதல்.


தாயோடு சே மோதிக் காதல்.
தாய் மண்ணோடு மொழி மோதிக் காதல்.
தேனோடு தமிழ் மோதிக் காதல்.
என் கவியோடு நீ மோதிக் காதல்.


ஒளியோடு இருள் மோதிக் காதல்.
ஓடும் படகோடு நீர் மோதிக் காதல்.
கலையோடு கதை மோதிக் காதல்.
என் நிணைவோடு நீ மோதிக் காதல்.


வானோடு வளி மோதிக் காதல்.
வானவில்லோடு நிறம் மோதிக் காதல்.
மதியோடு மதன் மோதிக் காதல்.
என் விதியோடு நீ மோதிக் காதல்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.சனி, 2 ஜனவரி, 2010

நெஞ்சே... நெஞ்சே....நீ... பேசயோ..!


நெஞ்சே... நெஞ்சே....நீ... பேசயோ.
என்னை விட்டு....நீ... போறாயோ.
பாதி உயிர் என்னை விட்டு போன‌தம்மா....
மீதி உயிர் சாவை நோக்கி போகுதம்மா....
காதலிலே தோல்வி கண்ட பொம்மையம்மா....
கடைசியிலே கல்லறைதான் சொந்தமம்மா....


பள்ளியறை நினைவுகள்
கண்ணில் வந்து போகுதம்மா.
சுற்றித் திரிந்த மரம் செடிகள்
சோலை வனம் ஆன‌தம்மா.
விட்டுப் போன நம் காதல்
செத்துப் போனால் சேருமம்மா.
சொர்க்கத்தில்.....சேருமம்மா....!


சின்னச் சின்ன வேதனைகள்
சேந்து என்னைக் கொள்ளுதம்மா.
சேர்த்து வைத்த காகிதங்கள்
சோக கீதம் பாடுதம்மா.
பட்டுப் போனது நம் காதல்ச்செடி
விட்டுப் போனது ரோஜாச் செடியம்மா
பூத்த ரோஜாச் செடியம்மா......!


சாதம் ஊட்டிய உன் கைகள்
எனைப் பார்த்துக் கேள்வி கேட்டதம்மா.
அர்த்தமில்லா வார்த்தை என்று
அமைதியாய் உனைப்பார்த்து ரசித்தேனம்மா.
ஆயிரம் ஆயிரம் கனவுகள்
அத்தனையும் உடைந்து போனதம்மா
சுக்கு நூறாய்ப் போனதம்மா.


ஏதோ ஒன்று அவள் மனதை
ஆழமாய்ப் போட்டுக் குழப்புதம்மா.
துரத்தித் துரத்துக் காதலித்தவள்
தூணைப் பார்த்து புலம்புகிறாளமமா.
என் காதலை மறுத்த அவள் உறவு
செய்வினை போட்டு மாற்றிவிட்டார்களம்மா.
எம் காதல் தேவதையைக் கொன்றுவிட்டார்களம்மா.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...


போதுமடா...
உந்தன் குரல்.
பூமியிலே எதிரொலிக்க....!


வேணுமடா...
உந்தன் உயிர்.
எனக்குள்ளே உறவளிக்க....!


உன் கண்ணுக்குள்ளே...
என் விம்பம் கலைந்து போனது.
கவிதை வரியாய்....!


என் நெஞ்சுக்குள்ளே...
உன் காத‌ல் க‌சிந்து போன‌து.
க‌ற்பின் வ‌ழியாய்....!


உன் உத‌டுக‌ள்...
குவிவ‌தே.
என் பெய‌ர் சொல்லவே....!


உன் கால்க‌ள்...
போகும் திசை.
என் காதலும் போகிற‌தே....!


வ‌ழி...
ம‌றித்து.
இத‌ய‌த்தைக் கொடுத்தேனே....!


விழி...
ம‌றித்து.
என் காத‌லை ஏற்றுக்கொண்டாயே....!


கைக‌ள்...
க‌ண்ட‌ சுக‌ம்.
க‌டைசிவ‌ரை நீடிக்க‌ வில்லையே....!


காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...
கையால் போட்ட‌ கோல‌மாய்.
மாறிய‌து தான் வேத‌னையே....!


காத‌ல் தொட‌ர் க‌தையாய்...
மாறினால்.
சுவைக்க‌லாமே ர‌சிக்க‌லாமே....!


காத‌ல் த‌டைக‌ளாய்...
மாறிய‌தால்.
எம்மால் தான் சுவாசிக்க‌ முடியுமோ....!
இந்த‌ பூமியில் வாழ‌த்தான் முடியுமோ....!


காதலுக்கு கை கொடு ந‌ண்பா...
காத‌லைப் பிரிப்ப‌த‌ற்கு.
முக‌ம் கொடாதே....!


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

நினைக்க‌த் துடிக்கிற‌து ம‌ன‌சு....!உயிராக நினைத்து
உன்னோடு உறவாடினேன்.
மது என்ற உன் நாமத்தை
என் உதிரத்துள் உலாவ விட்டேன்.


பூமகளாய் உன்னை நினைத்து...
என் இதயத்தில் பூட்டி வைத்தேன்.
பூட்டுடைத்து புயல்க்காற்றாய்
வெளிவருவாய்யெனக் காத்திருக்க‌வில்லை.


பாம‌க‌ளாய் உன்னை நினைத்து...
தேன‌முத‌ வார்த்தைக‌ளை புசித்தேன்.
தேனோடு விச‌ம் க‌ல‌ந்து
த‌ருவாயென‌ என் புத்திக்கு எட்ட‌வில்லை.


நீ செய்த‌ கொடுமைக‌ள்
உன் விழி பார்த்த‌தும் போன‌த‌டி...
நீ இல்லாத‌ த‌னிமைக‌ள்
என் மனம் நொந்து சாகுத‌டி.


தாய் மேல் வைத்த‌ பாச‌த்தை விட‌
உன் மேல் அதிக‌ம் வைத்தேன‌டி...
என் தோள் மேல் ஏறி தோர‌ண‌ம்
க‌ட்டுவாய் என‌ நினைக்க‌வில்லைய‌டி.


உன் மேல் வைத்த‌ அன்புத் தாக‌ம்
ஒரு நாள் விழி க‌சிய உண‌ர்வாயடி‌.
அந்த‌ நேர‌ம் உன் கிறிஷ்னா
இந்த‌ உல‌கை ம‌ற‌ந்து போவானடி.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.

தாயில்லாப் பிள்ளை நானம்மா...!அம்மா...!
உன்
மரணச் செய்தி என்
மனசைத்
துளைத்த நொடி ....


கண்கள் ஊமையாயின.
காதுகள் குருடாயின‌.
வாய் செவிடானது.


பல்லிடுக்கில்
சிக்கிய நாக்குக்குப்
பைத்தியம் பிடித்தது.


என்னைப்
புறந்தள்ளிவிட்டுப்
புறப்பட்டுப் போனது
பூமிப் பந்து .


இருளைக் கிழித்த‌
ஒளியைப் பிளந்து
எழுந்து நடந்தது
இருள்.


தானாக
வானாக‌
நீ ஆக
சரிகின்ற
தூணாக
நானாக
ஆனேன் அம்மா!


சு.செந்தில் குமரன்

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒன்று சேரட்டும் - கரங்கள்ஒன்று சேரட்டும் - கரங்கள்
ஒன்று சேரட்டும்.
ஒன்றாய் உயரட்டும் - குரல்கள்
ஒன்றாய் உயரட்டும்.


தமிழன் என்ற ஒருமைப் பாட்டை
தமிழர் என்று பன்மையாக மாற்றிவோம்.
அணி திரள்வோம்......அலை அலையாய்......
அரவணைப்போம்....... என் தாயாக உறவுகளை.


அடுத்த நாட்டுப் பிரச்சனையைக்
கேட்டவில்லை நாங்கள்.
அடுத்த நாட்டு அரசியலில்
நுழையவில்லை நாங்கள்.


அமைதிப் பூங்காவில்.....உறங்கிக்
கொண்டிருந்த எம் உறவுகள்.- இன்று
உண்ண உணவின்றி...உடுக்க உடையின்றி...
உறங்க உறைவிடமின்றி...உதவ உறவுகளின்றி...
அகதியாய்... அனாதையாய்...அரக்கன் பிடியில்.


பாரதமே படுத்து உறங்காதே. - எம்
பாதி உறவு உன்னிடம்.
மீதி உறவு கண்ணீருடன்
இன்று எமக்கு இன்நிலை.
நாளை உனக்கும் அதே நிலை...


அந்த நேரம் குரல் கொடு.
மறவர் படை மார்வுகள்
மானம் காக்க...
திசை திரும்பும் உன் வாசம்


ஈழம் கடுகுபோல் சிறிது. ஆனால்
ஈகை கடலைப்போல் பெரிது.
தஞ்சம் என்று வந்தால்...
தாங்கும் எம் நெஞ்சங்கள்.


வல்லரசே.... உன்னிடம்
வார்த்தை இல்லையா...?
வாய் கிழிய எம்மினம்
வருந்திக் கதறுகிறதே...- நீயொரு
வார்த்தை சொன்னால்...
உயிர் பெறும் தமிழீழம்.


இல்லையெனில்...
வல்லாதிக்க அரசே.....
இனிவரும் முடிவில் - உன்
பேச்சுக்கு இடமே இல்லை.


தமிழுக்கு தலை வணங்கும்
நாடுகள் எதுவோ...
உங்கள் அபயக் குரலுக்கு
உயிர் கொடுப்போம் நாங்கள்


ஈழமகள் உங்கள் அபிசேகா.

Related Posts with Thumbnails