ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 1 ஜனவரி, 2010

ஒன்று சேரட்டும் - கரங்கள்ஒன்று சேரட்டும் - கரங்கள்
ஒன்று சேரட்டும்.
ஒன்றாய் உயரட்டும் - குரல்கள்
ஒன்றாய் உயரட்டும்.


தமிழன் என்ற ஒருமைப் பாட்டை
தமிழர் என்று பன்மையாக மாற்றிவோம்.
அணி திரள்வோம்......அலை அலையாய்......
அரவணைப்போம்....... என் தாயாக உறவுகளை.


அடுத்த நாட்டுப் பிரச்சனையைக்
கேட்டவில்லை நாங்கள்.
அடுத்த நாட்டு அரசியலில்
நுழையவில்லை நாங்கள்.


அமைதிப் பூங்காவில்.....உறங்கிக்
கொண்டிருந்த எம் உறவுகள்.- இன்று
உண்ண உணவின்றி...உடுக்க உடையின்றி...
உறங்க உறைவிடமின்றி...உதவ உறவுகளின்றி...
அகதியாய்... அனாதையாய்...அரக்கன் பிடியில்.


பாரதமே படுத்து உறங்காதே. - எம்
பாதி உறவு உன்னிடம்.
மீதி உறவு கண்ணீருடன்
இன்று எமக்கு இன்நிலை.
நாளை உனக்கும் அதே நிலை...


அந்த நேரம் குரல் கொடு.
மறவர் படை மார்வுகள்
மானம் காக்க...
திசை திரும்பும் உன் வாசம்


ஈழம் கடுகுபோல் சிறிது. ஆனால்
ஈகை கடலைப்போல் பெரிது.
தஞ்சம் என்று வந்தால்...
தாங்கும் எம் நெஞ்சங்கள்.


வல்லரசே.... உன்னிடம்
வார்த்தை இல்லையா...?
வாய் கிழிய எம்மினம்
வருந்திக் கதறுகிறதே...- நீயொரு
வார்த்தை சொன்னால்...
உயிர் பெறும் தமிழீழம்.


இல்லையெனில்...
வல்லாதிக்க அரசே.....
இனிவரும் முடிவில் - உன்
பேச்சுக்கு இடமே இல்லை.


தமிழுக்கு தலை வணங்கும்
நாடுகள் எதுவோ...
உங்கள் அபயக் குரலுக்கு
உயிர் கொடுப்போம் நாங்கள்


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

வருட ஆரம்பத்தில் தொடங்கிய உங்கள் பணி தொடர்ந்து வரட்டும்.......
வாழ்த்துக்களும் பாராடுக்களும் நிலாமதி அக்கா ..

ஈழமகள் சொன்னது…

நன்றி நிலாமதி அக்கா
உங்கள் வருகையை
முன்னிட்டு ஆனந்தம்.
உங்கள் வாழ்த்து என்னும் உரத்தால்
நிச்சயம் மரமாய் வளர்ந்திடுவேன்.

Related Posts with Thumbnails