ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பேசத் துடிக்கும் வார்த்தைகள்...!பெண்ணே...! உன்னைப் பார்க்கும் போது
பேசத் துடிக்கும் வார்த்தைகள்
மெளனமாகி விடுகின்றது.


பெண்ணே....!
உன்னை விட்டு விலகும் போது
உணர்ச்சியற்ற கால்களாய்ப்
போகின்றது


பெண்ணே....
உன்னை நினைக்கும் போது
கவிமழையாய்ப் பொழிகிறது
என் இதயத்தில்.


பெண்ணே....
உன்னை கனவில் அணைக்கும் போது கூட‌
பூக்களாய் நினைத்து பூஜை அறையில்
பூட்டி வைக்க விரும்புகின்றேன்.


பெண்ணே....
உனைப் பார்த்து வரைந்த போது
என் உயிர் கொடுத்து
உயிர் ஓவியமாய் மாற்றிவிட்டேன்.


பெண்ணே....
உன்னை நினைத்து மரணித்த போது
என்னை ஆழமாய் விரும்பினாய்.
நான் ஆவியாய் அலைகின்றேன்.


பெண்ணே....
மறு ஜென்மம் மலரும் போது
நான் நீயாகவும்... நீ... நானாகவும்
அப்போ புரியும் என் காதல் வலி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

1 கருத்துகள்:

கலையரசன் சொன்னது…

இதை எழுதி என் தூக்கத்தையும் கெடுத்துவிட்டாய்..

Related Posts with Thumbnails