ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!

முகம் அறியா....
முத்துக்குமாரா - உன்
முகவரி இன்று
முழுமையாய் பதிந்தது
உலகத்தமிழர் நெஞ்சிலடா...!


எழுதுகோல் என்னும்
தீச்சுடரால்....
ஏற்றி வைத்தாய்
பல தீபமடா...!


ஏழ்மையில் வாழ்ந்தாலும்
நேர்மை என்னும்
நேர்... வழியில்...
போனது உன் உள்ளமடா...!


ஈழத்தமிழர்
வேதனையை...
ஏற்க மறுத்தது
இந்திய தேசமடா...!


அந்தச் சோகக்கதையை
சொந்தக்கதையாய்
எழுதிவிட்ட எழுதுகோல்
தீக்குச்சி ஆனதடா...!


பார் எங்கும் உன் கதை
பாரத தேசத்தில்...
ஈழ உணர்வாளர்
பொழிகின்றனர் கண்ணீர் மழையடா...!


நீ ஏற்றி
வைத்த தீபம்
தொடர் அரங்கேற்றம்
ஆகுதடா...!


ஈழமண்ணிற்காய் உன்
உயிர் போனதடா...
இனி நீயும் எம்
உறவில் ஒருவனடா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails