ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

சிறையில் ஒரு கனவு.சிறையில் ஒரு கனவு...
சிறகுகள் வெட்டப்பட்ட நிலையில்.
சுவரைத் தாண்டிப் பறக்க முயல்கிறேன்.
துப்பாக்கி முனையில் தூதர்கள்.


சுட்டுத் தள்ளுகின்றார்கள்
என் சிறகுதனை.
பஞ்சாய்ப் பறந்து.....
காற்றோடு காற்றாய்.....
விண்ணில் விளையாடுகின்றது.


என் நிலையோ கப்பிகள் நடுவே.
எனக்குள் ஓர் கணக்கு
கண்ணீரால் கறள் பிடித்த கப்பிகள்.
ஒரு காலத்தில் உக்கிவிடும்.


அன்று நான் வெளிவருவேன்.
அன்று என் வயதோ முப்பது.
அந்தக் கம்பிகள் உக்கியது.
முப்பது வருடத்தின் பின்


இன்று என் வயதோ அறுபது
இரும்புக் கம்பிகள் உக்கியது போல்
என் அழுகையால்........
எலும்புக் கூடும் உக்கிவிட்டது.


என்னால் எப்படிப் பறக்க முடியும்....?
இளவயதில் கண்ட இனிமைகளை....
இதயத்தில் அணைத்தபடி
ஆயுட்காலம் சிறையில் பிணைக்கப்படுகின்றது.....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

சிறையில் வாடும் ஈழத்தமிழனின் கதையை கவி வரிகள் சொல்லிச செல்கின்றன........
..கண்ணீரால் கறல்(துரு) ஏறும் கம்பிகள். பாராடுக்கள். மேலும் மேலும் உங்கள் ....படைப்புகள்
வலம் ...வரவேண்டும்.

ஈழமகள் சொன்னது…

நிச்சயமாக......
தொடரும் என் பணி.

Related Posts with Thumbnails