ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 9 ஜனவரி, 2010

புலத்தில் ஓர் புலம்பல்.


தென்றல் காற்றே... தென்றல் காற்றே...
உந்தன் சுவாசம் நானறியேன்.
தென்னங் கீற்றே... தென்னங் கீற்றே...
உந்தன் வாசம் நானறியேன்.


பாட்டியை பார்த்ததில்லை...
பாட்டனை பார்த்ததில்லை...
புகைப்படத்திலே பார்த்து ரசித்தேன்.
தாய் மண்ணைப் பார்த்ததில்லை...
என் உறவுகளை பார்த்ததில்லை...
வரைபடத்திலே தமிழீழம் கண்டு ரசித்தேன்.


தாய்மொழி என் நாவில் தவழவில்லை...
தாய்தந்தை என் அருகில் இருக்கவில்லை...
காலைபோய் மாலைவரும்போது பார்த்து அழுவேன்.
தாய்ப்பால் குடித்ததில்லை...
தந்தை என்னைத் தூக்கியதில்லை...
கடை உணவைப் பார்த்து அழுவேன்.


அக்கா அண்ணா சொல்லயில்லை...
தம்பி தங்கை கூடயில்லை...
தனிமையைப் பார்த்து வெறுப்தேன்.
பறந்துதிரிய எனக்கு சிறகில்லை...
ஆடிப்பாட எனக்கு நட்பில்லை...
என்னை நானே வெறுத்தேன்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

6 கருத்துகள்:

இராஜன் முருகவேல் சொன்னது…

வாழ்த்துகள்! ஏக்கத்தின் துயரம் கவிதையில் பிரதிபலிக்கிறது.
நீங்கள் கவிதை எழுதுவதால் ஒன்றை கூற நினைக்கிறேன். கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.
'ரசித்தேன்' என எழுதியுள்ளீர்கள். பொதுவாக தமிழில் 'ர' எழுத்தில் சொல் ஆரம்பமாகாது. 'இரசித்தேன்' என வருதல் வேண்டும். பெரும்பாலானவர்கள் 'ராஜன், ரவி, ரகசியம், ரசித்தேன்...' எனவே எழுதுகிறார்கள். உண்மையில், 'இராஜன், இரவி, இரகசியம், இரசித்தேன்.. ' என வரும். நன்றி!! :)

இளவழுதி வீரராசன் சொன்னது…

ஆழமான வலிகளை எளிமையான நடையில் சொல்லி உள்ளீர்.
//அக்கா அண்ணா சொல்லயில்லை...
தம்பி தங்கை கூடயில்லை...
தனிமையைப் பார்த்து வெறுப்தேன்.
பறந்துதிரிய எனக்கு சிறகில்லை...
ஆடிப்பாட எனக்கு நட்பில்லை...
என்னை நானே வெறுத்தேன்.//
நாங்கள் இருக்கோமே, அண்ணா என என்னை கூப்பிடு தங்கச்சி. வேறு வார்த்தைகளில் உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை.

நிலாமதி சொன்னது…

உறவுகள் தேடித்திரியும் உறவுக்கு என் வாழ்த்துக்கள். வலி தெரிகிறது...இருக்கும் உறவுகளை அணைத்து.... பாருங்கள் உங்களுக்கே தெரியும் நீ ( நீங்கள்) தனி பறவை அல்ல என்று.

ஈழமகள் சொன்னது…

உங்கள் வருகைக்கு முதல்க்கண்
வாழ்த்துக்கள்....அண்ணா
பிழைகளைச் சுற்றிக் காட்டுவதில்
தப்பில்லை.அதை நான்
திருத்தி அமைத்து விடுகின்றேன்.

ஈழமகள் சொன்னது…

இளவழுதி வீரராசன் அண்ணா.
எனக்கு ஒரு அண்ணனாய் இருப்பதற்கு
மிக்க நன்றி....
உங்கள் வார்த்தையைக் கேட்டவுடன்
பல கவலைகள் என்னை விட்டுப்
போனது போல் இருக்கின்றது.
உங்கள் வருகையை எதிர் பார்க்கும்
உங்கள் தங்கை.

ஈழமகள் சொன்னது…

கவிநிலா அன்ரி.....
குருவி கூடு கட்டும் போது
குதுகலத்துடன் கூடு கட்டுமாம்.
அந்தக் கூட்டை வேட்டையாடுபவன்
பிரித்து எறியும் போது....
குருவி கூச்சலிட்டுக் கத்துமாம்.
அந்த வலி தான்
இன்று என்(ம்) நெஞ்சில்.

Related Posts with Thumbnails