ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலில் விழுந்து விட்டேன்.உரச உரச வருகுது நெருப்பு...
உன்னைப் பார்த்ததும் வருகுது சிரிப்பு...
ஆடை இல்லா மேனியை
ஆளும் சக்தி எனக்கில்லை.


நான்கு சுவர்களின் மத்தியில்
கூட்டம் போட்டு பேசுவோம்.
நீயும் நானும்.. சேரும் காலம்.
வரும்.. வரும்.. வரும்.


காதல் வசனம் பேசமுன்
காமம் பற்றி பேசுவோம்.
வீசும் காற்றை தூது சொல்ல...
பேசும் உயிரைக் கொடுத்திடுவோம்.


காதல் என்ற பூஜை அறையை
காம நூலாய் மாற்றிடுவோம்.
இதய அறையில் குடி கொண்டு...
இரவு இன்றி வாழ்ந்திடுவோம்.


ராகம் கேட்டு பாடமுன்
ராசிப் பலனைப் பார்த்திடுவோம்.
பூசும் மஞ்சள்; கிண்ணத்தில்...
புதிய உலகம் படைத்திடுவோம்.


உலகை ஆளும் சக்தி எல்லாம்
உனக்கும் எனக்கும் பாதி பாதி.
உள்ளம் கவர்ந்த காதலனாய்...
காலமெல்லாம் நீ வேண்டும்.


என்னுயிரை எடுத்து தந்துவிட்டேன்
எனக்கு நீ... தான் நீதிபதி.
காதல் என்னும் சின்னத்தில்...
இருவர் நாமம் பதியட்டும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

3 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

ஈழமகள் சொன்னது…

அண்ணாமலையான் அண்ணா
என் முயற்சியைப் பாராட்டியமைக்கு
மிக்க நன்றி அண்ணா.

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) சொன்னது…

அருமை

Related Posts with Thumbnails