ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

பூட்டிய என்னிதயம் பேசுது...!



உன்னைப் பார்த்ததும்...
பூட்டிய என்னிதயம் பேசுது...
வா... வா... வா...
என்னிதயத்தின் சாவி...
உன்னிடம் என்று சொல்லுது...
தா... தா... தா...
அன்பே வா...வா...வா...
அழ‌கே தா...தா...தா...!!!


இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!!


நிலவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
நேரம் கிடைத்தால்...
சுற்றிப் பார்த்திடுவோம்.
பாவை உன் ராகம்...
காற்றில் மோதி
பூமியை அடையும்...!!!


படகில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
படரும் பனிக்குளிரில்...
நாம் சேர்ந்திடுவோம்.
விலகும் நம் வார்த்தை...
தனிமை தேடி
காதல் புரியும்...!!!


வானில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
வானவில் கொண்டு...நம்
காதல்கவி வளர்த்திடுவோம்
கொட்டும் மழையில்...
சிதறிய கவித்துளிகள்
தேனாறாய் பாயும்...!!!


பூவில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
பூவோடு பூவாய்...
பூஜையறை சென்றிடுவோம்.
மெளனம் காத்து...
வரத்தை வேண்டினால்
வாழ்க்கை சிறக்கும்...!!!


என் இதய‌த்தில் ஒரு நாள்...
வாழ்ந்து விடு.
என்னைப் பிடித்ததா என்று...
இதயத்தைக் கேட்டு விடு.
உதிரமும் சரீரமும்
சேர்ந்தே சொல்லும்
உன்னைப் பிடிக்கும்...!!!


உன் இதயத்தில் பல நாள்...
வாழ்ந்து விட்டேன்.
பிடித்திருக்கு உன்னை விட்டுப்...
போக‌மாட்டேன்.
வில‌கும் நேர‌ம் வ‌ந்தால்...
ம‌ர‌ண‌ப் பாதையில்
என் கால்கள் செல்லும்...!!!


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.

































6 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

கவிதை வரிகள் நன்று.........தொடருங்கள்.

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

நல்லா எழுதுறீங்க.....!

ஈழமகள் சொன்னது…

நன்றி நிலா அன்ரி.

ஈழமகள் சொன்னது…

பிரியமுடன் வசந்த்.......
பிரியாமல் எம் நட்பைத் தொடர்வோம்.
வாழ்த்துக்கள்.

Pinnai Ilavazhuthi சொன்னது…

படகில் ஒரு நாள்...
வாழ்ந்திடுவோம்.
படரும் பனிக்குளிரில்...
நாம் சேர்ந்திடுவோம்.
விலகும் நம் வார்த்தை...
தனிமை தேடி
காதல் புரியும்...!!!

விலகும் வார்த்தை கூட காதல் செய்யும் வித்தையை எங்கிருந்து கற்றீர்கள். நன்று.

//இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!//

கடைசி இரு வரிகளின் அர்த்தம் விளங்கவில்லை.

மேலும்,
இருவரும் சேர்ந்து வாழ்ந்திடுவோம் என கூறிவிட்டு இறுதியாக ஒருவரின் ஆசையாக முடித்திருப்பது, சரியா என தெரியவில்லை. என் கருத்து, " "பூவில் ஒரு நாள் வாழ்ந்திடுவோம்" என்ற பாரா உடன் நிறுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

ஈழமகள் சொன்னது…

//இதயத்தில் பல வகை...
அறை உண்டு.
உனக்கும் எனக்கும்...
எது நன்று.
சொன்னால்...
பூவின் அழங்காரம்
பூவே உனக்காய்...!!//

கடைசி இரு வரிகளின் அர்த்தம் விளங்கவில்லை.

இதயத்தில் எந்த அறை
காதலிக்குப் பிடித்ததோ....
அந்த அறையில் தான்
பூவின் அழங்காரம்.
இன்று அவர்களுக்கு முதலிரவு.
நண்பா.lol

Related Posts with Thumbnails