ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மோதலால் வந்த காதல்காற்றோடு அலை மோதிக் காதல்.
நற்பண்போடு சொல் மோதிக் காதல்.
கவியோடு பொய் மோதிக் காதல்.
என் விழியோடு நீ மோதிக் காதல்.


நிலவோடு முகில் மோதிக் காதல்.
நீள் நதியோடு கடல் மோதிக் காதல்.
உறவோடு உடல் மோதிக் காதல்.
என் உயிரோடு நீ மோதிக் காதல்.


பாவோடு இசை மோதிக் காதல்.
பார்க்கும் திசையோடு விசை மோதிக் காதல்.
ப+வோடு மணம் மோதிக் காதல்.
என் மனதோடு நீ மோதிக் காதல்.


தாயோடு சே மோதிக் காதல்.
தாய் மண்ணோடு மொழி மோதிக் காதல்.
தேனோடு தமிழ் மோதிக் காதல்.
என் கவியோடு நீ மோதிக் காதல்.


ஒளியோடு இருள் மோதிக் காதல்.
ஓடும் படகோடு நீர் மோதிக் காதல்.
கலையோடு கதை மோதிக் காதல்.
என் நிணைவோடு நீ மோதிக் காதல்.


வானோடு வளி மோதிக் காதல்.
வானவில்லோடு நிறம் மோதிக் காதல்.
மதியோடு மதன் மோதிக் காதல்.
என் விதியோடு நீ மோதிக் காதல்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.2 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

அழகான கவி மழை பொழியக் கண்டேன் . பொழியுங்கள் நனைய காத்திருக்கிறேன். பாராடுக்கள்.
உங்களுக்குள் திறமை இருக்கிறது வெளிக்கொணருங்கள்.

நிலாமதி சொன்னது…

சொல் சரிபார்ப்பு..........word verification . நீக்கி விடுங்கள். மேலும் பலர் இணைய வசதி. இல்லையென்றால் அது இன்னொரு வேலையாக கருதுவார்கள்.

Related Posts with Thumbnails