ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சாட்சி இல்லை...!கருவறையில் இருந்தபடி
தாய் மண்ணை சுவாசித்தேன்.
தொல்லைகள் தொடர்ந்தது
கருவறையில்...
சொந்த அன்னையை இழந்தது
இதுவரையில்....


வானமும் சாட்சி இல்லை... இந்த‌
பூமியும் சாட்சி இல்லை.
பத்து மாதம்....
கருவறை கூட
எனக்கு சொந்தம் இல்லை.
எட்டு மாத‌த்...தால்
எட்டிப் பார்த்தேன்.
என் தாய் கண் திறக்கவில்லை


வீடும் சாட்சி இல்லை....இருந்த‌
விடுதியும் சாட்சி இல்லை.
தேடிப் பார்த்த....
உற‌வு கூட
என‌க்கு சொந்த‌ம் இல்லை.
ஏழை என்னை
க‌ட்டிக் காக்க‌..
யாரும் முன் வ‌ர‌வில்லை.


உதிர‌மும் சாட்சி இல்லை_என்
உருவ‌மும் சாட்சி இல்லை
ப‌டிக்க‌ப் போக‌ பாதை இல்லை
பார்த்துப் பேச‌ யாருமில்லை.
முற்க‌ம்பி ந‌டுவே
முடிய‌ப் போகுது
என் போன்ற‌ ம‌க‌வின் வாழ்க்கை.


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.5 கருத்துகள்:

கவிக்கிழவன் சொன்னது…

நெஞ்சு வலிக்கிறது

கவிக்கிழவன் சொன்னது…

நெஞ்சு வலிக்கிறது

ஈழமகள் சொன்னது…

தமிழனாய்ப் பிறந்ததால்...
நெஞ்சு வலிக்கின்றது.
தமிழீழத்தின் இதயபூமி
சுடுகாடாய்ப் போனதாலும்...
நெஞ்சு வலிக்கின்றது கவிநண்பா.

இளவழுதி வீரராசன் சொன்னது…

//சொந்த அன்னையை இழந்தது
இதுவறையில்....// Sister, I have a small doubt in this line, is any spelling mistake? i haven't any words to say... but we are there with you always.........
brother
ilavazhuthi V

ஈழமகள் சொன்னது…

மன்னிக்கவேண்டும்......நண்பா.
எழுத்துப் பிழைகள் உள்ளதால்..
இப்போதே திருத்தி விடுகின்றேன்.
நன்றி....
பிழைகள் இருந்தால்....
தயவு செய்து தகவல் தரவும்.

Related Posts with Thumbnails