ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

விதைக்கப் பட்ட உள்ளங்கள்....!
ஆயிரம் கண்கள் பார்வையிலே.
உந்தன் உயிர்கள் போகையிலே.
கண்ணீர் தரையில் ஓடுகையில்.
ஓவென்று அழும் சத்தம் - எம்
நெஞ்சைப் பிளக்கிறதே...!


நாட்டின் நலத்தை
நாம் அறியவில்லை.
நால்வர் சேர்ந்து தூக்கும் போது
நாடே போற்றுதே............!


வீட்டுக்கொருவர் கேட்ட போது
வீரம் வரவில்லையே.
வீதி வழியே சாகும் போது
விரக்தி வரவில்லையே...!


காட்டிக் கொடுக்கும் பகைவர் கூட்டம்
நாட்டில் நிரம்பி வழியுதே.
கடல் கடந்து கொண்டுவந்த
ஏவுகணையை கையாள முடியவில்லையே...!


காலதேவன் வந்த போது
கைகள் சோரவில்லையே.
கடல் அன்னை துணை கொண்டு
களமிறங்கி தோல்வி அடையவில்லையே...!


தனை மாய்த்து எமைக் காத்த
புலிவீரர் இவ்வுலகில் இல்லையே.
புதுயுகம் படைக்கப்...
புறப்பட்ட வீரர் நாமில்லையே...!


அது நானில்லையே......
அது நாமில்லையே.....
அது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

1 கருத்துகள்:

இளவழுதி வீரராசன் சொன்னது…

//நால்வர் சேர்ந்து தூக்கும் போது
நாடே போற்றுதே............!//
//புதுயுகம் படைக்கப்...
புறப்பட்ட வீரர் நாமில்லையே...!//
அருமையான படைப்பு!... ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் உள்ள ஏக்கம். எழுதுங்கள் தோழி

Related Posts with Thumbnails