ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிறைக்கம்பிகள் பேசினால்.....!


சிகரத்தை எட்டிப் பார்க்கும்
உனக்கு...
சிறைக் கம்பிகள் எண்ணுவது
ஏனடா...!


சிங்களக் காடையர்
வீசிய வலையில்
சிக்கிய தமிழ்த் தோழா....
உன்னைப் பார்த்ததும்
வடிகின்றது கண்ணீர்.


என்னைப் பற்றுவதால்....
உனக்குப் பெருமையல்ல.
உன்னை எனக்குள் அனைப்பதால்....
அளவில்லா ஆனந்தம்.


காரணம் மொழிகின்றேன் கேளடா தமிழா...
நீ.... கஞ்சா கடத்தவில்லை.
கொலை கற்பழிப்பு செய்யவில்லை.
ஆள்க் கடத்தல் கடத்தவில்லை.


தமிழுக்காய் வாதாடி இருப்பாய்...
தாய் மண்ணிற்காய் போராடி இருப்பாய்.
தமிழ் உறவுகளுக்காய்....
உன்னையே வெடிகுண்டாய் மாற்றி இருப்பாய்.


இது தான் நீ... செய்த குற்றமா...?
இல்லை இல்லை
உன்னைப் பார்த்துத் திருந்தட்டும்
உண்மைக் குற்றவாளிகள் தோழா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா

1 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

ஒவ்வொரு விடுதலை வீரனும் பட்ட துயர் கொஞ்சமல்ல.
ஒரு நாள் விடியும். நம்பியிருப்போம்.

Related Posts with Thumbnails