ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

காலமெல்லாம் உன் நிழலில்...!


காதலால் வரும் குருதி
கசிந்து இந்த மண் சிவக்குதடி...
உன்னைப் பார்த்ததால்
வருகின்ற தனிமை
கல்லறை தேடுதடி...!


வேகமாய் வந்த வார்த்தை
வேதனையை தந்ததடி...
வேடிக்கையாய் பார்த்தேன்
மணப் பந்தல் வாசலடி.


பாரமாய் இருந்த நெஞ்சில்
கடைப்பால் வார்த்து விட்டாயடி...
பாவை உன்னை கோலமகளாய்ப்
பார்த்ததும் குருடாய்ப் போனதடி.


பாசமே புரியாத உலகம்
வேசம் போட்டு கைகுலுக்குதடி...
ரோசமே இல்லா எனக்கு
உன்னைப் பார்த்ததும் பாசம் கொட்டுதடி.


உன்னில் வரும் நினைவில்
என் உறக்கம் போனதடி...
உன்னைத் தாங்கி - அந்த
விமானம் பறந்து போனதடி.


பணத்தால் வந்த வாழ்க்கை - என்
குணத்தால் ஈடாகவில்லையடி...
பாசத்தை பிரித்துப் பார்க்க
முடியாப் பாவியாய்ப் போனேனடி.


மனமும்... மனச்சாட்சியும்
பேசுகின்ற நாட்கள் அதிகமடி...
உதடும்... உணர்வும்
ஊமையாய்ப் பல காலமடி.


உறவாய் இருந்த உலகம்
உருகி மழையாய்க் கொட்டுதடி...
அகவை அகன்று போக‌
அயலார் அரட்டை அதிகமடி.


வானில் பறக்கும் பறவை கூட‌
விமானமாய்த் தோன்றுதடி...
நீ... வருவாய் - உனை
வாழ்த்த மனசு துடிக்குதடி.


நீ... கோலம் போட்ட கோவில்
தினமும் காலை போவேனடி...
உன் பேர் சொல்வதற்காய்
தினமும் அரிச்சனை செய்வேனடி.


காலை மலர்ந்த போது
கண்கள் துடிக்குதடி...
சாலை நகர்ந்த போது
சந்தி சிரிக்குதடி.


காது கொடுத்த போது உன்
பெயர் காற்றில் பறந்ததடி...
விதவை என்ற பேரில்
கைவளையல் நொறுங்குதடி.


எம் காதல் இன்றுவரை
கருவறையாய் உணர்ந்தேனடி...
காலமெல்லாம் உன் நிழலில்
காதலனாய்...கணவனாய்...குடிகொள்வேனடி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails