ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

என்ன கொடுமை இங்கே - தமிழா

என்ன கொடுமை இங்கே - தமிழா
ஏன் இந்தக் கொடுமை இங்கே

சொல்லி வைத்துச் சாகவில்லை.
சொந்தம் சுகம் பார்க்கவில்லை.
போற இடத்தில் குடிமனைகள். - அதில்
போகுது எங்கள் உயிர்கள்.....
போகுது எங்கள் உயிர்கள்.

சின்னஞ் சிறு கைக்குழந்தைகள்.
சின்னா பின்னமாய்..... சிதறிய தசைகள்.
முத்து முத்து ஆசைகள்.....
முகவரி தெரியாமல் போகின்றது.....
முகவரி தெரியாமல் போகின்றது.

சொந்த வீடும் இல்லை.....
சொல்ல உறவும் இல்லை.
சோகக்கதை கேட்க.....
யாருக்கும் நேரம் இல்லை - இங்கே
யாருக்கும் நேரம் இல்லை.

இன்று பார்த்த முகங்கள் எல்லாம்.....
நாளை பார்க்க முடியவில்லை.
நாங்கள் கண்ட கனாக்கள் எல்லாம்.
கரைந்து போகுது கண்ணீரிலே.....
கரைந்து போகுது கண்ணீரிலே.

ஆண்டவன் இங்கு இல்லை.....
அகதிகள் ஆபத்தில் இங்கு.
சிரிப்புச் சத்தம் கேட்பதில்லை - இங்கு
செல்கள் சத்தம் அலை அலையாய்.....
செல்கள் சத்தம் அலை அலையாய்.

வீடு கூட எரிகிறது.....
வீட்டில் உள்ள உயிர்கள் கருகுகிறது.
நாளை வரும் செய்திகளில்
யார் உயிர் போனது தெரிகிறது.
யார் உயிர் போனது தெரிகிறது.

சொத்து சுகம் தேவையில்லை.....
சொர்ப்பனமும் தேவையில்லை.
சொந்த பூமி நமக்கு இருந்தால்.....
வயிற்றுப்பசி போய் விடுமே.
வயிற்றுப்பசி போய் விடுமே.

கூடு மட்டும் போதும் எமக்கு.
கூடி இருந்து வாழ்வதற்கு.....
கண்ட துன்பம் போதும் எமக்கு.
நாமும் வருகிறோம் போராடுவதற்கு...... - இன்றே
நாமும் வருகிறோம் போராடுவதற்கு...!!!

ஈழமகள் உங்கள் அபிசேகா.
0 கருத்துகள்:

Related Posts with Thumbnails