ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 26 டிசம்பர், 2009

புத்தாண்டு பிறக்குதடி...!


சித்திரை நிலவில்...
செதுக்கிய ஓவியம்.
தேசத்தின் நிழலில்...
படருது காவியம்.
புத்துயிர் மலர...
புத்தாண்டு பிறக்குதடி...!


சித்திரை சிறக்க...
செவ்விதழ் சிவக்க.
தேன் சொட்டும் தமிழ்...
தேசமெல்லாம் தழுவ.
எம் தேசியக் கொடி...
எம் இதயத்தில் பறக்குதடி...!


செம்பருத்தி சேலை கட்டி...
தலை நிறைய பூ முடிந்து.
கொலுசுச் சத்த ஓசையுடன்...
கோவிலுக்குச் சென்று வாறாளே.
பெண் ஒருத்தி..........!


இரட்டை மாட்டு வண்டியிலே...
இளநீர் ஏற்றிப் போகையிலே.
மாட்டுச் சலங்கை ஓடையுடன்...
பாட்டுப் பாடிப் போறானே.
மாட்டுவண்டிக் காரன் ஒருவன்...!


பட்டாம் பூச்சியாய்...
கண்கள் படபடக்க.
தந்தி மூலம் தபால்க்காரன்...
காதலை வெளிப்படுத்த.
தன்னை அறியாமல் தேன் நிலவில்...
நுழைகிறாள் பருவமங்கை ஒருத்தி.......!


படிக்கும் வயதில் விளையாட்டு...
விளையாடும் வயதில் ஒரு தலைக்காதல்.
கடற்கரை ஓரம் கவிதை மழை...
கண்டதெல்லாம் புலம்புவான்.
நல்ல கவிஞனாய் மாறிடுவான்.
கால் போன போக்கில்...
அவன் பயணம் தொடரும்.


சந்தித்தான் தன் காதலியை...
மாற்றான் மனைவியாய்.
சற்று சிந்தித்தான்... - தன்
தாய் தந்தையை.
நேற்று முதல் இவன் கவிதை...
காதலாய்க் கசிந்தது.
இன்று முதல் இவன் கவிதை...
புரட்சியாய் வெடித்தது.
நாளை முதல் இவன் பயணம்...
நல்லபடி அமையும்............................!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails