தாய் மடியில்....
தலை சாயும்.
தலைமகனே
நீ.... எங்கே...?
கண்களிலே....
நீர் சுமக்கும்.
தாய் இங்கே
பார்.... மகனே....!
உறவிருந்தும்....
மகிழ்வில்லை.
நினைவிருந்தும்
உன்... உயிரில்லை....!
உணவிருந்தும்....
ருசி இல்லை.
உன் நினைவால்
பசி.... இல்லை....!
பார்க்கும் இடமெல்லாம்....
உன் உருவம்.
நிழலாய் தோன்றி
மறைகின்றதே....!
யார் செய்த பாவம்....
என் வீட்டில் சோகம்.
நீ.... இல்லா வாசம்
நிகர்.... இல்லை சொந்தம்....!
உலகம் போற்றும்....
பிரமனே.
என் சேயைப்
பிரிக்க.... வந்தாயோ....!
பால் கொடுத்த....
முலைகள் இரண்டும்.
பதறித் துடிக்கிறது
நீ.... பாராயோ....!
கருவறை உனக்காய்....
காத்திருக்கும் - நான்
கல்லறை போகமுன்.
வா..... மகனே.....வா....!
ஈழமகள் உங்கள் அபிசேகா.
தமிழாசான் பதிவேடு விருது 2019
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக