ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 20 மார்ச், 2010

அன்னமே...

அன்னமே...
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே.


செல்லமே...
உன் மழலை
தென்றலாய் என்
நெஞ்சிலே.


வானமே...
உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்
மூடிக்கொள்.


முத்து முத்தாய்
முத்தம் - நீ...
முகத்தில் தந்தாய்
நித்தம்.


தித்திக்க தித்திக்க...
நீ... பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.


சொன்ன சொல்லை...
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட
கவி பாடும்.


பஞ்சு போன்ற பாதத்தில்...
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்.


தங்க நிலவே...
இன்று போல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

4 கருத்துகள்:

Madurai Saravanan சொன்னது…

கவிதை என்னை முத்தமிடுகிறது. வாழ்த்துக்கள்

aambalsamkannan சொன்னது…

நல்ல கவிதை சகோதரி.

ஈழமகள் சொன்னது…

மதுரை சரவணன் அண்ணா....
முத்தம் நித்தம் கிடைக்க...
என் கவிப் பயணம் தொடரும் அண்ணா.

ஈழமகள் சொன்னது…

aambalsamkannan.....
நன்றிகள் பல நவில்கின்றேன்...
சிந்தனையுடன் என் கவிதைகுள்
வந்தமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.

Related Posts with Thumbnails