ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 25 ஜூலை, 2010

கனத்த நாள் கருப்பு யூலை...!

கருப்பு யூலை....அன்று
கனத்த நாள்.
கருப்பு யூலை....இன்று
கண்ணீர் கசிந்த நாள்.
கருப்பு யூலை...என்றும்
கரிய நாள்...!

நினைவுகள் எம்மோடு...
நிலைத்து நிற்கின்றது.
எம் உறவுகள்....
இவ்வுலகை விட்டு - 27
ஆண்டுகள் ஆகின்றது.
தாங்குமா... எம்மிதயம்
தூங்குமா.... எம்மீழம்.!

சிறி என்ற சின்னத்தை
தாரிலே கொதிக்கவைத்து
மார்பிலே அச்சிட்டதை...
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பூவைகள் நாம்.!

காடையர் கஞ்சா...அபின்..
குடித்துவிட்டு.
காமத்தின் வேகத்தை...
மிருகத்தனமாய்க் கையாண்டதை
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பாவைகள் நாம்.!

திருகோணமலை நகரில்...
செல்வநாயகபுரத்தில்...
ரயர்களுக்கு மத்தியில்...
செட்டியார் என்ற வயதானவரை
உயிருடன் கொழுத்தியதை...
மறக்கத் தான் முடியுமா
ஈழத்துத் தமிழர் நாம்.!

கொழும்பு மா நகரில்...
கொழுத்தும் வெய்யிலில்...
வேலை விட்டு வந்தவர்களை
வீடு புகுந்து கண்டம் துண்டமாய்...
வெட்டிச் சரித்ததை
மறக்கத் தான் முடியுமா...
உலகத் தமிழர் நாம்.!

வெலிக்கடைச் சிறைக்குள்...
சிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்
சித்திரவதை என்ற போர்வையில்
சிந்திய இரத்தைக்கரை
வதைச்சுவரில் இன்றும்..
காவியமாய்த் திகழ்கின்றதை...
மறக்கத் தாம் முடியுமா...
ஒவ்வொரு மானத்தமிழனும்.!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

பால் [Paul] சொன்னது…

விழிநீர் வரவழைக்கின்றன இக்கவிதையின் வரிகள்.. :-(

ஈழமகள் சொன்னது…

நன்றி அண்ணா......

Related Posts with Thumbnails