ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா... காட்டிக் கொடுக்காதே தமிழா...
காட்டிக் கொடுக்காதே.
கூட்டிக் கொடுக்காதே மானத் தமிழா...
கூட்டிக் கொடுக்காதே.
விட்டுக் கொடுக்காதே தமிழை...
விட்டுக் கொடுக்காதே...!


ஈழம் எங்கள் நாடு.
ஈன்றாள் அன்னை உன்னை.
ஏட்டில் உள்ள செய்தி
எட்டியது வானில்.
ஈழமண்ணில் குருதி
வசை பாடுது எதிரி.!


மண்ணுக்கு ஆசைப் பட்டால்...
மன்னிப்பு கிடைப்பதில்லை
பொன்னுக்கு ஆசைப் பட்டால்...
பெண்ணுக்கு வாழ்க்கை இல்லை.
சொத்துக்கு அடிமைப் பட்டால்...
சொந்தங்கள் தெரிவதில்லை.!


தமிழனாய் நீ பிறந்து...
தமிழ் ஈழத்தை அழிப்பதினால்.
என்ன சுகம் கண்டாய் இன்று வரை.
தமிழர் முன்...- உன்னால்
தலை நிமிர முடியுமா....?
தன்னந் தனியாய்...- உன்னால்
வெளியே போக முடியுமா....?


தலை எழுத்தை மாற்றி விட்டாய்.
தரித்திரத்தை ஏட்டில் விட்டாய்
திரும்பிப் பார்.... உன் பாதச் சுவடுதனை.
கை விரல்கள் அத்தையும்
அழுக்காய் போனதுவோ....
சாவு மணியை கையில் எடுத்தாய்.
சாகும் தேதி தலைவர் தருவார்.!


எட்டப்பன் கூட்டத்தை...
எட்டி உதைக்கும் தமிழீழம்
எந்த நாட்டிலும்......
கிடைக்காது அடைக்கலம்.
ஏவி விட்டால்.....
திரும்பி வரவேண்டும் தமிழீழம்.!


மறத்தமிழனாய் மாற விரும்பினால்...
பகைவனைக் கொன்று விட்டு...
நீயும் மாண்டு விடு.
மறு ஜென்மம் ஒன்றிருந்தால்...
மறு படியும் பிறந்து விடு.
தமிழ் மண்ணைக் காக்கும்
மானத் தமிழனாய் மாறிவிடு.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

8 கருத்துகள்:

thana சொன்னது…

காட்டிக்கொடுப்போர் இன்றுமட்டும் அல்ல தொன்றுதொட்டே தமிழுக்கு உள்ளசாபக்கேடு
நன்றாய் சொன்னிர்கள் நன்றி மகளே

நிலாமதி சொன்னது…

துணிச்சலான பெண் ஈழமகளுக்கு வாழ்த்துக்கள்......பேனாவும்.(தட்டெழுதும் விரல்களும்)
........ஒரு ஆயுதம். .தொடர்க உங்கள் பணி......

ஈழமகள் சொன்னது…

Thana annaa.........
உண்மை தான்....
தமிழீழம் கிடைத்து - அதில்
தலைவைத்துத் தூங்கும் நேரத்தை
கெடுத்துவிட்டு.....
அரக்கர் படைக்கும்....
கூலிப்படைக்கும் வால் பிடிக்கும்
இவர்களுக்கு தூக்கமே இனி வராது.

ஈழமகள் சொன்னது…

நிலாமதி அக்கா.........
உங்களைப் போன்ற பலரின்
ஆசிர்வாதம் இருக்கும் வரை
நிழலாய் தொடரும் "கவிமழை"

இளவழுதி வீரராசன் சொன்னது…

முதல் வரியில் எழுத்து பிழை உள்ளது தோழி, எட்டப்பன்கள் நமக்கு புதிதல்லவே, மீண்டு வருவோம், மீண்டும் வெல்வோம். நல்ல ஆக்கங்களை தொடர்ந்து தாருங்கள்.
http://pinnaiveera.blogspot.com/

இளவழுதி வீரராசன் சொன்னது…

ஈழமாகட்டும் காதலாகட்டும் எல்லா படைப்புகளும் அருமை தங்கையே!..
ஈழத்தை பற்றி எழுதும் போது நெருப்பாய் உன் எழுத்துக்கள்.. நம் புலிகளின் மற்றொரு ஆயுதமாய்
காதலை பற்றி எழுதும் போது தென்றலாய் வருடும் உன் எழுத்துக்கள்.. நம் இனத்தின் மற்றொரு அகநாநூறாய்
வாழ்த்துக்கள் தங்கையே!.. மென்மேலும் தொடரட்டும் உன் எழுத்து பனி...
இளவழுதி (http://pinnaiveera.blogspot.com/)

ஈழமகள் சொன்னது…

இளவழுதி வீரராசன்...... நண்பா.....உங்கள் கவிப்பூங்காவிற்குள்
நானும் காலடி எடுத்து வைத்தேன்.
அங்கு கண்ட பலவகைக் கவிப்பூங்கள்
என் மனதிற்குப் பிடித்துவிட்டது.
நான் எழுதுவதிலும் பார்க்க.....
ரசிக்கும் தன்மை தான் அதிகம்.
நீங்களும் ஒரு கவிஞன் ஆகிவிட்டீர்கள்
என்பது மட்டும் புரிகின்றது.
வாழ்த்துக்கள் மென்மேலும் வளர....
அதுமட்டுமல்ல......
நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தாலும்...
ஈழத்தமிழரின் வேதனைகள் புரிகின்றது.
என்பதை நினைக்க மகிழ்ச்சியாய் இருக்கின்றது.
அதற்கு முதற் கண் நன்றி நண்பா.

திருமாறன் சொன்னது…

ஒன்றை சிந்தித்துப் பார்த்தேன்,
உலகிலே தமிழனைப் போல
நல்லவனும் இல்லை
கெட்டவனும் இல்லை
அத்தனை தமிழ் வேந்தனின் அழிவுக்குப் பின்னும்
நிச்சயம் ஒரு தமிழன் தான் இருக்கிறான்.....

முத்தான தமிழில் உங்கள் கவிதைகள் தொடர்க.......

Related Posts with Thumbnails