ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 10 ஜனவரி, 2010

நெஞ்சே... வழி விடு.



பாதையோரம் உந்தன்
காதல் போக.....
அந்தப் பாதையோரம்
எந்தன் கால்கள் போகும்.
நெஞ்சே... வழி விடு.
நான்தான்... விடை கொடு.


மெளனம் என்னைக் கொல்லுதே...
என்மனமே உன்னை நாடுதே.
இரவில் காணும் கனவிலே...
அடிமையாகிறேன் உன் பேச்சிலே.!


கண்கள் திறந்தால் உன் நினைவுகள்...
நிழலாய்த் தோன்றி மறையுதே.
தினமும் காலை தவிக்கிறேன்...
வரமாய் உன்னை அடையவே.!


கண்கள் பார்க்குது கண்ணாடி _ அதில்
தெரியுது உன்விம்பம் முன்னாடி.
புன்னகை தவழும் பூவே _ உன்னைப்
புரிஞ்சுக்க முடியல என் மனசே.!


என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.
தவம் இருந்தேன் உனையடைய...
தரிசனமாய் வந்தாய் என்னருகே.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

15 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…

//என் இதயத்தைத் தேடி வந்தவளே...
ஏன் இன்னும் தயக்கம் புரியவில்லே.//
பலர் இப்படி தான் தயங்கி தயங்கி வாழ்வை தொலைத்து விடுகின்றனர். வாழ்த்துக்கள்

Priya சொன்னது…

வாவ்... அழகான கவிதைகள்!
வாழ்த்துக்கள்!

கலையரசன் சொன்னது…

சூப்பர்..! நல்லா புரியும்படி எழுதியத்துக்கு..

கலையரசன் சொன்னது…

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

நிலாமதி சொன்னது…

அழகான கவிதை மேலும் படைக்க வாழ்த்துக்கள்.

கும்மாச்சி சொன்னது…

ஆஹா நல்லக் கவிதை, தொடரட்டும் வாழ்த்துக்கள்.

Admin சொன்னது…

அனைத்து நண்பர்களுக்கும்
பொங்கல் வாழ்த்த்துக்கள்

ஈழமகள் சொன்னது…

இளவழுதி வீரராசன்....
இனியாவது திருந்தட்டும் நண்பா...
வாழ்த்துக்கள் தங்கள் வரவிற்கு.

ஈழமகள் சொன்னது…

பிரியா.....
இந்தக் கவிதை வரிகள்....
ஒரு சிறு மாற்றத்துடன்....
பாடலாக வரவிருக்கின்றது.
"கவிமழை" யில் நனைய வந்தமைக்கு...
உங்களுக்கும் என் நன்றிகள்.

ஈழமகள் சொன்னது…

கலையரசன்...........
காதலைத் தொட்டவர்கள்
புரியும் வலியிது.
உங்கள் காதலும் இப்படியா..?lol
வாழ்த்துக்கள் வந்து.....
கருத்துரை வரைந்தமைக்கு.

ஈழமகள் சொன்னது…

கவி நிலா.......
நிலவிற்கு ஒரு நிலா-எம்
உறவிற்கு ஒரு நிலா.
அது நீ... தான் கவிநிலா.
உங்கள் பாரட்டால்....
படருகின்றது.... தொடருகின்றது...
என் "கவிமழை"
வாழ்த்துக்கள் கோடி.

ஈழமகள் சொன்னது…

கும்மாச்சி....
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
பலரின் ஆசியுடன் ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து கருத்துரையுங்கள்.
அந்தப் புத்துணர்வுடனேயே நானும்
மரநிழலாய் மாறிடுவேன்.

ஈழமகள் சொன்னது…

சந்ரு............
நட்பின் சிகரமே....
நான் வளர்ந்தால் போதும்
என்று நினைக்கும் உலகில்.
பலரும் வளரவேண்டும்....
அகிலம் போற்ற வேண்டும் என்ற
உணர்வு உங்களுக்கு இருப்பதை
நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
மேலும் உங்கள் பணி தொடரவும்...
என் வாழ்த்துக்கள்...
உங்கள் அனைவருக்கும்
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Pinnai Ilavazhuthi சொன்னது…

//இளவழுதி வீரராசன்....
இனியாவது திருந்தட்டும் நண்பா...
வாழ்த்துக்கள் தங்கள் வரவிற்கு//

என்ன தோழி என்னை திட்டுகின்றிர்களா இல்லை காதலில் தயங்கியவர்களை திட்டுகின்றிர்களா? சற்று விளக்கமளியுங்கள்.
நான் "காதல் காற்றை போல... அதனால் தான் சுவாசிக்கிறேன்..." என http://pinnaiveera.blogspot.com/ என்ற ஒரு வலைத்தளம் வைத்துள்ளேன். படியுங்கள். காதலை நான் போற்றுவது உங்களுக்கும் தெரியட்டும். உங்களின் கருத்துக்களை எதிர்நோக்கி,
இளவழுதி வீரராசன், சென்னை.
http://pinnaiveera.blogspot.com/

ஈழமகள் சொன்னது…

இளவழுதி வீரராசன்.
நண்பா... நான் உங்களைத் திட்டுவேனா.....
காதலுக்குக் கைகொடுக்கும்
ஜீவன் அல்லவா நீங்கள்.
காதலில் தயங்கியவர்களைத்
திட்டித் தீர்க்கின்றேன்.....

Related Posts with Thumbnails